Ad Widget

சவூதிக்கான பணிப்பெண் வயது 25 ஆகவும், சிங்கப்பூருக்கு 21 ஆகவும் வரையறை!– அமைச்சர் கெஹலிய

Age-Limitஇலங்கையில் இருந்து சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்களாக செல்வோருக்கான வயது எல்லை குறைந்தது 25 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கின் ஏனைய ஏழு நாடுகளுக்கு செல்லும் பணிப்பெண்களுக்கான வயது 23 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சவூதிக்கு குறைந்த வயதில் பணிப்பெண்ணாக சென்று குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டியபோது அதனை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ரிசானா நபீக் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டமையை அடுத்தே இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.

இதேவேளை சிங்கப்பூர், ஹொங்கொங், மலேசியா, சைப்பிரஸ் ஆகிய நாடுகளுக்கான பணிப்பெண்களின் வயதை 21 ஆக வரையறுக்க இலங்கையின் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களை வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்புவது சம்பந்தமாகப் பல் வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதனால் அவ்வப்போது அது தொடர்பான சட்டங்களில் மாற்றம் செய்யப்படுகின்றது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சவுதி உட்பட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பணிப்பெண்களுக்கான பயிற்சிக் காலம் 21 தினங்களாகவும், சிங்கப்பூர் உட்பட்ட நாடுகளுக்கு செல்பவர்களுக்கான பயிற்சிக்காலம் 30 தினங்களாகவும் நிர்ணயிக்கப்பட்டது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts