- Tuesday
- May 12th, 2026
சண்டிலிப்பாயில் நேற்று இரவு வாள்களுடன் நின்ற கும்பல் ஒன்று பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. வீதியில் போவோர் வருவோரை மடக்கி, மிரட்டியது, முகத்தை மூடி துணிகட்டி வாள்களுடன் நின்றவாறு இந்தக் குழு அட்டகாசம் செய்தது. வீதியில் சென்ற வாகனங்களை இந்தக் குழு அடித்து நொருக்கியது. ஒருவருடைய மோட்டார் சைக்கிளையும் பறித்துச் சென்றது. ‘‘உயிர் வேண்டுமா, பைக் வேண்டுமா’’...
கிளிநொச்சி, வன்னேரிக்குளத்தில் வட.மாகாண சபையினால் சுமார் ஆறு மில்லியன் ரூபா செலவில் நிமாணிக்கப்பட்ட சுற்றுலா மையம் தற்போது பயனற்றுக் காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம் பகுதியில் சுற்றுலா மையம் ஒன்று அமைக்கப்பட்டு அது கடந்த ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. வட.மாகாண முதலமைச்சரின் அமைச்சின் கீழ்...
விடுதலைப் புலிகளின் சமாதிகளை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. மஹகரகம பிரதேசத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிசிர ஜயகொடி இதனை தெரிவித்தார். “முன்னாள் விடுதலை புலிகளின் குடும்பங்கள் மற்றும் விடுதலை புலிகளை நினைவுகூறும் தினங்களுக்கு நிதி வழங்கும்...
பாடசாலைகளில் தற்போது தின வரவிற்காக பயன்படுத்தப்படும் கைவிரல் அடையாள நடைமுறையினால் கடந்த ஆண்டு நூற்றிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டமை கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதனால் மாற்று ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் , வடக்கு மாகாணத்தில் தற்போது...
சிறுமிகள் சிலரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டு வழக்கின் ஆசிரியர் சந்தேகநபராவார். அவருடைய தரப்பினரே சாட்சிகளுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடுகளை வழங்கி அவற்றின் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமாகவிருந்தால், சந்தேகநபர் வெளியில் வந்து சாட்சிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கமாட்டார் என்பதில் என்ன உத்தரவாதம் உண்டு? ஆகவே சந்தேகநபருக்கு பிணை அனுமதி வழங்கப்படக்கூடாது” இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் முன்னிலையாக...
சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 9 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. சாவகச்சேரி சுகாதாரத் திணைக்கள பொது சுகாதாரப் பரிசோதகர்கள் அண்மையில் எழுதுமட்டுவாழ் பிரிவுக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் பல்பொருள் விற்பனை நிலையங்களில் திடீர் பரிசோதனைகளை நடாத்தினர். அவ்வேளையில் உசன் பகுதியில் உள்ள வர்த்தக...
கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையினூடாக தேர்ச்சி பெற்று பல்கலைக்கழக நுழைவிற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி இந்த வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. 2017 ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய அவர்களுக்கான வெட்டுப்புள்ளி நிர்ணயிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 25 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இந்நிலையில் தற்போது...
தென்மராட்சியின் சாவகச்சேரி மற்றும் மீசாலை பகுதிகளிலுள்ள நான்கு வீடுகளுக்குள் வாள்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) இரவு 11.30 முதல் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 1 ஒரு மணிவரை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி டச் வீதியில் மடத்தடி பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் இரவு 11.30...
தமிழ் தேசிய கூட்டமைப்பு சிங்கள தேசிய வாதத்தின் ஓர் அங்கமாக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கூட்டமைப்பானது ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்படுவதாக இதன்போது குற்றம் சுமத்தியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,...
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மேலும் 902 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் 312 ஏக்கர் அரச நிலமும், 112 ஏக்கர் தனியார் நிலமும், கிழக்கு மாகாணத்தில் 318 ஏக்கர் அரச...
நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான அடையாளமாக வட மாகாணம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 10 முதல் 14ஆம் திகதிவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு...
வீதி ஒழுங்கு விதிமுறைகளுக்கு மீறியதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிக் கடவையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை, வாகனம் ஒன்றில் போக்குவரத்துப் பொலிஸார் ஏற்றிச் சென்ற சம்பவம் ஒன்று இன்றையதினம் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிக் கடவைகளில் வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிடவும் வர்த்தக நிலையங்களுக்கு செல்வோரும் தமது மோட்டார் சைக்கிள்களை...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர், அதிபர் சங்கங்கள் இணைந்து நாளை 26ஆம் திகதி வியாழக்கிழமை முன்னெடுக்கத் திட்டமிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்தே போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கை கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில்...
வவுனியா – பூனாவை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே மரமொன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன்போது இதில் பயணித்த 20 பேர் வரை காயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவ மனை கொண்டுசென்று சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து...
கல்லூரி தாயை மீட்டெடுக்க பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாண கல்லூரியின் பழைய மாணவனும் ஆதின சபையை சேர்ந்தவரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாண கல்லூரியில் நிர்வாக சீர்கேடுகள் , அதிகார துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டி பழைய மாணவர்கள் கல்லூரி முன்றலில் நேற்று போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து...
தென்மராட்சியில் இடம்பெற்று வந்த வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தம்மை ‘ஐ’ குழு எனவும் ‘சவா’ குழு எனவும் அடையாளப்படுத்தி கொண்டு வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் குறித்த குழுவினர் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் எழுதுமட்டுவாள் பகுதியில் கோஸ்டி மோதல்...
சுழிபுரம் பகுதியில் 6 வயதான சிறுமி சிவனேஷ்வரன் ரெஜினாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையானது மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது சிறுமியின் மரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், சிறுமியின் தந்தை, தாய் மற்றும் மாமா ஆகியோர் பிரதான...
வடக்கில் உள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்களை ஜனாதிபதி மற்றம் விவசாய அமைச்சர் முன்னெடுத்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களுடனான குறித் கலந்துரையாடல் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள கமநல சேவைகள் திணைக்கள மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதி...
சிறுவர்கள் மத்தியில் வாய்புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர் பபா பலிஹவடன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகையிலை மற்றும் பாக்கு சார்ந்த உற்பத்திகளின் பாவனை அதிகரித்துள்ளமைக காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சுகாதார நிறுவனங்களால் புகையிலை சார்ந்த உற்பத்திகளின் விற்பனை தடை...
கல்விச் சேவையில் அரசியல் பழிவாங்கும் போர்வையில் நியமனம் வழங்குவதை எதிர்த்து நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டுமென கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்கள் இணைந்து யாழ்...
Loading posts...
All posts loaded
No more posts
