ஊடகவியலாளர் சாளின் மீதான ரிஐ.டி யினரின் விசாணைக் கெடுபிடிக்கு கண்டனம்

ஊடகவியலாளர் உதயராசா சாளின் அவர்கள் கடந்த 22-08-2018 அன்று கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் அழைத்து விசாணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் இதணை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் வெளியிடப்பட்டுள்ள கண்ட அறிக்கை.. ஊடகவியலாளர் உதயராசா சாளின் அவர்கள் கடந்த 22-08-2018 அன்று கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் அழைத்து விசாணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த யூன் மாதம்...

சமையல் எரிவாயுவின் விலை 158 ரூபாவால் அதிகரிப்பு!

சமையல் எரிவாயுவின் விலை இன்று (24) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 158 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. சமையல் எரிவாயு 12.5 கிலோக் கிராம் எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 1696 ரூபாவாக மாற்றப்படுகிறது. இந்த விலை அதிகரிப்புக்கு பாவனையாளர்கள்...
Ad Widget

வடக்கு – கிழக்கு அபிவிருத்தி செயலணி ஐ.நா.வை சமாளிப்பதற்கானது: சுரேஸ்

வடக்கு – கிழக்கு அபிவிருத்தி செயலணி ஐக்கிய நாடுகள் சபையை சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த செயலணியின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்...

கடற்றொழில் அமைச்சரின் உத்தரவும் பொய்யாகிப் போனதா?- யாழ். மக்கள் விசனம்

யாழ். வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அத்துமீறி தங்கியிருக்கும் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றுவது தொடர்பான கடற்றொழில் அமைச்சரின் உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து யாழ். மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மேலும், அமைச்சரின் உத்தரவு ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை மழுங்கடிக்கும் செயலா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து மேலும் தெரிவித்த மக்கள், ”கடந்த...

தமிழக மீனவர்கள் அபராதத்துடன் விடுதலை: ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த பத்தாம் திகதி கைது செய்யப்பட்டிருந்த 27 மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, தடை செய்யப்பட்ட வலைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஏழு மீனவர்கள் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 14 ஆயிரம் அபராதம்...

மகாவலி அதிகார சபையின் அத்துமீறல்களுக்கு எதிராக ஒன்றிணையும் முல்லை மக்கள்!!! அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக ஒன்றிணையுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை’-இன் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இப்போராட்டம் இடம்பெறவுள்ளது. மகாவலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை, முல்லைத்தீவு மாவட்ட தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள், கலை, கலாசார, பண்பாடுகள் சிதைக்கப்படுவதை...

முல்லைத்தீவில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த பாராளுமன்ற உறுப்பினருக்கு விளக்கமறியல்!!

உடையார் கட்டில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு உடையார் கட்டு மகா வித்தியாலத்தில் உயர்தர பரீட்சை எழுதி வரும் லூத்மாத...

பெண்களுடன் சேட்டைவிட்ட சிம் விற்பனையாளர்கள் நையப்புடைப்பு!!!

கைபேசி இணைப்பு சிம் அட்டை விற்பனை செய்யும் இருவர், இளம் பெண்களுடன் சேட்டை விட்டதால், அவர்களை பெண் குரலில் கதைத்து அழைத்த இளைஞர்கள் சிலர் நையப்புடைத்து அனுப்பிவைத்தனர். அத்துடன், அவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளும் தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு கொக்குவிலில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். “யாழ்ப்பாணம், கலட்டிச்...

முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனின் கோரிக்கையை நிராகரித்தது கூட்டமைப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செயலணியில் கலந்து கொள்ளவேண்டாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அடுத்த வாரம் கூடவுள்ளது. இந்நிலையில் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை அபிவிருத்தி செயலணியில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும், தமிழ் தேசிய...

சிகரெட் விற்பனையை நிறுத்துவதில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் முதலிடம்!

“சிகரெட் உள்ளிட்ட புகைப்பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் விதமாக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக நாட்டின் 107 நகரங்களில் (கிராம மட்ட நகரங்கள்) அவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. அதில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகமாக 22 நகரங்களில் புகையிலைப் பொருள்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது” என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டுக்கு முற்றிலும்...

