Ad Widget

வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (சனிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் தலைமையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிடுகையில்,

“நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நேர்முகத்தேர்வுகளின் அடிப்படையில் 2017ம் ஆண்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய பட்டதாரிகள் உட்பட தகுதியுள்ள சகலருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தவகையில் 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு விசேட தீர்மானம் ஒன்றின் மூலமாக வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

மேலும் இவ்விடயங்களை வலியுறுத்தி, எதிர்வரும் 8 ஆம் திகதி கொழும்பில் ஒன்றிணைந்த பட்டதாரிகளினால் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளோம்” எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிட்டனர்.

Related Posts