கருணாநிதி விரைவில் குணமடைய மைத்திரிபால சிறிசேன பிரார்த்தனை!

கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிய தமிழகம் சென்றுள்ள இ.தொ.காவின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்த்து கடிதத்தை திராவிட முன்னேற்ற கழக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கையளித்துள்ளார். தமிழகத்தின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியை தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்த...

அராலி குள்ள மனிதர்களுக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் தொடர்பு: மணிவண்ணன்

யாழ். அராலி குள்ள மனிதர்கள் சம்பவத்திற்கும், இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினருக்கும் தொடர்புள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ் மாநகரசபை உறுப்பினருமான வி. மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்த அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். யாழில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அராலி குள்ள...
Ad Widget

தேர்தலுக்கு அஞ்சி அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் மறுக்கிறது!!

அரசியல் கைதிகளின் விடுதலை எதிர்வரும் தேர்தலில் தமக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என அரசாங்கம் அஞ்சுவதாக யாழ். மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை மங்களராஜா தெரிவித்தார். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து...

தமிழரின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் பெரும்பான்மை இனத்தவரின் முயற்சி முறியடிப்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கோட்டைக் கேணிக்கு அப்பால் உள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் பெரும்பான்மை இனத்தவரின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிவந்தா முறிப்புக்குளம் பகுதி மற்றும் அதனை அண்மித்த வயல் நிலங்களையே பெரும்பான்மையினர் கையகப்படுத்த முயற்சித்துள்ளனர். இது தொடர்பாக கொக்குத்தொடுவாய் விவசாய அமைப்பினர், உடனடியாக வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு...

வவுனியாவில் கோரவிபத்து- 5வயதுச் சிறுவன் உயிரிழப்பு!! 8 மாணவர்கள் உட்பட 9 பேர் படுகாயம்!!

வவுனியா புளியங்குளம் புதூர் சந்திபகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 8 ஆரம்ப பிரிவு மாணவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். பாடசாலை முடிந்ததும் ஆரம்பப்பிரிவு மாணவர்களை ஏற்றிக் கொண்டு முச்சக்கரவண்டி புதூர் சந்தி நோக்கிச் சென்றுள்ளது. அவ்விடத்தில் ஒரு மாணவரை இறக்கியதுடன், முச்சக்கர வண்டி திரும்ப முற்பட்டபோது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்...

கிராம அலுவலகருக்கு மிரட்டல்!!: அலுவலகத்துக்குள் புகுந்து கும்பல் அட்டூழியம்!!

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராம அலுவலகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. வாள்கள் கம்பிகளுடன் பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் இந்த அட்டூழியத்தை அரங்கேற்றி தப்பிச்சென்றது. வண்ணார்பண்ணை கிழக்கு ஜே 100 கிராம அலுவலகரின் அலுவலகத்தில் இன்று நண்பகல் 12.20 மணியளவில் இந்த அடாவடிச் சம்பவம் இடம்பெற்றது. அலுவலகத்துக்குள்...

தென்னிந்தியாவிற்கும் பலாலிக்கும் இடையில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை!

தென்னிந்தியாவுக்கும், பலாலிக்கும் இடையில் குறைந்தக் கட்டணத்திலான விமான சேவை மிகவிரைவில் ஆரம்பிக்கப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்தை புனரமைப்பு செய்து தென்னிந்தியாவுக்கான விமான சேவையை ஆரம்பிக்க வேண்டுமென தமிழர் தரப்புக்களால் அண்மையில், அரசாங்கத்திடம் கோரப்பட்டிருந்த நிலையில் ஜோன் அமரதுங்க, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு கூறியுள்ளார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி...

தரம் ஒன்று மாணவர் அனுமதி: நேர்முகத் தேர்வு ஓகஸ்டில்

2019ஆண்டு பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. “சுற்றறிக்கைக்கு அமைவாக நேர்முக பரீட்சைக்கான குழு நியமிப்பதற்கான ஆலோசனைகள் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்பொழுது கிடைக்கப் பெற்றுள்ள விண்ணப்பப் படிவங்களை பட்டியலிடும் நடவடிக்கைகள் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டெம்பர் 15ஆம் திகதியளவில் முதற்கட்ட...

வடமராட்சியில் மீண்டும் படகுக்குத் தீ வைத்த விசமிகள்!!

வடமராட்சி கிழக்கு தாளையடியில் படகு ஒன்றுக்கு இன்று அதிகாலை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. கடல் தொழிலைத் தனது ஜீவனோபாயமாக கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் படகே எரியூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. அண்மையில் கட்டைக்காடு கடற்கரையில் படகும் வெளியிணைப்பு இயந்திரமும் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் இது இரண்டாவது சம்பவமாக இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கை...

சமஷ்டி முறைக்கு தமிழ் அரசியல் தலைவர்களே முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர்: முதலமைச்சர்

சமஷ்டி முறைக்கு தமிழ் அரசியல் தலைவர்களே முதலில் எதிர்ப்பு தெரிவித்திருந்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு சட்டக்கல்லூரியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘எமது அறிவின்மை பிழையான சரித்திரத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்ட...

