Ad Widget

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண அத்தாட்சிப் பத்திரங்களைப் பெறுவதற்கு முத்திரைக்கு பதில் பணம்

registrar_departmentபிறப்பு, இறப்பு மற்றும் திருமண அத்தாட்சிப் பத்திரங்களைப் பெறுவதற்கு முத்திரைக்கு பதிலாக கட்டணமாக பணம் அறவிடப் படுவதால் புதிய நடை முறைகள் தெரியாத விண்ணப்பதாரிகள் பிரதேச செயலகங்களில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர்.

இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண அத்தாட்சிப் பத்திரங்களுக்கு முத்திரைக்கு பதிலாக பணப் பற்றுச்சீட்டு கட்டணமாக அறவிடப்படவேண்டும் எனும் புதிய நடைமுறை பதிவாளர் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பதிவாளர் திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறைகள் தொடர்பாக விண்ணப்பதாரிகள் அறிந்து கொள்ளாத காரணத்தால் பழைய நடைமுறைகளுக்கு ஏற்ப விண்ணப்பப்படிவங்களில் முத்திரைகளை ஒட்டி பிர தேச செயலகங்களில் விண்ணப்பிக்கின்றனர்.

புதிய நடைமுறைகளை நடைமுறைப்படுத்தி வரும் பிரதேச செயலகங்கள் முத் திரைகள் ஒட்டப்பட்ட விண்ணப்பப்படிவத்தை ஏற்க மறுப்பதுடன் விண்ணப்பதாரருடன் முரண்பட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்தப் புதிய நடை முறையில் முத்திரைக் கட்டணத்தின் இரு மடங்கு பணமாக செலுத்த வேண்டி இருப்பதால் முத்திரைக்கென பணத்தை வீணாகச் செலுத்த வேண்டி இருப்பதுடன் புதிய விண்ணப்பப் படிவங்களை மீண்டும் பெற்றுப் பூரணப்படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண அத்தாட்சிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள பதிவாளர் திணைக்களத்தால் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் புதிய நடைமுறைகளைப் பொது மக்கள் தெரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் பிரதேச செயலக விளம்பரப் பல கைகள் மற்றும் கிராம சேவகர் அலுவலகங்களில் காட் சிப்படுத்துவதன் மூலம் வீணடிக்கப்படுகின்ற முத்திரைக்கான பணத்தையும் விண் ணப்பதாரிகளின் அசௌகரியங்களையும் குறைத்துக் கொள்ள முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Related Posts