வடக்கு கடற் பகுதியில் விபத்துக்குள்ளாகி இருந்த இந்திய மீனவர்கள் 6 பேரினை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படை குழு ஒன்றே இவ்வாறு நீரில் மூழ்கி கொண்டிருந்தவர்களை காப்பாற்றியுள்ளனர்.
குறித்த மீனவர்கள் தங்களது படகு விபத்துக்குள்ளானதை அடுத்து நீரில் தத்தளித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு காப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.