சர்வதேச சரித்திர வல்லுநர்களின் உதவியுடன் எமது அரசியலை ஆராய வேண்டும்! காலம் இதுவே என்கிறார் முதலமைச்சர்!!

அரசியல் ரீதியாகப் எம்மைப் பற்றி நாம் ஆராய வேண்டிய காலத்தை எட்டியுள்ளோம் என்றே கூறவேண்டும். அதாவது இதுவரை காலமும் எமது நாட்டின் சரித்திரம் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகத் தொடர்ந்து வந்த அரசாங்கங்களினால் பிறழ்வாகவும் - தவறாகவும் எழுதப்பட்டு உண்மைக்குப் புறம்பான சரித்தர செய்திகள் எமது மாணவ சமுதாயத்திற்குக் கூறப்பட்டு வந்துள்ளன. உண்மை என்ன என்பதை ஆராய்ந்து...

முன்னாள் போராளிகளை கொச்சைப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு – வித்தியாதரன் ஆவேசம்

முன்னாள் தமிழீழ விடுதலை புலிகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறந்தள்ளி சர்வதேச நிகழ்சி நிரலுக்கு அமைய செயற்படுகின்றது என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வித்தியாதரன் தெரிவித்தார். எதிர்காலத்தில் தமிழ் கட்சிகளுடனோ அன்றேல் அரசுடன் இணைந்து ஜனநாயக போராளிகள் கட்சி செயற்படவிருக்கிறதா என வினவியமைக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்பது தமிழீழ விடுதலைப்புலிகளால்...
Ad Widget

ஜே.பி.எல் போட்டிகள் ஆரம்பம்

ஜே.பி.எல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபதுக்கு– 20 கிரிக்கெட் போட்டிகள் இன்று (31) முதல் யாழ்ப்பாணம் இந்து மற்றும் கொக்குவில் இந்து கல்லூரிகளின் மைதானங்களில் நடைபெறவுள்ளன. வருடாவருடம் நடத்தப்பட்டு வரும் இந்தச் சுற்றுப்போட்டி இம்முறை 3வது வருடமாக லைக்கா மொபைல் அனுசரணையில் நடத்தப்படுகின்றது. இம்முறை சுற்றுப்போட்டியில் 12 அணிகள் பங்குபற்றுவதுடன், அணிகள் இரண்டு...

ரவியின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி; 11 பேர் காயம்

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு ப்ளூமணெ்டல் வீதியில் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு வேன்களில் வந்த சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனையடுத்து காயமடைந்த...

ஒரு நாடு இருதேசம் -அர்த்தமற்ற கொள்கை! – சிவிகே காட்டம்

இருதேசம் ஒரு நாடு என்பது ஒரு அர்த்தமில்லாத கோசம் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நவாலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் 2015ம் ஆண்டின் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இருதேசம்...

போதைப்பொருளை ஒழிப்பதற்கான யாழ்.மாவட்ட நீதிபதிகளின் நடவடிக்கைகளில் மேல்நீதிமன்றம் தலையீடு செய்யாது

சமூக நலன்களுக்கு விரோதமாக கலாசார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் அதிகரித்துள்ள போதைப்பொருளை அடியோடு இல்லாமல் ஒழிப்பதற்காக யாழ்.குடாநாட்டு மாவட்ட நீதிபதிகள் எடுக்கும் நடவடிக்கைகளில் அநாவசியமாக மேல் நீதிமன்றம் தலையீடு செய்யமாட்டாது என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார். 26 கிலோ மற்றும் 141 கிலோ அளவிலான கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தமைக்காக, இரண்டு வெவ்வேறு...

மக்கள் முழுமையமான அரசியல் பலத்தை தரும் பட்சத்தில் மேலும் பல மக்கள் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம் – டக்ளஸ் தேவானந்தா

மக்களை ஒருங்கிணைத்து கிராமங்களை மட்டுமல்லாது பிரதேசம், மாவட்டம் என மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதே எமது நோக்கமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். நாவற்குழி அற்புத அன்னை சனசமூக நிலையத்தில் இன்றைய தினம் (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யாழ்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்

கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன் வீதியில் பயணப்பொதி ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணுடைய சடலம் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதான கார்த்திகா என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஊடகங்களில் வெளியான புகைப்படங்களை பார்வையிட்ட குறித்த பெண்ணின் கணவர்,...

உள்ளகப் பொறிமுறையில் தீர்வுகாண தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாரில்லை – சுமந்திரன்

தமிழர் பிரச்சினைக்கு உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் தீர்வு காண தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணங்கியுள்ளதாகப் பொய்யான பிரச்சாரம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன். யாழ்ப்பாணம் - உசன் ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்றிரவு (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்...

யாழ்ப்பாணத்தில் இறப்பர் பாதணிகள் உற்பத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆரம்பித்து வைத்தார்

யாழ்ப்பாணத்தில் இறப்பர் பாதணிகளின் உற்பத்தியை வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று வியாழக்கிழமை (30.07.2015) ஆரம்பித்து வைத்துள்ளார். வட்டு கிழக்கு சித்தங்கேணியில் இயங்கும் அந்திரான் ஜனசக்தி தோற்பொருள் உற்பத்தியாளர் விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் பெண்களுக்கான ஒரு தொழில் முயற்சியாகவே இந்த இறப்பர் பாதணிகள் உற்பத்தி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கூட்டுறவு...

பேஸ்புக் குழுவுடன் ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு

முகநூல் (Facebook) சமூக வலைதளத்தின் தெற்காசியாவவுக்கான பொதுக்கொள்கைப் பணிப்பாளர் அன்கி தாஸ் தலைமையிலான ஒரு முகநூல் குழுவினர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கான ஜனாதிபதியின் முயற்சிகளை முன்னெடுப்பதில் முகநூலை வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.

புறக்கோட்டையில் பயணப் பொதியில் தமிழ் பெண்ணின் சடலம் – அடையாளம் காண பொது மக்களிடம் உதவி கோரல்

கொழும்பு - புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் ஒரு தமிழ் பெண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் குறித்த சடலம் பயணப் பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் அனுராதபுரம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டது. எனினும் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை....

பெரும்பான்மை சமூகத்தின் தேவையை நிறைவேற்றும் அதிகாரம் எமது கைக்கு வரும் – சம்பந்தன்

எதிர்காலத்தில் பெரும்பான்மை சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அதிகாரம், எமது கைக்கு வருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மூதூரில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதற்கான முதல் அடியை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டார்....

பிள்ளைகளின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனியுங்கள் , பெற்றோர்களுக்கு பொலிஸாரின் ஆலோசனை

யாழ்.குடாநாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாராகிய நாம் என்றும் தயாராக இருக்கின்றோம் என யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே.வூட்லர் தெரிவித்தார். சிறுவர் துஸ்பிரயோகத்திலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பது தொடர்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இடம்பெற்றது. அதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்...

ஓகஸ்ட் 2 வரை ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்

ரயில் திணைக்கள தொழிற்சங்க கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தம் காரணமா, நாடு பூராகவும் உள்ள ரயில் சேவைகள் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி வரை ஸ்தம்பிதமடையும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில்வே திணைக்கள தொழிலாளர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறு கோரியே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கொடி விவகாரம்: யட்டிநுவர பி.சபை முன்னாள் தலைவர் கைது

கண்டி - யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துஷிதகுமார வலகெதர கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தேசிய கொடியை ஒத்த திரிபுபடுத்தப்பட்ட கொடி போடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் முன்னாள் பிரதேச சபைத் தலைவரை கைது செய்துள்ளனர்.

முழு அரசு மரியாதைகளுடன் கலாம் உடல் நல்லடக்கம்

மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பூவுடல் முழு அரசு மரியாதையுடன் ராமேஸ்வரம் பேக்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான அப்துல் கலாம் அவர்கள் மேகாலயாவின் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கிடையே பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக ஷில்லாங்கின்...

வாக்காளர் அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம், இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கென தேர்தல்கள் செயலகத்திடமிருந்து நேற்றைய தினம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள், தபால் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இன்று ஆரம்பிக்கப்படும் இவ் விநியோக நடவடிக்கையானது, எதிர்வரும் 10ஆம் திகதியுடன் நிறைவடையுமென தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். குறிப்பாக...

சூரியனில் பெரும் வெடிப்பு !! தொலைத்தொடர்பு சாதனங்களில் பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை!!

இன்றையதினம் சூரியனில் பெரும் வெடிப்பு ஒன்று ஏற்படலாம் என்றும் , அதில் இருந்து தோன்றும் துகள்கள் பூமிக்குள் பிரவேசிக்க இருப்பதால் சில பிரச்சனைகள் தோன்றலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூரியனில் இதுபோன்ற வெடிப்புகள் அவ்வப்போது நிகழ்வது வழக்கம். ஆனால் இது வழமைக்கு மாறாக பெரிய வெடிப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் துகள்கள் பூமியை அடைய இருப்பதனால்...

இ.போ.ச. – தனியார் பஸ் சேவையினர் பருத்தித்துறையில் மோதல்!

தொழில் போட்டி காரணமாக இ.போ.ச பஸ் சேவையினருக்கும் தனியார் பஸ் சேவையினருக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவம் நேற்று புதன்கிழமை 7 மணியளவில் யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை பஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை - முல்லைத்தீவு போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட இ.போ.ச. பஸ், தனியார் பஸ்ஸை முந்திச் சென்றதாலேயே இந்த மோதல்...
Loading posts...

All posts loaded

No more posts