Ad Widget

128 அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபை தவறியுள்ளது – தவராசா

128 அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வடமாகாண சபை தவறியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென 690 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

thavarasa-epdp

ஆயினும், வடமாகாண சபையினால் 16 மில்லியன் ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்படவில்லை என்று வடமாகாண சபைக்குரிய இணையத்தில் வெளியிட்ட கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராசா இந்த பிரச்சினையை இம்மாதம் 24ஆம் திகதி அவையில் பிரஸ்தாபித்தார்.

690 மில்லியன் ஒதுக்கீட்டில் 128 அபிவிருத்தி திட்டங்களை இவ்வருடம் மார்ச் முடிவுக்கு முன்னர் முடிப்பதாக 2014 டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியன்று வடமாகாண சபை ஏற்றிருந்தது.

இந்த பிரச்சினையை தவராசா பிரஸ்தாபித்த போது பல்வேறு காரணங்களால் வருட முடிவுக்கு முன்னர், ஒதுக்கப்பட்ட சகல நிதியையும் வடமாகாண சபையினால் பயன்படுத்த முடியவில்லை என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார். இதனால்தான் மார்ச் முடியும் முன்னர் மீதி வேலையை பூரணப்படுத்த தீர்மானித்ததாக அவர் கூறினார்.

வடமாகாண இணையத்தளத்தில் கணக்கறிக்கை வெளியானதையிட்டு தனக்கு எதுவும் தெரியாதென்று கூறி வடமாகாண முதலமைச்சர், கணக்கறிக்கையில் ஏன் திரபுபடுத்திய கணக்கு வந்தது என்பதற்கு தன்னால் பதில் கூற முடியாதென்றும் தெரிவித்துவிட்டார்.

பயன்படுத்தாத நிதியை திறைசேரியின் அங்கீகாரமின்றி பயன்படுத்த முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார்.

Related Posts