யாழ் மாவட்ட பாதிக்கப்பட்ட பட்டதாரிகளை மிரட்டும் அரச அதிகாரிகள்!!

மாவட்ட செயலகங்களில் கடந்த பட்டதாரி பயிலுனர் நேர்முகத்தேர்வில் தகவலறியும் சட்டமூலத்தின் ஊடாக தாம் பெற்ற புள்ளி பட்டியலை தத்தமது மாவட்ட செயலகத்தில் பாதிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் குறித்த சட்டமூலத்தின் ஊடாக தத்தமது பெறுபேறுகளை அறிய முடியாது இருப்பதாகவும் அதற்கான பொறுப்பு வாய்ந்த அதிகாரி தமது விண்ணப்பத்தை ஏற்கமறுப்பதாகவும்...

வடக்கில் பல அமைப்புக்களினால் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன: மாவை

வடக்கில் படையினரால் மட்டுமல்ல, பல அமைப்புக்களினால் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் நிலங்களை அபகரிப்பதை கண்டித்து, செவ்வாய்கிழமை முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு...
Ad Widget

மணலாறு பறிபோனால் தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம்: கஜேந்திரகுமார்

மணலாறு மண் பறிபோனால் தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் நிலங்களை அபகரிப்பதை கண்டித்து, நேற்று (செவ்வாய்கிழமை) முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

கிளிநொச்சியில் வெடிமருந்துகளுடன் இருவர் கைது!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் வெடிமருந்துகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பூநகரி சோதனை சாவடியில் சந்தேகத்தின் பேரில் வாகனமொன்றை சோதனையிட்ட போது குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பூநகரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வாகனத்திலிருந்து 1 கிலோ 80 கிராம் வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தேராவில் வலைப்பாடு பகுதிகளில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பூநகரி...

முல்லைத்தீவில் மாபெரும் பேரணி! அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்

தமிழர் தாயகத்தை துண்டாடும் வகையில் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை கண்டித்து முல்லைத்தீவில் பாரிய கண்டனப் பேரணியும், போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுக்கேணி ஆகிய...

பாலியல் தொல்லை வழங்கிய வட்டுக்கோட்டை ஆசிரியரின் மறியல் நீடிப்பு

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் விளக்கமறியலை இன்று வரை நீடித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த வழக்கை தொடர்ச்சியாக விசாரித்து வரும் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, விடுப்பில் இருப்பதால் வழக்கு...

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்கின்றார் வடக்கு ஆளுநர்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடுநிலையாக செயற்படுவதால், ஆளும் மற்றும் எதிர் தரப்பினரிடம் இருந்து பல்வேறு குற்றச் சாட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்படுகின்றது. இந்நிலையில் அவருக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். பலாங்கொடயில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இராணுவத்தினரிடம் இருந்து ஆலயத்தை மீட்டுத் தருமாறு மக்கள் கோரிக்கை!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்தினை, இராணுவத்தினரிடம் இருந்து பெற்று தாருமாறு ஆலய தர்மகர்த்தா சபையினர் மற்றும் ஆலய பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த 15 வருட காலத்திற்கு மேலாக குறித்த ஆலய பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அதனால் ஆலயத்திற்கு சென்று வழிபட முடியாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் ஆலய சூழலில்...

நல்லூருக்கு சென்ற இளைஞனை காணவில்லை: பொலிஸில் முறைப்பாடு!

யாழ்ப்பாணம் நல்லூர் திருவிழாக்கு சென்ற இளைஞனை காணவில்லை என அவரது தாய் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்.கந்தர்மடம் மணல்தறை வீதியை சேர்ந்த சி. சரண்ராஜ் (வயது 18) எனும் இளைஞனையே காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றுபவர் எனவும்...

வடக்கில் இராணுவ சின்னங்களை அகற்ற முடியாது என்கிறார் ருவான் விஜேவர்தன!

வடக்கில் காணப்படுகின்ற இராணுவ சின்னங்களை எச்சந்தர்ப்பத்திலும் அகற்ற முடியாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இன்னும் இராணுவ சின்னங்களை காணப்படுவதாகவும் அவற்றை அகற்ற...

முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றங்கள் இல்லை: ஜனாதிபதி உறுதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் எவ்வித சிங்கள குடியேற்றங்களும் முன்னெடுக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடலின்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்திப்பின்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மகாவலி எல் வலயத்திட்டத்தில் பெரும்பான்மையினர் குடியேற்றப்பட்டு வருவதாக தெரிவித்து,...

அபிவிருத்திக்காக அரசியல் தீர்வை விலைப் பேசமாட்டோம்: சம்பந்தன்

எமக்கு அரசியல் தீர்வே மிகவும் முக்கியமானதாகும். எனவே, அபிவிருத்திகளுக்காக அரசியல் தீர்வை ஒருபோதும் விலைப்பேச மாட்டோம் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடல், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. குறித்த ஒன்றுகூடலின்போது உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு...

தமிழர் தாயகப்பகுதிகள் ஆக்கிரமிப்பு!- ஜனநாயக ரீதியிலான கண்டனப் போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரம்பரிய தமிழ்க் கிராமங்களில், மகாவலி அபிவிருத்தி என்னும் போர்வையில் நடைபெறும் நில அபகரிப்பையும், அங்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களையும் எதிர்த்து மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவையினால் (இன்று) செவ்வாய்க்கிழமையன்று (28-08-2018) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் (யாழ்-பல்கலை) தனது ஆதரவைத் தெரிவிப்பதுடன், தமிழர் தாயகத்தின் இதயபூமியாம் முல்லை மண்ணினைப்...

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் ஜனாதிபதியினால் பல்வேறு திட்டங்கள் ஆராய்வு.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலக்தில் இடம்பெற்றது. இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் காணிகள், பாடசாலைகள் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் கைத்தொழிற்சாலைகளை மீள...

வடக்கு முதல்வர் இரட்டை வேடம் போடுவதாக ஜே.வி.பி குற்றச்சாட்டு

வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெற்கில் ஒரு முகத்தையும், வடக்கில் இன்னொரு முகத்தையும் காட்டி இரட்டை வேடம் போடுவதாக, மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. தெற்கில் சிங்களவர்களுடன் சிநேகிதம் கொண்டு, அவர்களை உறவுக்காரர்களாக்கியுள்ள விக்னேஸ்வரன், வடக்கில் சிங்களவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என நாடாகமாடுவதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. யாழ். பொதுநூலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை...

பிரபாகரனின் உடலில் இருந்து சீருடையை அகற்ற உத்தரவிட்டார் சரத் பொன்சேகா!

மிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தில் இருந்து, புலிகளின் சீருடையை அகற்றுமாறு, இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே உத்தரவிட்டார் என்று மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போரில் இராணுவ அணிகளை வழிநடத்திய தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, இராணுவத்தில் இருந்து அண்மையில் ஓய்வு...

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார். பத்திரிகைகளில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும் அரசாங்கம் இவ்வாறான தீரமானத்தை மேற்கொள்ளவில்லை என்றும் செயலாளர் தெரிவித்தார். எரிவாயு நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக...

உயரமான முன்னாள் போராளிக்கு மனோ கணேசன் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார்!

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் நேற்றையதினம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் நடமாடும் சேவை நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றது. இதன்போது புனர்வாழ்வளிக்கப்பட்ட உயரமான முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் சட்டப்பூர்வமாக திருமணம்...

தமிழர் தாயகத்தை கூறுபோடுவதற்கு எதிராக ஒன்றிணைவோம்: சத்தியலிங்கம் அழைப்பு

தமிழரின் பாரம்பரிய நிலமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலத்தொடர்பை நிரந்தரமாக பிரிக்கும் மகாவலி திட்டத்தை எதிர்க்க முல்லை மண்ணில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஜனநாயக ரீதியான மக்கள் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், வவுனியா மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்....

தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு வேறு வடிவில் தோற்றம்: வரதராஜன் பார்த்திபன்

முள்ளிவாய்க்காலுடன் தமிழ்மக்கள் மீதான இன அழிப்பு முடிவடையவில்லை. இன்றும் அது வேறு வடிவில் தொடருகின்றதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பிய கண்டன அறிக்கையிலையே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இரத்தம் இன்றி சத்தம் இன்றி மதத்தின் பெயராலும் மகாவலி அதிகாரசபை...
Loading posts...

All posts loaded

No more posts