Ad Widget

வெளிச்சம் இன்றி பயணித்த நான்கு துவிச்சக்கர வண்டியை பறிமுதல் செய்த கோப்பாய் பொலிஸார்!

Cycleதுவிச்சக்கர வண்டிக்கு “லைட்” போடாத காரணத்தால் நான்கு பேரின் துவிச்சக்கரவண்டிகள் கோப்பாய் பொலிஸாரினால் நேற்று இரவு 7.30 மணிக்கு இருபாலையில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இருந்து கூலி வேலைக்குச் சென்று விட்டு சிறுப்பிட்டியில் உள்ள தங்கள் வீடுகளுக்குச் சென்று கொண்டிந்த நான்கு பேரை இருபாலைப் பகுதியில் மறித்த கோப்பாய் போக்குவரத்து பொலிஸார், அவர்களின் துவிச்சக்கரவண்டியை கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனார்.

துவிச்சக்கரவண்டிக்கு வெளிச்சம் போட்டு வரவேண்டும் என்று சட்டம் போடப்பட்டுள்தால் அவர்களின் துவிச்சக்கரவண்டி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நான்கு துவிச்சக்கரவண்டிகளையும் எதிர்வரும் 31 ஆம் திகதி நீதிமன்றத்தில் வந்து பெற்றுச் செல்லுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நான்கு பேரும் நாளாந்தம் தொழில் செய்து வாழ்ந்து வருபவர்கள். துவிச்சக்கர வண்டியில் 15 கிலோமிற்றருக்கு அப்பால் சென்று தொழில புரிந்து வருவதுடன் காலை நேரத்தில் தங்கள் பிள்ளைகளையும் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு அனுப்பிட்டு வருவதாகவும் பொலிஸாரின் இந்தச் செயற்பாட்டால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related Posts