Ad Widget

‘அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது’ கதறியழுத உறவுகள்

பாதுகாப்பு படைகளால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு காணாமற்போனவர்களின் உறவுகள் தமக்கு நீதிகோரி யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (04) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை காணாமற்போனோர் பாதுகாவலர் சங்கம் ஏற்பாடு செய்தது. கடந்த 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று அறியாத...

தேர்தலுக்கு வருவீர்களா என்று அப்பாவிடமே கேளுங்கள் – நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும் கடற்படையின் லெப்டினன் பதவிநிலை வகிப்பவருமான யோஷித்த ராஜபக்ஷ, பொலிஸ் குற்றவியல் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக இன்று காலை 8.40க்குச் சென்றார். இதன்போது, யோஷித்தவின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவும் சென்றிருந்தனர். வாக்குமூலத்தை வழங்கிவிட்டு, அவ்விருவரும் இன்று முற்பகல் 10.40க்கு பொலிஸ் குற்றவியல் பிரிவிலிருந்து வெளியே வந்தனர்....
Ad Widget

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்கள் அநுராதபுரத்தில்

சர்வதேச பெண்கள் தின கொண்டாட்டங்கள் எதிர்வரும் 7, 8 ஆகிய தினங்களில் காலை 9.00 மணிக்கு அநுராதபுரம் சல்காது மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது என மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று காலை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்....

நான் நாட்டு மக்களுடனேயே ஒப்பந்தம் செய்துள்ளேன் – ஜனாதிபதி

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை ஆனால் நாட்டு மக்களுடன் மட்டுமே நான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. அதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

சேவாக், கில்கிறிஸ்ட், டோணியை விட பாகிஸ்தானின் அப்ரிடிதான் அதிரடி வீரராம்!

பாகிஸ்தானின் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி, இன்றைய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். குறைநத் பந்துகளை சந்தித்து 8 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்பதுதான் அந்த சாதனையாகும். இதன் மூலம் உலகின் முன்னணி அதிரடி வீரர் தான்தான் என்பதை அப்ரிடி பறைசாற்றியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக...

விலை விபரம் இல்லாமையால் ரூ. 1 இலட்சம் அபராதம்

யாழ். நகரப் பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் விலைவிபரம் இல்லாமல் பொருள் விற்பனை செய்த குற்றத்துக்காக 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து யாழ். நீதவான் பொ.சிவகுமார் செவ்வாய்க்கிழஇமை (03) உத்தரவிட்டார். விலை விபரம் இல்லாத கண்ணாடி சுத்திகரிப்பு ஸ்பிரேயை வைத்திருந்த குற்றத்துக்காக, யாழ். பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் அங்காடி உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில்...

உறவுகளை மீட்டுத்தரக் கோரி ஜனாதிபதிக்கு மகஜர்

காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரி ஜனாதிபதிக்கான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரி வட பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போன பொதுமக்கள் பெற்றோர் பாதுகாவலர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட உறவுகள் காணாமல் போன...

பரவலாகும் சுமந்திரனுக்கெதிரான நடவடிக்கைகள்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிற்கு மரணதண்டனை விதித்து குடாநாடெங்கும் கொடும்பாவிகள் தொங்கவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரி யாழ்.வந்து திரும்பியுள்ள நிலையில் வடமராட்சி, தென்மராட்சி மற்றும் யாழ்.நகரென இக்கொடும்பாவிகள் இன்று இரவோடிரவாக தொங்கவிடப்பட்டுள்ளதாக கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் தேசியக்கூட்டமைப்பு இளைஞரணியினை சேர்ந்தவர்களென தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இளைஞர் குழுக்களே மரணதண்டனை எச்சரிக்கையுடன் இக்கொடும்பாவிகளை கட்டித்தொங்கவிட்டிருந்தததாக செய்திகள்...

சேவைக்காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு ஏப்ரலில் இடமாற்றம்

வன்னிப் பகுதியில் தமது சேவைக்காலத்தை நிறைவு செய்த தகுதியுடைய ஆசிரியர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் புதன்கிழமை (04) தெரிவித்தார். வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றி இடமாற்றத்துக்கு விண்ணப்பித்த, தகுதியுடைய ஆசிரியர்கள் அனைவருக்கும் ஏப்ரல் 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையிலான இடமாற்ற கடிதங்கள் மாகாண கல்வி அமைச்சின்...

தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதியிடம் மனுக் கையளிப்பு!

யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கோரி மனு ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் நேரடியாகச் சமர்ப்பித்தனர். யாழ். அரச செயலகத்துக்கு சென்று இந்த மனுவை அவர்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தனர். தாதிய பயிற்சி நெறியை பூர்த்தி செய்து இறுதிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நேரத்தில் தங்களிடம் ஆங்கில பாடத்தில் திறமைச்சித்தி கோரப்பட்டு,...

தென்னிலங்கை அரசியல்வாதிகளை தமிழ் மக்கள் நேசக்கரம் நீட்டி வரவேற்கின்றனர் – டக்ளஸ்

தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்த்த காலம் மாற்றமடைந்து, நேசக்கரம் நீட்டி தமிழ் மக்கள் வரவேற்கும் காலம் தற்போது நடைபெறுகின்றது. அந்த மாற்றத்துக்கு முக்கிய பங்காளிகளாக நாங்கள் இருந்துள்ளோம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடமாகாண விசேட அபிவிருத்திக்குழுக்கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை...

உலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்

உலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.போப்ஸ் இதழ் வருடாந்தம் வெளியிடும் உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலிலேயே இவர் முதலிடத்தில் உள்ளார். உலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலை போப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், பேஸ்புக்ஸ் நிறுவுனர் மாக் ஜூக்கர்பேக் முதல் 20 இடத்துக்குள் வந்துள்ளார். அத்துடன், கூடைப்பந்தாட்ட நட்சத்திர விளையாட்டு வீரர் மைக்கல்...

மஹிந்தவின் விடுதியையும் மைத்திரி பார்வையிட்டார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, காங்கேசன்துறையில் கட்டிய ஜனாதிபதி விடுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செவ்வாய்க்கிழமை (03) பார்வையிட்டார். ஜனாதிபதியாக பதிவியேற்ற பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் மரியாபரணம் சுமந்திரன் ஆகியோருடன் சென்று பார்வையிட்டார். விடுதி தொடர்பில் கடற்படையினரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

துப்பாக்கி சூட்டு காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள பிஸ்சி ஒழுங்கையில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தை இன்று (4) மீட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி ஒழுங்கையில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர். வவுனியா, வைரவபுளியங்குளம் பிரதேசத்தில் உணவகமொன்றை நடத்திவருபவரான வடிவேலழகன் (வயது 45) என இவர்...

முகப்புத்தகத்தில் விருப்பம் கேட்கும் ஆபாச இணைப்பை அழுத்தாதீர்கள்

ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச தகவல்கள் அடங்கிய இணைப்புகளை (லிங்க்) முகப்புத்தக கணக்குகளுக்கு அனுப்புவதன் மூலம் முன்னெடுக்கப்படவிருந்த பாரியதொரு சமுக சீரழிவு, அமெரிக்காவிலுள்ள முகப்புத்தக தலைமையக அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்தார். இவ்வாறான இணைப்புக்கள் கிடைப்பதான ஐந்து முறைப்பாடுகள், இலங்கை...

அதிக சத்தத்துடன் இசை கேட்டால் செவித் திறன் பாதிக்கும்

ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் இசையை கேட்பதால் கேட்கும் திறன் பாதிப்படைவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆகவே ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேல் இசையை கேட்பதை தவிர்ககுமாறு அந்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இசையை அதிகமாகவும் பெரிய சத்தமாகவும் கேட்பதால் 1.1 பில்லியன் இளைஞர்கள் தமது கேட்கும் திறனை நிரந்தரமாக இழக்கும்...

தாயைப் பார்க்க இலங்கை வந்த பகீரதி தடுப்புக்காவலில்

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்த முருகேசு பகீரதி என்ற தாய் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார். 2005-ம் ஆண்டில் பிரான்ஸ் சென்றிருந்த பகீரதி, தனது 8 வயது மகளுடன் இலங்கை வந்து கிளிநொச்சியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒருமாத விடுமுறையை கழித்துவிட்டு, பிரான்ஸ் திரும்பும் வழியிலேயே நேற்று முன்தினம் திங்கட்கிழமை...

ரஜினியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வடிவேலு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளிவந்த லிங்கா திரைப்படம் தோல்வியடைந்தது. தற்போது இப்படத்தில் சந்தானம் எப்படி வந்தார் என்பது குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. முதலின் சந்தானம் கதாபாத்திரத்தில் வடிவேலுவை...

எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை 50–வது ஆண்டு விழாவை கொண்டாட திரளும் ரசிகர்கள்

எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘எங்க வீட்டு பிள்ளை’. இதில் நாயகியாக சரோஜா தேவி நடித்து இருந்தார். நம்பியார், நாகேஷ் போன்றோரும் நடித்து இருந்தனர். சாணக்யா இயக்கினார். இப்படத்தில் இடம் பெற்ற ‘‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், ‘கண்களும் காவடி’, ‘குமரி பெண்ணின் உள்ளத்திலே’ ‘மலருக்கு தென்றல்’, ‘நான் மாந்தோப்பில்...

ஐந்தாம் ஆண்டு வரையான மாணவர்களுக்கு ஒருவேளை உணவு வழங்க நடவடிக்கை

முதலாம் ஆண்டு தொடக்கம் ஐந்தாம் ஆண்டு வரையான பாடசாலை மாணவர்களுக்கு ஒரு நேர உணவு பெற்றுக் கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன இன்று (03) பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை...
Loading posts...

All posts loaded

No more posts