Ad Widget

முன்னாள் போராளிகளை கொச்சைப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு – வித்தியாதரன் ஆவேசம்

முன்னாள் தமிழீழ விடுதலை புலிகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறந்தள்ளி சர்வதேச நிகழ்சி நிரலுக்கு அமைய செயற்படுகின்றது என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வித்தியாதரன் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் தமிழ் கட்சிகளுடனோ அன்றேல் அரசுடன் இணைந்து ஜனநாயக போராளிகள் கட்சி செயற்படவிருக்கிறதா என வினவியமைக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்பது தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டதாகவும் அவர்களால் வழிநடத்தப்பட்டு 2009 வரை அவர்களுக்காகவே செயற்பட்ட கட்சியெனவும்,

அக்கட்சியை சிதைக்கவோ பிளவுபடுத்தவோ கூடாது என்கின்ற நோக்கில் இணைந்து செயற்பட முன்னாள் போராளிகள் முயற்சித்ததாகவும் அதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவித்த அவர், அவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ் போராளிகளின் போராட்டத்திற்கு எதிர்பு போராட்டம் நடத்தியவர்களை தம்முடன் இணைத்திருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் ஏனைய போராட்ட இயக்கங்களான புளெட் மற்றும் ரெலோ ஆகிய அமைப்புக்களும் தம்முடன் இணையவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தென்னிலங்கையை உதாசீனம் செய்கின்ற நிலைப்பாட்டில் தமது கட்சி இல்லையென்றும் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுமாகில் அதனை பரிசீலிப்பதற்கு முன்வருவோமென அவர் தெரிவித்தார்.

Related Posts