- Friday
- May 2nd, 2025

பட்டதாரிப் பயிலுநர் ஆசிரியர்களாக நியமனம் வழங்கப்பட்ட 2,500 பேருக்கு ஆசிரிய சேவையில் நிரந்தர நியமனங்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த, தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்ற வேண்டியுள்ளதால், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் புதிய மின்மாற்றி நிறுவுவதற்காகவும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என யாழ். மாவட்ட மின்பொறியியலாளர் தெரிவித்தார். (more…)

வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரைக் கடத்த முயற்சித்த இனந்தெரியாதோரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், பல்கலைக்கழக பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. (more…)

கார்த்திகை விளக்கீட்டுக்காக சுட்டி விளக்குகள் விற்பனை செய்து கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

சுயதொழில் ஓய்வூதிய திட்டத்திற்கு 1500 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் யாழ். மாவட்ட இணைப்பாளர் பாக்கியராஜா பிரதீபன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வீதியில் தனியார் மற்றும் அரச பஸ்களில் பயணிகளை ஏற்றுவதோ இறக்குவதோ தடைசெய்யப்பட்டுள்ளது. இதனை மீறும் சாரதிகள், நடத்துநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா. (more…)

வருமானவரி செலுத்துவோர் வரிமதிப்பாண்டான 2011/2012 ஆம் ஆண்டுக்கான வருமானவரி விவரத்திரட்டுக்களை இந்தமாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் உரிய வரிக் கொடுப்பனவுக்கான பணம் செலுத்தும் படிவத்துடன் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உள்நாட்டு இறைவரித் திணைக்கள யாழ்.பிராந்திய பிரதி ஆணையாளர் பா.சிவாஜி தெரிவித்துள்ளார். (more…)

அரசால் யாழ். மாவட் டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இராணுவம் உதவிகளைச் செய்து வருகின்றது. அத்துடன் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல வழிகளிலும் பாடுபடுகிறது என்று யாழ். மாவட்டப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)

கோழி இறைச்சியை வாங்கிவிட்டு காசோலையைக் கொடுத்து ஏமாற்றியுள்ளார் என்று வியாபாரி ஒருவருக்கு எதிராகத் தென்னிலங்கை வியாபாரி ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

வடபகுதி கடற்பரப்பில் கடல் அட்டை பிடிப்பற்கு கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. நீண்டகாலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் மட்டும் கடலட்டை பிடிக்கலாம் என்று அத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ந.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். (more…)

யாழ் போதானா வைத்திசாலையின் ஆய்வுகூடத்திற்குத் தேவையான இராசாயனப் பொருட்கள் பற்றக்குறையாகக் காணப்படுவதால் ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யாழ் போதானா வைத்திசாலையின் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தாரஜா தெரிவித்துள்ளார். (more…)

தீவகத்தை மையமாகக் கொண்டு ஏழு துறைகளில் பெரும் அளவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கு இந்தோனேஷிய நிறுவனமான பி.ரி.பனோறோமா என்ற நிறுவனம் ஜனாதிபதியிடம் அனுமதியைப் பெற்றுள்ளது என்று நிறுவனத் தலைவர் வா.இராசையா தெரிவித்துள்ளார். (more…)

ஆசிரியர்களுக்கான இடமாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஜனவரி மாதம் இடமாற்றம் வழங்கப்படுமென்று வட மாகாண கல்வி பணிப்பாளர் ஆர்.செல்வராஜா இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.வடமாகாணத்தில் உள்ள 12 வலயத்திலும் இருந்து 1500 ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளார்கள். (more…)

கூடங்குளம் அணு உலை பாடங்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதால் அதற்கு எதிராக பேதமின்றி ஒன்றிணைவோம் என கூடங்குளத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. (more…)

கார்த்திகைத் தீபத்திருநாளைக் கொண்டாடுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்து மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இந்து மகா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: (more…)

தங்கம் எனக் கூறி போலி நகைகளை வங்கிகளில் அடகு வைத்தார் என்ற குற்றச்சாட்டில் நெல்லியடியில் ஒருவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த காலங்களில் நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் தங்கம் எனக் கூறி போலி நகைகளை 4 வங்கிகளில் 4 தடவைகள் அடகு வைத்து பணத்தைப் பெற்றிருந்தார். (more…)
பருத்தித்துறை பிரதேசசபை குடத்தனை உப அலுவலகம் 13 வருட கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அம்பனில் கடந்த வாரம் முதல் செயற்பட ஆரம்பித்துள்ளது. (more…)

88 ஆண்டுகளைக் கடந்து இன்றும் தலைநிமிர்ந்து நிற்கிறது உடுவில் மகளீர் கல்லூரி. உடுவில மகளிர் கல்லூரியின் 188 ஆம் ஆண்டு நிறைவு தினமும் கிறிஸ்மஸ் தினக்கொண்டாட்டமும் உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி ஷிராணிமில்ஸ் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. (more…)

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை சில தினங்களுக்கு தொடரும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதன் போது கடல் கொந்தளிப்பாக காணப்படும். (more…)

வட மாகாணத்தில் அணுக்கதிர்வீச்சு பாதுகாப்பு கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அணு உலைகளின் கதிர் வீச்சுக்களினால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய சுற்றாடல் அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் நோக்கில் வட மாகாணத்தின் நான்கு இடங்களில் இந்த கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட உள்ளன. (more…)

All posts loaded
No more posts