- Friday
- May 2nd, 2025

யாழ். பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் கடந்த 2 வருடங்களாக முற்றாக சேதமடைந்து காணப்பட்ட அனர்த்த எச்சரிக்கை கோபுரம் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு இன்று சனிக்கிழமை விடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்ட அதிகாரி சங்கரப்பிள்ளை ரவி தெரிவித்தார். (more…)
யாழ். கோண்டாவில் கிழக்கு பகுதியிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. மாவீரர் தினம் 2012 என்று எழுதப்பட்டு, மாவீரர் புகைப்படங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். (more…)

போரில் தமது கணவரையும், பிள்ளைகளையும் இழந்து ஆதரவற்றிருக்கும் வடக்குத் தமிழ்ப் பெண்களுக்குப் புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்த அரசு மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்கள் மகிழ்ச்சிக்குரியவையல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. (more…)

ஊழியர் சேம இலாப நிதிக்கு விண்ணப்பிப்பவர்களின் கைவிரல் அடையாளம் பெறும் பணிகளை இனிமேல் நிரந்தரமாக யாழ்.மாவட்ட தொழில் திணைக்களத்தில் ஆரம்பிப்பித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (more…)

கனடா நாட்டு தமிழ் வர்த்தகர் கழகம் வடக்கில் முதலிடுவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் முதலீடு செய்வதற்கான எண்ணக் கருப்பத்திரத்தை வெளிவிவகார அமைச்சில் கனடா வாழ் தமிழ் வர்த்தகர்கள் சமர்ப்பித்துள்ளதாகத் தெரியவருகிறது. (more…)

கையில் வைத்திருந்த பட்டாசுப் பெட்டிக்குள் தீப்பொறி விழுந்து தீப்பற்றிக் கொண்டதால் அதற்குள் இருந்த பட்டாசுகள் படபடவென வெடித்துச் சிதறின. இதனால் இரண்டு இளைஞர்கள் கைகளிலும் உடலிலும் கடும் காயங்களுக்கு உள்ளானார்கள். (more…)

வடமராட்சி கடற்பிரதேசத்தில் தொண்டமானாறு தொடக்கம் முனை வரையும் உள்ள 33 வான்களும் மூடப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடற்றொழிலுக்கு வள்ளங்கள், கட்டுமரங்களை கடலுக்குள் கொண்டு செல்லவும், மீளக் கொண்டுவரவும் முடியாது பெரிதும் சிரமப்படுகின்றனர். (more…)

மின்னஞ்சல் (ஈமெயில்) மூலமாகவும், குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாகவும் பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வருவதால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் பா.சிவதீபன் முன்னெச்சரிக்கை செய்துள்ளார். (more…)

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் சிறுகுற்றம் புரிந்த 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.இ.எரிக்பெரேரா தெரிவித்தார். (more…)

யாழ். மாவட்டத்தில் இராணுவ படை முகாம் அமைப்பதற்காக அரச காணியொன்றைம் தருமாறு இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட அதிகாரி விமல்ராஜ் தெரிவித்தார். (more…)

வடக்கு மீனவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.கடலுக்கு செல்லும் அதே இடத்திலேயே மீள் திரும்ப வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கடினமானதாகும். (more…)

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகளுக்கு எதிராக தலா 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

யாழ். வேலணை மண்கும்பான் கடற்கரையோரத்தில் பாரியதளம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற கடற்படையினர் தீவக் பகுதிகளிலுள்ள தளங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். (more…)

வல்வெட்டித்துறையில் புலிக்கொடி பறந்தமை தொடர்பில் எவரும் கைது செய்ய்படவில்லை புலனாய்வு விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார். (more…)

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த, தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்ற வேண்டியுள்ளதால், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் புதிய மின்மாற்றி நிறுவுவதற்காகவும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமைவரை மின்விநியோகம் தடைப்படும் என யாழ். மாவட்ட மின்பொறியியலாளர் தெரிவித்தார். (more…)

வடக்கில் இதுவரை 6, 519, 761 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக ஹலோறஸ்ட் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் தெரிவித்தது. (more…)
இந்துக்களின் பாரம்பரிய பண்டிகை தீபத்திருநாள் அன்று தீபமேற்றுவதற்கு தடை விதிக்க இராணுவத்திற்கு அதிகாரமில்லை' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். (more…)
27 ஆம் திகதி மக்கள் ஆலயங்களில் விசேட வழிபாடுகளை நடாத்தவும் மணி அடிப்பதற்கும் யாழ். மாவட்டத்தில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார்.யாழ். பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன் போது எதிர்வரும் 27 ஆம் திகதி இந்துக்களின் விழாவான காத்திகை...
யாழ்.நகரில் இடம்பெற்றுவரும் வீதிப் புனரமைப்புப் பணிகள் உரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தப்படவில்லை. வீதிப் புனரமைப்புப் பணிகள் இடம்பெறும்போது பொது மக்களின் போக்குவரத்துக் குறித்து மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டும். (more…)
கடன்களைப் பெற்றுத் தொழில் செய்யும் போது கடனுக்கு உரிய வட்டியும் செலுத்தி இலாபமும் கிடைக்குமாயின் கடன்பெற்று தொழில் செய்யலாம். கடனைப்பெற்று அதற்குரிய வட்டியையும் முதலையும் செலுத்த முடியாது என்று தெரிந்தும் கடனைப் பெற்று விட்டு தலைமறைவாகுவது ஒட்டு மொத்த வர்த்தக சமூகத்துக்கே அவமானத்தை ஏற்படுத்தும். எனவே வர்த்தகர்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும். (more…)

All posts loaded
No more posts