இலங்கையில் வடமாகாணத்திலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனை: செ.மயூரன்

இலங்கையில் வடமாகாணத்திலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனை காணப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் வவுனியா மாவட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் இந்த விளையாட்டுக்களில்...

மடு திருத்தலத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம்!

மன்னார் மடு திருத்தலத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்திருந்தார். இதன்போது அவர் அங்கு இடம் பெற்ற விசேட திருப்பலியிலும் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். மன்னார் மறைமாவட்ட ஆயர் உள்ளிட்ட பலரும் இந்த விசேட திருப்பலியில் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மடு திருத்தல திருவிழாவிற்கான...

மீண்டும் நாடு திரும்பும் மக்களுக்கு முன்னுரிமை திட்டங்கள் வழங்கப்பட வேண்டும்: சம்பந்தன்

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த நிலையில் மீண்டும் நாடு திரும்பும் மக்களுக்கு முன்னுரிமை திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘யுத்தத்தினால் எமது கிராமங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. யுத்தத்தினால் எமது...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிராக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பணிப்புறக்கணிப்புஎதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட வைத்தியர்களுடன் தொடர்பற்ற அரசாங்கத்தின் உடன்படிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இப்பணிப்புறக்கணிப்பு அமையுமெனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தமது பிரச்சினைகள் தொடர்பிலும்...

ரயில் சாரதிகள் அடையாள பணிப்புறக்கணிப்பு!

ரயில் சாரதிகள் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக ரயில் சங்கங்கள் அறிவித்துள்ளன. சம்பள முரண்பாடு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமுல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. குறித்த பணிப்புறக்கணிப்பில் ரயில் காவலர்களும் கட்டுப்பாட்டாளர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் பல பகுதிகளில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!!

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதிகளிலுள்ள மூன்று வீடுகளில் வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் ஆறுகால்மடம் பொன்னையவீதி, கொக்குவில் பிரம்படி வீதி, ஆறுகால்மடம் புதுவீதி ஆகிய பகுதிகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள் வாள்களுடன் புகுந்த குழுவினர், வீட்டை அடித்து நொருக்கி, வீட்டிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளதுடன் வீட்டொன்றில் நிறுத்தி...

அரியாலையில் ரயிலுடன் மோதுண்டு இருவர் உயிரிழப்பு – ஒருவரின் நிலை கவலைக்கிடம்

யாழ்ப்பாணம் அரியாலை – நெடுங்குளம் சந்தியில் தொடருந்துடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தோக்குப் பயணித்த நகரங்களுக்கு இடையிலான (இன்ரசிற்றி) தொடருந்துடனேயே மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர்...

அராலி பகுதியில் குள்ள மனிதர்கள் மக்கள் மீது தாக்குதல் : பீதியில் மக்கள்!

அராலி பகுதியில் குள்ள மனிதர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இங்குள்ள மனிதர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதுடன், வீடுகள் மீதும் கல் வீச்சிலும் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இவர்கள் வீட்டு கூரைகள் மீது தாவி திரியும்போது மக்கள் அவல குரல் எழுப்பியதும், கூரையில்...

யாழில் வழமையைவிட 4பாகை செல்ஸியஸ் வெப்பநிலை அதிகரிப்பு!

நாட்டின் பல்வேறு பாகங்களில் மதிய நேரத்தின்போது வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதற்கமைய, இன்று காலை 08.30 மணியுடன் , 24 மணித்தியாலத்திற்குள் யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் வெப்பநிலை வழமையைவிட 4 பாகை செல்ஸியஸ் அளவில் பதிவாகியுள்ளது. இதேநேரம் நுவரெலியா, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் வழமையை விடவும் 2 பாகை செல்ஸியஸினால் வெப்பநிலை அதிகரித்திருந்ததாக காலநிலை...

முக­மூ­டிக் கொள்­ளை­யர்­களை உடன் கைது செய்­ய­ வேண்­டும்!!

யாழ்ப்­பாண வர்த்­தக நிலை­யங்­கள் மூடப்­ப­டும் நேரத்­தில் வாள்­க­ளு­டன் வரும் முக­மூ­டிக் கொள்­ளை­யர்­களை கைது செய்­ய­வேண்­டும். அச்­சம் கார­ண­மாக வர்த்­த­கர்­கள் இரவு 7 மணி­யு­டன் கடையை மூடு­கின்­ற­னர். இது தொடர்­பில் துரித நட­வ­டிக்கை அவ­சி­யம். இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்ட மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரி­டம், யாழ்ப்­பாண வர்த்­தக சங்­கப் பிர­தி­நி­தி­கள் வலி­யு­றுத்­தி­னர். யாழ்ப்­பாண நக­ரில் கடந்த சில நாள்­க­ளாக...
Loading posts...

All posts loaded

No more posts