Ad Widget

வாக்காளர் அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம், இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கென தேர்தல்கள் செயலகத்திடமிருந்து நேற்றைய தினம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள், தபால் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

இன்று ஆரம்பிக்கப்படும் இவ் விநியோக நடவடிக்கையானது, எதிர்வரும் 10ஆம் திகதியுடன் நிறைவடையுமென தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஆகஸ்ட் 2ஆம் மற்றும் 9ஆம் திகதிகள், வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விஷேட தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக 16 மில்லியன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அச்சிடுவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது அதில் 14 மில்லியன் வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டு நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சகர் காமினி பொன்சேக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts