Ad Widget

யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

இந்திய வீட்டுத்திட்டத்தில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்து யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று மதியம் 1.30 மணிக்கு தொழுகை முடிந்ததும் ஐந்து சந்திப் பகுதியில் கூடிய மக்கள் வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும், எனவே அரச அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியும் இவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Related Posts