Ad Widget

அழகு சாதனப் பொருட்கள் தொடர்பாக நுகர்வோர் அதிகார சபையின் அறிவித்தல்!

சருமத்தை அழகுப்படுத்த பயன்படுத்தப்படும் பெரும்பாலான கீறிம் வகைகள் உடம்புக்கு பாதிப்பை ஏற்படுத்துவதனால் இந்த கிறீம் வகைகளை ஒழுங்குறுத்தலுக்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக சருமத்தில் பூசப்படும் கிறீம் வகையில் அடங்கியுள்ள மூலப்பொருட்கள் அவற்றை பயன்படுத்த வேண்டிய முறை குறித்த விடயங்கள் அடங்கிய ஆவணமும் அதில் குறிப்பிடப்படும் வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான வர்த்தகமானி அறிவித்தலில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தலைவர் ஹஸித திலகரத்ன கைச்சாத்திட்டுள்ளார். இது இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளது.

சம்பந்தப்பட்ட சட்டத்திற்கு அமைவாக செயல்படுவதற்கு தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்த்தர்களுக்கும் 6 மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.

சருமத்தில் பூசப்படும் சில கீறிம் வகைகள் தரமற்றது என்பது தெரிய வந்துள்ளது.அத்தோடு பயன்படுத்த வேண்டிய அளவு குறிப்பிடப்படாமையினால் சருமத்தில் கூடுதலான கீறிம் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் உடம்புக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

Related Posts