விடுதலைப் புலிகள் சர்ச்சை கருத்து: விஜயகலா – மாவை – அரசாங்க அதிபரிடம் விசாரணை!

விடுதலைப் புலிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், 4 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உற்படுத்தப்பட்டிருந்தார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அகியோரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வந்த பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவினரால் இவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்....

மாணவர்களின் ஆதர்ச புருசர்களாக ஆசிரியர்களே திகழவேண்டும் – ஐங்கரநேசன் ஆதங்கம்

வடக்கில் நிகழுகின்ற குற்றச்செயல்களுக்குத் திரைப்படங்களே காரணம் என்று சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான மத்திய அமைச்சர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்தபோது தெரிவித்திருக்கிறார். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் எமது மாணவர்களில் பெரும்பாலானோர் தங்களது ஆதர்ச நாயகர்களாகத் திரைப்பட நடிகர்களை வரித்துக்கொண்டு அவர்களது நடை, உடை, பாவனையைப் பின்பற்றி வருகிறார்கள் என்பதை நாம்...
Ad Widget

வடமராச்சியில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு: சிவாஜிலிங்கம்

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமையினால் பாரிய பிரச்சனைகள் ஏற்படக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடமராட்சியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள்...

வட்டுக்கோட்டையில் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக தெரிவித்து அக்கல்லூரியின் பழைய மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்திருந்தனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் கல்லூரி வளாகத்துக்கு முன்னால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ‘கல்லூரியில் வியாபாரம் வேண்டாம்’, ‘மாணவர்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்’, ‘கல்லூரியின் மேன்மை பேணப்பட வேண்டும்’ என...

மாநகர முதல்வருக்கு தனி இல்லம் : கோரிக்கையை நிராகரித்த முதலமைச்சர்!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த பொதுக் கூட்டத்தின் மூலம் முதல்வரிற்கான ஓர் வாசல்தலம் அனுமதிக்கப்பட்டபோதிலும், உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் வடக்கு மாகாண முதலமைச்சரினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர முதல்வரிற்கான ஓர் உத்தியோக பூர்வ இல்லம் வாடகைக்கு அமர்த்துவதற்கு கடந்த மாதாந்த அமர்வின் போது முதல்வர் அனுமதியை கோரியிருந்தார். இதனை சபை ஏற்றுக்கொண்டது. இதற்கமைய சுண்டுக்குழிப்...

மனித எச்சங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு சர்வதேச நிபுணத்துவம் தேவை: மாவை

செம்மணி உள்ளிட்ட பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சர்வதேச நிபுணர்கள் நியமிக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது...

யாழில் கொள்ளையர்கள் அட்டகாசம்!

யாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் நடமாடிய கொள்ளையர்கள் பெருமளவான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். யாழ் மற்றும் நல்லூர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்குள் நேற்று (திங்கட்கிழமை) இரவு 8 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் உரிமையாளர்களுக்கு வாள்களை காட்டி மிரட்டி பணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இலக்கத்தகடுகள் அற்ற மூன்று மோட்டார் சைக்கிள்களில்...

யாழ். மாற்று திறனாளிகளுக்கு உதவித் தொகை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

யாழ்.மாவட்டத்திலுள்ள மாற்று திறனாளிகளுக்கு உதவித் தொகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, விஐயகலா மகேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் மாவட்டச் செயலக...

வடக்கில் பெரும்பான்மையினருக்கு நியமனங்கள் வழங்கப்பட கூடாது: சிவாஜிலிங்கம்

யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் புதிதாக பெரும்பான்மையினருக்கு நியமனங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமென வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இணைத் தலைவர்களான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் விஐயகலா மகேஸ்வரன்...

காவலாளியைத் தாக்கி யாழ் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் பொலிஸாரால் கைது!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பின்பு உள் நுழைய முயன்ற மூவரை அனுமதிக்க மறுத்த காவலாளியை தாக்கி உள்நுழைந்த இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஒருவரை பார்வையிடுவதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த நால்வர் இரவு 10 மணியளவில் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்....

கறுப்பு ஜூலை: யாழ்.பல்கலைக்கழத்தில் நினைவேந்தல்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்துப்பீடங்களின் ஏற்பாட்டில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பல்கலைகழக கையிலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைகழக மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இலங்கையின் மருத்துவத்துறையில் மற்றுமோர் அத்தியாயம்!! நாடு முழுவதிலும் ஹெலிஹொப்டர் அம்புலன்ஸ் சேவை!!

