Ad Widget

128 அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபை தவறியுள்ளது – தவராசா

128 அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வடமாகாண சபை தவறியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென 690 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆயினும், வடமாகாண சபையினால் 16 மில்லியன் ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்படவில்லை என்று வடமாகாண சபைக்குரிய இணையத்தில் வெளியிட்ட கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராசா இந்த பிரச்சினையை இம்மாதம் 24ஆம் திகதி அவையில் பிரஸ்தாபித்தார்....

யாழ். எஸ்.எஸ்.பி கொலைக்குற்றச்சாட்டில் கைது

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன கொலை குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொம்பே பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளரைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே விமலசேன கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.எஸ்.பியுடன் தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணத்திற்கு பதவியேற்று வருவதற்கு...
Ad Widget

போதனா வைத்தியசாலை கழிவுகளை அகற்ற பணிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 நாள்களாகக் கழிவகற்றப் படாததால் அங்கு குப்பைகள் நிரம்பி வழிகின்றன. அது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரின் செயலாளருடனான சந்திப்பை அடுத்து 2 நாள்களில் அவற்றை அகற்றுமாறு முதலமைச்சர் யாழ்.மாநகர சபைக்குப் பணித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பதில் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.ஸ்ரீப வானந்தராஜா தெரிவித்தார். யாழ்.மாநகர எல்லையில் குப்பை அகற்றுவது தொடர்பான சிக்கல்...

மணிரத்தினம் இயக்கத்தில் ‘ஓகே கண்மணி’ – டீசர்

துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், மணிரத்தினம் இயக்கத்தில் ஓகே கண்மணி டீசர்.

பிப்ரவரி கடைசி வெள்ளி… 5 புதுப் படங்கள் வெளியீடு

பிப்ரவரி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நேற்று. இந்த நாளில் 5 புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச் சட்டைதான் இவற்றில் பெரிய படம். மற்றவை கிடைத்த இடைவெளியில் வெளியானால் போதும் என்று ரிலீஸ் ஆகியிருக்கின்றன. டாணா என்ற தலைப்புடன் ஆரம்பமான படம் இது. பின்னர் சத்யா மூவீசுக்கு பணம் கொடுத்து, காக்கிச் சட்டை...

திருட்டு விசிடி, நடிகைகளின் ஆபாசப் படங்கள் – விவாதிக்கிறது நடிகர் சங்க செயற்குழு

நடிகர் சங்க செயற்குழு இன்று கூடுகிறது. செயற்குழு கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் ராதாரவி துணை தலைவர்கள் விஜயகுமார், காளை, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் தமிழ் சினிமாவுக்கு அச்சுறுத்தலாக உள்ள திருட்டு விசிடியை ஒழிப்பது குறித்தும், சமீபமாக நடிகைகளின் ஆபாசப் படங்கள்...

கணவரை சேர்த்து வைக்க கோரி கவிஞர் தாமரை போராட்டம்

பிரபல சினிமா பாடலாசிரியர் தாமரை. ‘மின்னலே’ படத்தில் எழுதிய வசீகரா பாடல் தாமரையை பிரபலபடுத்தியது. ´சுப்ரமணியபுரம்´ படத்தில் எழுதிய கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் பாடல் மூலம் முன்னணி பாடலாசிரியர் ஆனார். ´உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்´ படத்தில் எழுதிய மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா, ´தெனாலி´ படத்தில்...

யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

இந்திய வீட்டுத்திட்டத்தில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்து யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மதியம் 1.30 மணிக்கு தொழுகை முடிந்ததும் ஐந்து சந்திப் பகுதியில் கூடிய மக்கள் வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும், எனவே அரச அதிகாரிகள் உடனடியாக...

மே.தீவுகள் அணி வீரர்களைப் பந்தாடிய தெ.ஆபிரிக்கா

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி 409 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. உலகக் கிண்ணத் தொடரின் 19வது போட்டியாக பி பிரிவிலுள்ள தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் சிட்னியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அந்த...

மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக பாரவூர்தி உரிமையாளர்கள் போராட்டம்!

மகேஸ்வரி நிதியம் தமது தொழிலை அழித்துவிட்டது என்று கூறி யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் மகேஸ்வரி நிதிய அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்தினர். ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே!, எங்கள் வைப்புப் பணத்தை வட்டியுடன் திருப்பித் தா!, சேமிப்பு பணத்தை எமது சங்கத்திடம் மீள ஒப்படை! போன்ற கோரிக்கைகள் முன்வைத்தே...

வலி.வடக்கில் 1000 ஏக்கர் நிலங்களை மூன்று கிழமைகளில் விடுவிக்க நடவடிக்கை

வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச்சொந்தக்காரர்களிடமே கையளிக்க 3 கிழமைகளில் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக்...

வடமாகாணசபை தீர்மானத்தின் பிரதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைப்பு

வடமாகாண சபையில் கடந்த 10ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தின் பிரதிகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், பொதுச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, 'தமிழ் மக்களின் உண்மையான அழிவுகளையும் இழப்புக்களையும் விளங்கிக்கொண்டு நீதியான நியாயமான முறையில் செயற்பட...

20 வருடப் பிரச்சினையை குறுகிய நாட்களில் முடிக்க முடியாது – சுவாமிநாதன்

பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது 20 வருடங்களுக்கு மேலாக இருக்கின்ற பிரச்சினையாகும். இதனை குறுகிய நாட்களுக்குள் தீர்க்க முடியாது. எனது கடமையை நான் உணர்ந்து செல்லும் இடங்களிலுள்ள பிரச்சினைகளை படிப்படியாக தீர்ப்பேன் என மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். மீள்குடியேற்ற அமைச்சர் முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்புப் ஆகிய பகுதிகளுக்கு...

இளைஞனை காணவில்லை

யாழ்ப்பாணம், மாலுசந்தி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கநாதன் மயூரன் (வயது 21) என்ற இளைஞனை கடந்த 25ஆம் திகதி முதல் காணவில்லையென அவரது தாயாரால் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. 25ஆம் திகதி காலை வீட்டுக்கு வந்திருந்த இரண்டு இளைஞர்கள் குளிர்பான நிலையமொன்றின் வேலைக்காக தனது மகனை அழைத்துச் சென்றதாகவும் அப்போது சென்றவர், இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும்...

இரு பிரதேச சபைத்தேர்தலுக்கு இடைக்கால தடை

நாளை சனிக்கிழமை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தினால் இன்று வெள்ளிக்கிழமை இடைக்காலை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

86 இந்திய மீனவர்கள் கைது

சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 86 பேரை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து வியாழக்கிழமை (26) மாலை கைது செய்ததாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர்...

உயர்தரத்திற்கு கணித பாடம் அவசியமில்லை!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி உயர்தரத்திற்கு விண்ணப்பிக்க கணித பாடத்தில் சித்திபெற்றிருக்க வேண்டியது அவசியமில்லை என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் சில தொழில்கள், பாடநெறிகள் போன்றவற்றிற்கு கணித பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க...

உண்மைகளைக் கண்டறிவதன் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்!

"இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. உண்மைகள் கண்டறியப்படுவதன் ஊடாகவே இந்தத் தீர்வை எட்ட முடியும் என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே, தற்போதுள்ள அரசு உண்மையைக் கண்டறிந்து, சர்வதேசத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும்." - இவ்வாறு தென்னாபிரிக்க வெளிவிவகார பிரதி...

புதைத்துவைக்கப்பட்டிருந்த வெடிமருந்தே சாவகச்சேரியில் தீப்பற்றியதாம்!

சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது குண்டுவெடிப்பல்ல என்றும் புதைத்துவைக்கப்பட்டிருந்த வெடி மருந்தே சத்தத்துடன் தீப்பற்றி எரிந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வீட்டின் அருகில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் புதைத்துவைக்கப்பட்டிக்கலாம் எனக் கருதப்படும் கொட் 8 எனப்படும் வெடி மருந்தே திடீரென தீப்பற்றி எரிந்தது எனவும் இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையெனவும் அவர்கள்...

தமிழ்நாட்டிலிருந்து 40 அகதிகள் தாயகம் திரும்புகின்றனர்!

தமிழ்நாட்டின் பல முகாம்களில் அகதிகளாக வசித்த 40 பேர் தாமாகவே யூ.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தின் உதவியுடன் இலங்கைக்கு மீண்டும் திரும்பினர் என 'தி இந்து' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் இம் மக்கள் தாமாக முன்வந்து தங்கள் நாட்டுக்குத் திரும்புவது இதுவே முதல் தடவை. எனினும் நாடு திரும்பும் இந்த அகதிகளுக்கு அரசாங்கம்...
Loading posts...

All posts loaded

No more posts