Ad Widget

ஜோதிடத்தை நம்பமாட்டேன்: மஹிந்த

நான் இனிமேலும் ஜோதிடத்தில் நம்பிக்கை வைக்கப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானின் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் டவுன் நிறுவனத்தில் கடமையாற்றும் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்துக்கு தடை

மோட்டார் சைக்கிள்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு பயணிப்பது, மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் தடை செய்யப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதன் காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
Ad Widget

செப்ரெம்பரில் அறிக்கை திட்டமிட்டபடி வெளியிடப்படும் : வடக்கு முதல்வரிடம் ஐ.நா குழு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பிலான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் திட்டமிட்டபடி வெளியிடப்படும் என யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக வடக்கு முதலமைச்சர் தெரிவித்தார். நான்கு நாள்கள் உத்தியோக பூர்வ...

கமல் ஹாஸனை இயக்குகிறார் பிரபு தேவா!

அடுத்து கமல் ஹாஸனை இயக்கப் போகிறார் பிரபு தேவா என்று தகவல் வெளியாகியுள்ளது. நடன இயக்குநர், நடிகர், இப்போது இயக்குநர் என பல முகங்கள் கொண்டவர் பிரபு தேவா. தெலுங்கு, தமிழ், இந்தியில் இவர் இயக்கும் படங்களுக்கு பெரும் மார்க்கெட் உள்ளது. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் பிரபு தேவா....

ஜனாதிபதி நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (03) வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.அவர் ஜனாதிபதியாக தெரிவாகிய பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி வடக்கு கிழக்கு அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலும் திருகோணமலை மாவட்ட குழுக்கூட்டத்திலும் ஜனாதிபதி நாளை கலந்துகொள்ளவுள்ளார்....

தெல்லிப்பழை தமிழ்ச் சங்கத்தின் தமிழ் விழா!

தெல்லிப்பழை தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரிமா கழக மண்டபத்தில் தமிழ்ச் சங்கத் தலைவர் ச.சிவானந்தராசா தலைமையில் தமிழ் விழா இடம் பெற்றது. தெல்லிப்பழை காசிப்பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து விருந்தினர்கள் இடப மாடுகள் இரண்டு முன்னே வர அதனைத் தொடர்ந்து சங்கு, தப்பட்டை, பேரிகை, மேள வாத்தியங்ள் முழங்க கொடி, ஆலவட்டம் தாங்கி...

அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள கூட்டமைப்பு முன்வர வேண்டும் – ஆனந்தசங்கரி

அதிகார பரவலாக்கலையும் ஜனநாயகத்தையும் இலங்கை அரசிடம் கோரி நிற்கும் நாம், நமக்கு கிடைக்கும் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளவும் ஜனநாயக வழிமுறைகளை மேற்கோள்ளவும் பழகிக்கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். ஆனந்தசங்கரி திங்கட்கிழமை (02) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'கிழக்கு மாகாண சபையில்...

மைத்திரி-மஹிந்த விரைவில் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று விரைவில் இடம்பெறவுள்ளது. என்று அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். உத்தேச தேர்தல் முறைமையில் மேற்கொள்ளவேண்டிய மாற்றம் தொடர்பிலான பரிந்துரைகளை அமுலாக்கம் செய்வது குறித்து இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட 100...

வடக்கிற்கு இன்று வரும் ஐ.நா. குழு! – ஆளுநர், முதல்வருடன் சந்திப்பு

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்படுவது செப்டெம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ள நிலையில், நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு நேற்றுமுன்தினம் கொழும்பு வந்த ஐ.நா. பேரவையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தலைமையிலான...

கச்சதீவுக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு கடமைக்குச் சென்று திரும்பிய பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். குருநாகல், கிரில்ல என்னும் இடத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையாக எல்.ஆர்.செனதீர (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். படகில் திரும்பிக்கொண்டிருந்த இவர் தவறி கடலுக்குள்...