இலங்கையில் விமான அம்புலன்ஸ் சேவை ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அடுத்த வருடத்தில் இருந்து இலங்கை மக்கள் விமான அம்பியுலன்ஸ் சேவையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த சேவையை அமுல்படுத்த, அமெரிக்காவிடம் இருந்து 8 விமான அம்புலன்ஸ்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்....

கொள்கையுடன் செயற்படுவோருக்கு ஆதரவளிக்க தயார்: கஜேந்திரகுமார்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிறந்த கொள்கையுடன் நேர்மையானவர்களை ஒன்றிணைத்து புதிய கட்சியொன்றை ஆரம்பித்தால் அதற்கு ஆதரவளிக்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. திருகோணமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அவ்வாறு அவர் கொள்கையுடன்...

இலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: முதலமைச்சர்

இலங்கையின் தமிழ் தேசிய பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளதாக தான் கருதுவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையை ஜெனீவாவில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு...

இலவச அம்புலன்ஸ் சேவை பொலிஸ் நிலையங்கள் ஊடாகவே முன்னெடுப்பு

யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்ட 1990 ‘சுகப்படுத்தும் சேவை’ இலவச அம்புலன்ஸ் சேவை பொலிஸ் நிலையங்கள் ஊடாகவே முன்னெடுக்கப்படவுள்ளன. பொலிஸ் – நீதி விசாரணைக்குட்படுத்தப்படவேண்டிய சம்பவங்களுக்கு அம்புலன்ஸ சேவை வழங்கப்படும் போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அல்லது இருவர் கடமையில் அமர்ப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது. வடக்கு உள்பட நாடுமுழுவதும் இலவச அம்புலன்ஸ் சேவையை வழங்க இந்திய அரசு 22.5...

வடமராட்சி மீனவரின் படகுக்குத் தீ வைப்பு!!

வடமராட்சி கிழக்குப் பகுதியில் பிறமாவட்ட மீனவர்கள் மேற்கொள்ளும். கடலட்டை தொழிலை பிடிக்கச் சென்ற உள்ளூர் மீனவரின் படகு நேற்று அதிகாலை இனம் தெரியாதோரினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. கட்டைக்காட்டுப் பகுதியில் கடற்படைத் தளத்திற்கு அருகில் நிறுத்தி வைத்திருந்த செபமாலை சுஜீபன் என்பவருக்குச் சொந்தமான படகு மற்றும் இயந்திரம் , வலைகள் என்பனவே இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது....

செம்­மணி புதை­குழி விவ­கா­ரம் : பொலி­ஸார் ஒத்­து­ழைப்­பின்மையினால் அகழ்­வுப் பணி­கள் தாம­தம்!!

செம்­ம­ணி­யில் எலும்­புக்­கூட்டு எச்­சங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பிர­தே­சத்­தில் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­வ­தற்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்துவ மனை­யின் சட்ட மருத்துவ அதி­காரி நேற்­றுப் பிர­சன்­ன­மா­னார். பொலிஸ் குற்­றத் தடுப்­புப் பிரி­வின் பொறுப் ப­தி­காரி சம்­பவ இடத்துக்கு வருகை தர­வில்லை. மேல­திகஅகழ்­வுப் பணி­க­ளும் பரி­சோ­த­னை­க­ளும் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன. நீர்த்­தாங்கி அமைப்­ப­தற்­காக செம்­ம­ணி­யில் கடந்த வெள்­ளிக் கிழமை நிலம் அக­ழப்­பட்­டது. மனித எலும்­புக்­கூட்டு...

ஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: முதலமைச்சர்

ஆசிரியர் நியமனங்கள் மற்றும் கல்வி தொடர்பான நடைமுறைகள் யாவும் மாகாண சபை அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே சி.வி விக்னேஸ்வரன்...

நீதிபதி இளஞ்செழியனின் நன்றி மறவா பண்பு: ஆச்சரியத்தில் தென்னிலங்கை!

நல்லூரில் நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த அவரது மெய்பாதுகாவலரின் ஒரு வருடநினைவஞ்சலி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலராக பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் சரத் பிறேமசந்திரவின் ஒரு வருட நினைவஞ்சலியில் நீதிபதி மா.இளஞ்செழியனும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது இளஞ்செழியன் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த சரத் பிறேமசந்திரவின் உருவப்படத்திற்கு மாலை...

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட்டது யார்? – ரணில் கேள்வி

45 நாட்களில் இராணுவ முகாம்களை அகற்றுமாறும் யாரும், எவருக்கும் உத்தரவிடவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்தநிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர்,...
Loading posts...

All posts loaded

No more posts