Ad Widget

மனித உரிமை மீறல்களை தடுக்கவும்: ஜூலி பிஷப்பிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு

tnaஇலங்கையில் குறிப்பாக வடக்கில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள், இராணுவ நெருக்குவாரங்கள், மற்றும் சட்டவிரோதமான குடியேற்றங்கள் அதிகரித்துள்ளன. இவைகளை தடுத்துநிறுத்துமாறு அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சிப் பிரதித்தலைவர் ஜூலி பிஷப்பிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிப் பிரதித்தலைவர் ஜூலி பிஷப்பிற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது,

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கான பிரதான நோக்கம் என்ன? சட்டவிரோமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்காக என்ன? என்ன? வழிவகைகளை கையாள்கின்றனர். என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிப் பிரதித்தலைவர் ஜூலி பிஷப் தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் கேட்டறிந்துக்கொண்டார்.

இதேவேளை, இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வோரை தடுப்பதற்கான நோக்கத்துடனேயே தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிப் பிரதித்தலைவர் ஜூலி பிஷப் கூறினார்;.

அச்சுறுத்தல், வேலைவாய்ப்பின்மை மற்றும் சட்டவிரோத குடியேற்றங்கள் ஆகியன காரணமாகவே யாழ். மாவட்டத்தில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு மக்கள் சட்ட விரோதமாக செல்கின்றனர். என்று எடுத்துரைத்துள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகள் யாழ்.மாவட்டத்தில் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்குவதற்கு அரசாங்கத்தினை வலியுறுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி உரிய தீர்விவை பெற்றுத்தருவதாக அவர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரிடம் எடுத்துரைத்துள்ளார்.

இதன்போது, யாழில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஊடக அடக்குமுறை தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

Related Posts