‘கவனமாக சென்று வாருங்கள்’ ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் ‘கவனமாக சென்று வாருங்கள்’ என்ற நிகழ்ச்சித்திட்டம் யாழில் ஆரமப்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்ச்சித்திட்டமானது வடமாகாண ஆளுநர் செயலகம், முதலமைச்சர் அமைச்சு, பொலிஸ் தலைமையகம் ஆகியன இணைந்து யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரமப்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஒட்டி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகன சாரதிகள் கலந்து கொண்டிருந்ததுடன், கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த வீதி போக்குவரத்து பொலிஸாரின் செயல்முறை காட்சி நாடகங்களும் வீதியில் அரங்கேற்றப்பட்டன.

யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்துள்ளன. கடந்த 6 மாத காலப்பகுதியில் யாழ் போதனா வைத்தியசாலையில் மட்டும் 42 பேர் விபத்தினால் மரணமடைந்தும் 2 ஆயிரத்து 45 பேர் வீதி விபத்தினால் காயமடைந்துள்ளனர்.

இதற்கு மக்கள் மத்தியில் வீதி ஒழுங்கு தொடர்பில் விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு காரணம் என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts