எரியுண்ட மாணவி உயிரிழப்பு

uni_girlஎரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

யாழ். புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் துளசிக்கா (வயது 22) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

யாழ். புகையிரத வீதியில் எரியுண்ட நிலையில் காணப்பட்ட மேற்படி மாணவி, பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு யாழ். போதானா வைத்திசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டடிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்று காலை அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Posts