Ad Widget

முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்படும்: முச்சக்கரவண்டி சங்கம் எச்சரிக்கை

அரசாங்கம் முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் மானியம் வழங்க வேண்டும். இல்லாவிடின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையாக உள்ளது. இதனால் அரசாங்கம் எரிபொருள் மானியம் வழங்க முன்வர வேண்டுமென அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு அரசாங்கம் எரிபொருள் மானியத்தை வழங்க முன்வராவிடின் 1 கிலோ மீற்றருக்கு அறவிடப்படும் 60 ரூபாய் கட்டணத்தை 80 ரூபாயாக அறவிட தீர்மானித்துள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தவகையில் நாட்டிலுள்ள எட்டரை இலட்சம் முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் மானியத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுக்க வேண்டுமெனவும் முச்சக்கரவண்டி சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts