- Wednesday
- May 13th, 2026
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஆம் திகதியை இன அழிப்பு நாளாகவும், தமிழ் தேசியத்தின் துக்க நாளாகவும் வடக்கு மாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண சபையின் 122வது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மேற்படி பிரகடனத்திற்கான பிரேரணையை முன்வைத்தார். குறித்த பிரேரணையை மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம்...
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய, எரிபொருளின் விலையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் நிகழும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அதன்படி எரிபொருள் விலை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடவோ அல்லது குறையவோ முடியும் என்றும் தெரிவித்தார்....
தமிழர்களுக்குரிய அரசியல், பொருளாதார, கலாசார உரிமைகளை எவராலும் புதைத்துவிட முடியாது என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம் பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், “குறுகில அரசியல் நோக்கத்துக்கா , அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவும்...
அரசாங்கம் முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் மானியம் வழங்க வேண்டும். இல்லாவிடின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையாக உள்ளது. இதனால் அரசாங்கம் எரிபொருள் மானியம் வழங்க முன்வர வேண்டுமென அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு அரசாங்கம் எரிபொருள்...
மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகின்றது. இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற...
கனியவள கூட்டுத்தாபன எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த கூட்டுத்தாபனத்தில் நிலவும் நிதிநெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய... 92 பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபா, 95 பெற்றோல் ஒரு...
நீர்வேலியில் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது. நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் கடந்த திங்கட்கிழமை இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 23...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று (09.05.2018) இரணைதீவு மக்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியதுடன் அம்மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தேவாலயத்திலிருந்து மக்கள் குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் பாதையும் துப்பரவு செய்து கொடுக்கப்பட்டள்ளது. இரணைதீவு மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் குடியேறியதையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கடந்தவாரம்...
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பருப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரையும் பிரிக்கப்பட்ட ஒரு கிலோ கிராம் பருப்பிற்கு 3 ரூபாவாக காணப்பட்டது. அது 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பிரிக்கப்படாத ஒரு கிலோ கிராம் பருப்பிற்கான வரி 7 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த புதிய வரி நேற்று முதல் ஆறு மாதங்களுக்கு அமுலில் இருக்குமென, நிதி...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் முதன்மைச் சுடரை போரில் உறவுகளை இழந்தவர்கள் சார்பில் ஒருவரே ஏற்றிவைப்பார் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் துளசி தெரிவித்தார். அதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நேற்று (புதன்கிழமை) வடக்கு மாகாணசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் பொது...
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்தில் குடும்பப் பெண் ஒருவருடன் தகாத முறையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தொடருந்து உத்தியோகத்தரை பிணையில் விடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகைதந்த பிரிட்டன் வாழ் தமிழ் குடும்ப பெண்ணொருவர் வவுனியா தொடருந்து நிலையத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தார். இதன்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு மன வருத்தத்தைத் தருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் பங்கேற்று கருத்துக்களை வழங்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு...
யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இவ்கண்காட்சி யாழ்.பல்கலைகழக பௌதீக கல்வி அலகு இயக்குனர் K.கணேசநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இக் கண்காட்சியில் Ultra light Pickup, Solar Powered baby car, Pedal Power car போன்ற...
யாழ் மாநகரசபையினால் புள்ளுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட கட்டடத்தின் சில பகுதிகளை யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சி ஒன்று கைப்பற்றி வைத்திருப்பதாக யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் குறிப்பிட்டுள்ளார். குறித்த கட்டடத்தில் 54 கடைத் தொகுதிகள் இருப்பதாகவும் அவற்றில் பல தொகுதிகளுக்கு கட்டடம் கட்டப்பட்ட காலத்திலிருந்து வாடகை எதுவும் செலுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் அது தொடர்பில் தனக்கு...
யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான கட்டத்தினை வாடகை அறவிடாமல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குனராஜா வழங்கியமையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ந. லோகதயாளன் ஆதார பூர்வமாக ஆவணங்களுடன் சபையில் குற்ற சாட்டை முன் வைத்தார். யாழ்,மாநகர சபையின் இரண்டாம் அமர்வு நேற்றைய தினம் யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில்...
வடக்கு, கிழக்கு பகுதிகளில் விகாரை அமைப்பதை தடை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்ததாக சிங்கள நாள் இதழ் ஒன்றில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட சிங்கள நாள் இதழ் வெளியிட்ட செய்தி முற்றிலும் தவறானது என்றும் இதன் மூலம் பெளத்த சமூகத்தை கோபப்படுத்துவதற்கான முயற்சியாக அது...
இலங்கையில் புகழ் பூத்த இராவணா எல்ல நீர்வீழ்ச்சியை காணவரும் சுற்றுலா பயணிகள், அங்கு குளிக்க வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பண்டாரவளையில் தற்போது நிலவும் அடை மழை காரணமாக ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் குறித்த நீர்வீழ்ச்சியில் ஆபத்தான நிலைமை காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக உள்நாட்டு...
சருமத்தை அழகுப்படுத்த பயன்படுத்தப்படும் பெரும்பாலான கீறிம் வகைகள் உடம்புக்கு பாதிப்பை ஏற்படுத்துவதனால் இந்த கிறீம் வகைகளை ஒழுங்குறுத்தலுக்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைவாக சருமத்தில் பூசப்படும் கிறீம் வகையில் அடங்கியுள்ள மூலப்பொருட்கள் அவற்றை பயன்படுத்த வேண்டிய முறை குறித்த விடயங்கள் அடங்கிய ஆவணமும் அதில் குறிப்பிடப்படும் வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது....
ரயில் இயந்திர பொறியிலாளர்கள் ஒன்றியம் நடத்த தீர்மானித்திருந்த வேலைநிறுத்த போராட்டம், கைவிடப்பட்டுள்ளது. ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு அரசாங்கம் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகள், இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு முன்னதாக நிறைவேற்றப்படுமென உறுதிமொழி வழங்கப்பட்டதையடுத்தே, குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள அரச வைத்திய சாலைகளின் மருத்துவ அதிகாரிகள் சங்கம், 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர். இதன்படி அவர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல், குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக கொடுப்பனவுகள் (புதிய...
Loading posts...
All posts loaded
No more posts
