Ad Widget

சாரதிப் பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சிப்பட்டறை ; இலங்கையில் தமிழ் மொழி மூலமான பயிற்சி யாழில்

drivingclass_jaffnaஇலங்கை சாரதிகள் பயிற்சிப் பாடசாலைகள் சங்கங்கத்தினால் வீதிச் சட்டங்களுக்கு அமைவாக சாரதிப்பயிற்சிப் பாடசாலைகளில் எவ்வாறு சாரதிகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்பது தொடர்பில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த சாரதிப் பயிற்சிப் பாடசாலைகளின் பயிற்றிவிப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று யாழ். பொதுநூலகத்தில் நடைபெற்றது.

இலங்கையில் தமிழ் மொழி மூலமான பயிற்சி முதல் முறையாக யாழ். மாவட்டத்தில் நடாத்தப்பட்டுள்ளது.

இதற்கு வடக்கு கிழக்கில் இருந்து 75 சாரதிப்பயிற்சிப் பாடசாலைகளினுடய 153 பயிற்றுவிப்பாளர்களும் இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் சாரதிகளாக வருபவர்கள் கல்வி அறிவுள்ளவர்களும் இருப்பார்கள் இல்லாதவர்களும் இருப்பார்கள் இதனால் அவர்களுக்கு வீதி ஒழுங்கு சட்டத்தின் மூலம் அவர்களை பயிற்றுவிப்பது தொடர்பாகவும் இங்கு விளக்கப்பட்டது.

அத்துடன் ஒவ்வொரு பயிற்றுவிப்பாளர்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும் வாகனங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பிலும் விளக்கப்பட்டது.

இதன் போது அகில இலங்கை சாரதிகள் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் செயலாளர் , மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர், மற்றும் யாழ். மாவட்ட அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்களத்தினைச் சேர்ந்தவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Related Posts