Ad Widget

எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை 50–வது ஆண்டு விழாவை கொண்டாட திரளும் ரசிகர்கள்

எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘எங்க வீட்டு பிள்ளை’. இதில் நாயகியாக சரோஜா தேவி நடித்து இருந்தார். நம்பியார், நாகேஷ் போன்றோரும் நடித்து இருந்தனர். சாணக்யா இயக்கினார்.

enkaveddu-pillai-mgr

இப்படத்தில் இடம் பெற்ற ‘‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், ‘கண்களும் காவடி’, ‘குமரி பெண்ணின் உள்ளத்திலே’ ‘மலருக்கு தென்றல்’, ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’, ‘பெண் போனால்’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. 1965–ல் இப்படம் வெளியானது.

தற்போது இப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனதை விழாவாக கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். வருகிற 15–ந் தேதி தியாகராய நகரில் உள்ள சர்.டி.பி. தியாகராயர் ஹாலில் இவ்விழா நடக்கிறது.

உரிமைக்குரல் மற்றும் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கத்தினர் இவ்விழாவை நடத்துகின்றனர். இதில் ‘எங்க வீட்டு பிள்ளைங படத்தில் நடித்த சரோஜாதேவி, ரத்னா, பாடல்களை பாடிய பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் ராஜஸ்ரீ, சச்சு, ஜெயசித்ரா, ஷீலா, சி.ஐ.டி. சகுந்தலா, ஜெயந்தி, கண்ணப்பன் போன்றோர் பங்கேற்கின்றனர்.

உரிமைக்குரல் பி.எஸ்.ராஜூ, எம்.ஜி.ஆர். பிரதீப், எம்.எஸ்.மணியன், ஆர்.இளங்கோவன், கே.எஸ்.மணி உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Related Posts