- Tuesday
- May 12th, 2026
கல்வித்துறை அரசியல் இலாப நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனின் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க போவதாக கல்வி நிர்வாக சேவை சங்கம் மற்றும் ஆசிரியர் – அதிபர் சேவை சங்கம் இன்று (திங்கட்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளன. அரசியல் இலாபத்திற்காக 1018 பேருக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமையை உடனடினாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் அச்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன....
யாழ். சமுர்த்தி பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களை விரைந்து முன்னெடுக்குமாறு சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் பி.ஹரீசன் அதிகாரிகளை பணித்துள்ளார். சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எதிர்க்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான யாழ். மாவட்டத்திற்கான சமுர்த்தி உத்தியேகத்தர்களுடனான கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. யாழ். மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பி.மகேஸ்வரன் தலைமையில் யாழ். நீராவியடியிலுள்ள...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர், அதிபர் சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில் தகுதியற்றவர்கள் 1000 இற்கும் அதிகமானவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று குற்றஞ்சாட்டி ஆசிரியர் சங்கம் உள்பட கல்விசார் தொழிற்சங்கங்கள் கடந்த 4ஆம் திகதி சுகயீன...
வடக்கில் அதிகரித்துவரும் வன்முறைகளுக்கு முடிவுகட்ட சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் முறையாக மாகாண சபைக்கு பகிரப்பட வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் வடக்கு விஜயத்தை தொடர்ந்தும் யாழில் வன்முறைகள்...
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குத் தொடர்ந்தும் நிதி வழங்குவதற்கு அமெரிக்காவில் இருக்கும் தர்மகர்த்தா சபையினர் முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துக் கடிதம் ஒன்றினை நேற்று இலங்கையில் இருக்கும் யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபைக்கு அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையிலும் கல்லூரியின் நிருவாகத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் நோக்கில் ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் டானியல் தியாகராஜாவும், சபையின் உப...
யாழ்ப்பாணம், கொக்குவில் தொழிநுட்ப கல்லூரியின் பதிவாளர் அதிகார முறைகேட்டில் ஈடுபடுகின்றார் என்றும் அதற்கு பொலிஸாரும் உடந்தையாக உள்ளனர் எனவும் குற்றஞ்சாட்டி மாணவர்கள் ஒன்றியத்தால் நேற்று கற்றல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தொழிநுட்ப கல்லூரியின் பெண் பதிவாளரின் சகோதரர் பொலிஸில் பணியாற்றுகிறார் என்றும் அவரின் வழிநடத்தலில் யாழ்ப்பாணம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் யாழ்ப்பாணம் தொழிநுட்ப கல்லூரி கல்விசார்...
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் பதிக்கப்பட்டிருந்த மாவீரர்களின் கல்வெட்டுக்கள் ஊரெழு இராணுவ முகாம் இயங்கிய காணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மாவீரர் குடும்பங்களின் விவரங்களைத் திரட்டுவதற்காக ஊரெழு இராணுவப் புலனாய்வாளர்கள் அவற்றை எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் ஆட்சிக்காலத்தில் ஊரெழு இராணுவ முகாம் புலனாய்வுப் பிரிவின் முகாமாக இயங்கியது. வெள்ளை...
செம்மணிப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மனித எலும்புக்கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் நீர்த்தாங்கியின் நிர்மாணப் பணிகள் இடம்பெறும் பகுதியிலேயே இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தினையடுத்து யாழ்ப்பாணப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் குறித்த பகுதியில்...
வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களாக நாங்கள் தெரிவாகியபோது மாகாணசபைக்குரிய அதிகாரங்களை வைத்துப்பெரிதாக எதையும் சாதிக்க இயலாமற்போனாலும் சிலவற்றையாவது செய்துமுடிப்போம் என்ற நம்பிக்கையுடன்தான் வந்தோம். ஆனால் மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையே இருக்கக்கூடிய சாதாரண முரண்பாடுகளைப் பூதாகரமாக்கி உள்ளே நுழைந்த தீயசக்திகள் மாகாணசபையின் ஒற்றுமையைச் சீர்குலைத்ததால் எதனையுமே முழமையாகச் செய்யமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்று முதலமைச்சரே நீதிமன்றப்படி ஏறும் நிலை தோன்றியுள்ளது....
அச்சுவேலி பத்தமேணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அந்த வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றது என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் கதவு, கண்ணாடிகள் உள்பட வீட்டில் இருந்த பெறுமதியான பொருள்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி தமக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச்...