10 வருடத்தில் செய்ய முடியாதவற்றை 30 நாட்களில் செய்தோம் – ரணில்

கடந்த 10 வருடங்களான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தால் செய்யமுடியாதவற்றை 30 நாட்களில் நாம் செய்துள்ளோம். எதிர்வரும் பொதுத்தேர்தலில் முழு நாடாளுமன்றத்தையுமே ஒரு ஆட்சியின் கீழ் கொண்டுவந்து, மக்களுக்கு மேலும் நன்மைகளை பெற்றுக்கொடுப்பது மாத்திரமல்லாது, இளைஞர் யுவதிகளின் மனதில் கொழுந்துவிட்டெரியும் பிரச்சினைகளையும் தீர்த்துவைப்போம்' என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 'மனுசத் மினுசுன் பலயய்-...

தலைமன்னார் – இராமேஸ்வரத்துக்கான படகு சேவை மீண்டும் ஆரம்பம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை கௌரவிக்கும் வகையில் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான படகுச் சேவையை மீண்டம் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், இந்தியாவின் ஆதரவில் புனரமைக்கப்பட்ட மன்னார் - மதவாச்சிக்கு இடையிலான புகையிரத சேவையினையும்...

வடமாகாண சபை பிரேரணைகளை நிறைவேற்றவென தனிப் பிரேரணை வேண்டும்

'வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை செயற்படுத்த வேண்டும் எனக்கோரி மற்றுமொரு பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்' என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். யாழ்ப்பாணம், ஏழாலை, மயிலங்காடு ஸ்ரீமுருகன் சனசமூக நிலைய திறப்பு விழா நிகழ்வு சனிக்கிழமை (28) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28ஆவது அமர்வு இன்று திங்கட்கிழமை (02) ஆரம்பமாகிறது. இந்த அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சனிக்கிழமை (28) இரவு, ஜெனீவா சென்றடைந்தார். இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்...

இலங்கை அரச ஊடகங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன

இலங்கையில் நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச ஊடக நிறுவனங்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சார்பாக, மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அரச ஊடக நிறுவனங்கள் செயற்பட்டது மட்டுமன்றி அவரது பிரதான போட்டி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன...

நண்பனுக்காக பாட்டு பாடிய கௌதம் மேனன்

‘மொழி’, ‘அபியும் நானும்’ ‘பயணம்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராதா மோகன். இவர் தற்போது இயக்கி வரும் படம் ‘உப்பு கருவாடு’. இதில் கருணாகரன், நந்திதா, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, குமரவேல், சாம்ஸ், ரக்ஷிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்டீவ் வாட்ஸ் இசையமைக்கிறார். இவருடைய...

வடக்கு ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றனர்!

ஆட்சிமாற்றத்தின் பின்னரும் வடமாகாண ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றனர், இவ்வாறான நிலை தொடர்ந்தும் நீடிக்காமல் தடுக்கப்படவேண்டும் என சர்வதேச ஊடக கூட்டமைப்பு (IFJ ) தெரிவித்துள்ளது. யாழ். குடாநாட்டுக்கு வருகைதந்திருந்த குறித்த அமைப்பினர், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். அதன் பின்னர் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர்கள் கூறியதாவது,...

100 நாள் வேலைத்திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது அரசு!

தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் அதன் முன்னேற்றம் சம்பந்தமாக பொது மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக விசேட பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- பொதுமக்கள் பங்கேற்புடன் மிகவும் பயன்மிக்க, வினைத்திறன் மிக்க மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வகையில் இந்த...

இளவாலைப் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

இளவாலைப் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணிகளையும், வீடுகளையும் விடுவிக்கக்கோரி உரிமையாளர்கள் பொலிஸ்நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 13 வீடுகளையும், 8 விவசாயக்காணிகளையும் உள்ளடக்கி இளவாலைப் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளையும் வீடுகளையும் விடுவிக்கக்கோரியே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளவாலைப் பங்கு தந்தை ஜெயரஞ்சன் அடிகளார் தலைமையில் பொலிஸ் நிலையத்தின் முன்பாகக்...

வாள்வெட்டில் இருவர் படுகாயம்

சாவகச்சேரி பெருங்குளம் சந்தியில் சனிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினார்கள். கெருடாவிலைச் சேர்ந்த செல்வராசா ரவீந்திரன் (வயது 28), சிவகுமார் கோபன் (வயது 23) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். முன் பகை காரணமாக இவர்கள் இருவரும் வாளால் வெட்டப்பட்டதாகவும் சந்தேகநபர்களை கைது செய்தவதற்கான...
Loading posts...

All posts loaded

No more posts