விபத்துக்குள்ளான 6 இந்திய மீனவர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படையினர்

வடக்கு கடற் பகுதியில் விபத்துக்குள்ளாகி இருந்த இந்திய மீனவர்கள் 6 பேரினை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படை குழு ஒன்றே இவ்வாறு நீரில் மூழ்கி கொண்டிருந்தவர்களை காப்பாற்றியுள்ளனர். குறித்த மீனவர்கள் தங்களது படகு விபத்துக்குள்ளானதை அடுத்து நீரில் தத்தளித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு காப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு...

வடக்கின் வன்முறைகளுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு?- டக்ளஸ்

வடக்கின் வன்முறை சம்பவங்களுடன் அரசியல்வாதிகளும் தொடர்புபட்டுள்ளனரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளதாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே செயலாளர் நாயகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சபையில் தொடர்ந்து உரையாற்றிய அவர், ”வடக்கின் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஒரு சில...

யாழில் பிரபல பெண் அரசியல்வாதியின் செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஊடகவியலாளர் ஒருவரும், பிரபல பெண் அரசியல்வாதி ஒருவரின் செயலாளரும் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர் நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய அரசியல்வாதியின் செயலாளர் இன்று கைதாகியுள்ளார். சுவிஸ் நாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 7...

குள்ள மனிதர்களின் தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை – சட்டம் ஒழுங்கு அமைச்சர்

யாழில் தமிழ் மக்களை அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படும் குள்ள மனிதர்கள் தொடர்பாக இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை என, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 27 இன் கீழ் 2ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) எழுப்பப்பட்ட கேள்விக்கு...

காங்கேசன்துறையில் விகாரையை புனரமைக்கும் பணி ஆரம்பம்!

யுத்தகாலத்தில் அழிவடைந்த காங்கேசன்துறை தயிலிட்டி திஸ்ஸ விகாரையை மீள புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றுள்ளது. பாதகட விமலஞான தேரர் தலைமையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். 1946ம் ஆண்டு எழுதப்பட்ட உறுதி அடிப்படையில் பாதகட விமலஞான தேரர்...

போதனா வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் குடாக் கடலில் கொட்டப்படுவதை உறுதி செய்தார் பணிப்பாளர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படும் விவகாரம் யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் வெளிச்சத்துக்கு வந்தது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி நேற்று நேரில் ஆராய்ந்தார். ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படுவதை அவர் உறுதி செய்தார். யாழ் மாநகரசபையின் அமர்வு நேற்றுமுன்தினம் மாநகர...

வடக்கில் 88 சதவீதமான காணிகளை இராணுவம் விடுவித்துள்ளது – யாழில் ஜனாதிபதி

“வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 88 சதவீதமான காணிகள் தற்போது அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 12 சதவீதமும் வெகுவிரைவில் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டுமென்ற தெளிவான கொள்கையை அரசு கொண்டிருக்கின்றது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் மயிலிட்டி பாடசாலை மற்றும் அதனையண்டிய காணிகளை எதிர்வரும் இரண்டு வாரத்துக்குள் விடுவிக்க...

வடக்கு முதல்வரின் கருத்திற்கு முன்னாள் போராளிகள் கண்டனம்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிவகுமார் ரகுநாத் தெரிவித்துள்ளார். இராணுவ ஒட்டுக்குழுக்களுடன் இணைந்து முன்னாள் போராளிகள் தமிழர்களை காட்டிக்கொடுப்பதாக அண்மையில் ஊடகங்களிடம் பேசிய முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,...

வருட இறுதிக்குள் தீர்வு வேண்டும்: ஜனாதிபதியிடம் மாவை வலியுறுத்தல்

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு இந்த வருட இறுதிக்குள் தீர்வினை முன்வைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார். மேலும், வடக்கில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மயிலிட்டி துறைமுக புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) மயிலிட்டி துறைமுக...

சாவகச்சேரியில் ரயிலுடன் மோதி 2 பேர் உயிரிழப்பு!

சாவகச்சேரி அரசடி பகுதியில் ரயிலுடன் மோதி 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புகையிரத கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிஞ்ஞை விளக்கு எரிந்துகொண்டிருந்த போதும், புகையிரத கடவையினை கடக்க முற்பட்ட வேளை, கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற கடுகதி ரயில் மோட்டார்...
Loading posts...

All posts loaded

No more posts