இளம் பெண்ணொருவரின் தற்கொலைக்கு, சட்டத்தரணி ஒருவரே காரணமென முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, குற்றப்புலனாய்வும் திணைக்களத்துக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த விவகாரம் தொடர்பில், ஏற்கெனவே விசாரணைகளை நடத்திய யாழ்ப்பாணப் பொலிஸ் தலைமையகக் குற்ற விசாரணைப் பிரிவு முன்வைத்த விசாரணை அறிக்கை தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட யாழ்ப்பாணம் நீதவான் சின்னத்துரை...
கிளிநொச்சி - அக்கராயன் பிரதேசத்தில் நடமாடுகின்ற போலி வைத்தியரொருவர் தொடர்பில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென, அக்கராயன் பிரதேச வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த நபர், அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் வைத்தியராகப் பணியாற்றாத நிலையில், அந்த வைத்தியசாலையில் தான் பணியாற்றுவதாகக் கூறி, கிராம மக்களிடம் பணம் அறவிடுதல் உள்ளிட்ட பல மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக, வைத்தியசாலை...
விஜயகலாவின் உரை தொடர்பில், தன்னிடமும் கேள்விகளைக் கேட்டனரென்று தெரித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “அந்த நாளும் வந்திடாதோ என்று ஒருவர் அங்கலாய்ப்பது குற்றமாகாது என்று கூறினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாரக் கேள்வி, பதிலின் போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் விசேட பொலிஸ் குழுவினரின் விசாரணை தொடர்பில் எழுப்பியிருந்த கேள்விக்கு அளித்துள்ள பதிலிலேயே,...
அச்சுவேலி - பத்தமேனி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கவிருந்த வருடாந்த மகோற்சவம் ஆலய தர்மகத்தாவின் எதேட்சாதிகாரமான செயற்பாட்டால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமது ஊரில் துன்பியல் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என பிரதேச மக்களும் திருவிழா உபயகாரர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர். மேற்படி ஆலயத்தில் வருடா வருடம் ஒளியமைப்புச் செய்யும் ஒருவரை இவ்வருடம் அதைச்...
சுழிபுரம் - திருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்த டிப்பர் மற்றும் ஜே.சி.பீ வாகனங்களும் அவற்றின் சாரதிகளும் அப்பிரதேச மக்களால் மடக்கிக் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று (17) மாலை 6 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலங்களைப் புதைக்கும் புதைகுழிகள் அமைந்துள்ள இடத்தில் மணல் அகழப்பட்டமையால் எலும்புக் கூடுகள் வெளியே வந்துள்ளன....
வடக்கில் ஆவா குழுவினர் தென் இந்தியத் திரைப்படங்களை பார்த்து, அதில் உள்ளவாறு செயற்பட்டுள்ளனர் என்று பிரதி அமைச்சர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் நேற்று (17) தெரிவித்துள்ளார். வடக்கில் ஆவா குழு ஒரு பயங்கரவாத குழுவல்ல என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர்...
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் ‘கவனமாக சென்று வாருங்கள்’ என்ற நிகழ்ச்சித்திட்டம் யாழில் ஆரமப்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டமானது வடமாகாண ஆளுநர் செயலகம், முதலமைச்சர் அமைச்சு, பொலிஸ் தலைமையகம் ஆகியன இணைந்து யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரமப்பித்து வைக்கப்பட்டது. இதன் போது வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை வட...
மானிப்பாய் பகுதியில் வயோதிபப் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபரை குற்றமற்றவர் என தெரிவித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது. மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கும்...
சிங்கப்பூர் அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைள் சிலவற்றையேனும் இலங்கை அரசாங்கம் கடைபிடிப்பதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவற்றில் ஒன்றையாவது இந்த அரசாங்கம் கடைபிடித்தால் நாடு அபிவிருத்தியடையும் என கூறினார். இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...
யாழ்ப்பாண கோட்டைக்குள் இராணுவத்தின் மினி முகாமொன்று இயங்கிவந்துள்ளதாகவும், அதனையே தற்போது மாற்றியமைத்து வருகின்றனர் என்றும் தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்.கோட்டைக்குள் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கு இராணுவத்தினர் அனுமதி கோரியிருந்த போதும் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்குள் மினி முகாம் ஒன்றினை அமைத்து சுமார் 15 இராணுவத்தினர் வரை தங்கியிருந்துள்ளனர் என்றும், ஏனையோர் யுத்தம் நிறைவடைந்த...
Loading posts...
All posts loaded
No more posts
