- Tuesday
- May 12th, 2026
சிங்கப்பூர் அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைள் சிலவற்றையேனும் இலங்கை அரசாங்கம் கடைபிடிப்பதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவற்றில் ஒன்றையாவது இந்த அரசாங்கம் கடைபிடித்தால் நாடு அபிவிருத்தியடையும் என கூறினார். இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...
யாழ்ப்பாண கோட்டைக்குள் இராணுவத்தின் மினி முகாமொன்று இயங்கிவந்துள்ளதாகவும், அதனையே தற்போது மாற்றியமைத்து வருகின்றனர் என்றும் தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்.கோட்டைக்குள் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கு இராணுவத்தினர் அனுமதி கோரியிருந்த போதும் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்குள் மினி முகாம் ஒன்றினை அமைத்து சுமார் 15 இராணுவத்தினர் வரை தங்கியிருந்துள்ளனர் என்றும், ஏனையோர் யுத்தம் நிறைவடைந்த...
நல்லாட்சியுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்திற்கு தீர்க்கமான அழுத்தம் கொடுக்க வேண்டும் என, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு சென்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான...
“மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவி நீக்கிய விடயத்தை அரச வர்த்தமானியில் வெளியிடாதது மாகாண ஆளுநரின் தவறாகும். வடக்கு மாகாண சபை சார்பாக ஆளுநர் தானே ஒரு முக்கியமான செயலைச் செய்யாதுவிட்டு அதை முன்வைத்து வடக்கு மாகாண சபையை கலைக்க சட்டம் இடம் கொடுக்காது” இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். “ஆளுநர் செய்த...
விடுதலைப் புலிகளின் மீள்வருகையை வலியுறுத்தும் வகையிலான விஜயகலாவின் உரை நிகழ்த்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களிடம் யாழ். பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அந்தவகையில், குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இந்த விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இன்று...
தமிழ் மக்களுக்கும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை தான் விரும்பவில்லை எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் சாதாரண மக்களையும் இராணுவத்தினரையும் பிரிக்க முதலமைச்சர் எத்தனிப்பதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க குற்றம் சாட்டியிருந்த நிலையில் இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...
இந்த திட்டத்தை இலங்கை போக்குவரத்துச் சபை தனது இணையத்தளம் ஊடாக நேற்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. பயணிகள் தாம் பயணிக்க விரும்பும் மாவட்டத்தைத் தெரிவு செய்து தமது ஆசனத்தை முற்பதிவு செய்து கொள்ளலாம். கட்டணத்தை இணையம் ஊடாக செலுத்தும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இணையத்தள முகவரி வருமாறு: https://sltb.express.lk/
“தன் இன மக்களால் நிராகரிக்கப்பட்டு, பின்கதவால் அரசியலுக்குள் பிரவேசித்தவர்கள் நான் துப்பாக்கியை பெற்றுக் கொண்டதை மக்கள் முன்னிலையில் நிரூபித்துக் காட்ட வேண்டுமே அன்றி தமிழினத்தினை கூறுபோட முற்பட கூடாது” என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக வடக்கு மாகாண சபை...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தனை நீக்கிவிட்டு, தினேஸ் குணவர்த்தனவை நியமிக்க வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சித் தலைவரான ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றிலுள்ள 92 மொத்த எதிரணி உறுப்பினர்களில் 70...
வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். டெனிஸ்வரனின் அமைச்சுப் பதவி தொடர்பாக விவாதிப்பதற்காக, வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இந்த அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நீதிமன்ற கட்டளை நிறைவேற்றப்படாவிடின், அந்த...
வட.மாகாண சபை கேலிக்குரியதாக மாறியமைக்கு ஆளுங்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களே காரணமென வட மாகாண சபை எதிர்கட்சி உறுப்பினர் சி.தவராசா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விசேட அமர்விலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஆயுத போராட்டங்கள் ஊடாக பெறப்பட்ட குறைந்தபட்ச அதிகாரங்கள் கொண்ட மாகாணசபை, ஆளுங்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு...
வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்துள்ளார். டெனீஸ்வரனின் அமைச்சுப் பதவி குறித்து விவாதிக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வடமாகாண சபையின் விசேட அமர்வின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்து, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கியை வைத்திருப்பதாக...
வட.மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனுக்கு எதிராக இன்று (திங்கட்கிழமை) வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வியாழக்கிழமை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது பிரதேச செயலாளருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து வட.மாகாணசபை உறுப்பினர் கூட்டத்தில் இருந்து வெளியேறியிருந்தார். இதன்போது பிரதேச செயலாளரை அச்சுறுத்தும் விதமாக குறித்த மாகாணசபை...
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் இன்று காலை வீடு ஒன்றில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் வசித்து வந்த யோ. மிதுன்ஜா 17 வயதுடைய உயத்தரத்தில் கல்வி பயின்ற மாணவி ஒருவர் கடந்த புதன்கிழமை கல்வி பயின்ற பாடசாலையில் இடம்பெற்ற உயர்தர மாணவர்களின்...
பாண் தவிர்ந்த வெதுப்பக உற்பத்தி உணவுப் பண்டங்கள் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விலை மாற்றம் வரும் இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது. “எரிபொருள்களின் விலை உயர்வையடுத்து வெதுப்பக உற்பத்தி உணவுப் பண்டங்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் கூடி ஆராய்ந்தது....
வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் 33 தவறுகளுக்காக சம்பவ இடத்திலேயே விதிக்கப்படும் தண்டப்பணம் நேற்று 15ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் அதிகரிக்கப்படுகின்றன. வாகான புகைப் பரிசோதனைச் சான்றிதழை எடுத்துச் செல்லத் தவறினால் 500 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என புதிய போக்குவரத்து விதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அந்தச் சான்றிதழ் வாகன வரி அனுமதிப் பத்திரம்...
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து கடந்த சனிக்கிழமை முற்பகல் குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணும், அவரது ஆறு வயது...
யாழ்ப்பாணத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்குரிய தகைமைகளைப் பூர்த்தி செய்த 457 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி பிரதமர் ரணில்...
காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனோர் அலுவலகத்தின் மக்கள் கருத்தறியும் அமர்வு நேற்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அமர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கருத்தறியும் அமர்விற்கு வருகைதந்த காணாமல் போனோர் அலுவலக பணியாளர்கள்...
வடமாகாணத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோமென இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, இவ்வாறு செயற்படுவதாக அவர் அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- “சில ஊடகங்கள் மக்கள் மத்தியில் இராணுவத்தினர் தொடர்பில் தவறான கருத்துக்களை பரப்பிவருகின்றன. எனினும், இராணுவம் மீதான நம்பிக்கையினைக் கைவிடவேண்டாம்....
Loading posts...
All posts loaded
No more posts
