விடுதலைப் புலிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், 4 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உற்படுத்தப்பட்டிருந்தார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அகியோரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து வந்த பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவினரால் இவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.
அண்மையில் விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் குறித்து விஜயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டிருந்தமை காரணமாக தென் இலங்கையில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக தனது இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதாக விஜயகலா மகேஸ்வரன் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உட்பட 25 ற்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.