Ad Widget

சூரியனில் பெரும் வெடிப்பு !! தொலைத்தொடர்பு சாதனங்களில் பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை!!

இன்றையதினம் சூரியனில் பெரும் வெடிப்பு ஒன்று ஏற்படலாம் என்றும் , அதில் இருந்து தோன்றும் துகள்கள் பூமிக்குள் பிரவேசிக்க இருப்பதால் சில பிரச்சனைகள் தோன்றலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூரியனில் இதுபோன்ற வெடிப்புகள் அவ்வப்போது நிகழ்வது வழக்கம். ஆனால் இது வழமைக்கு மாறாக பெரிய வெடிப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதன் துகள்கள் பூமியை அடைய இருப்பதனால் , பூமியில் சில பகுதிகளில் மோபைல் டெலிபோன் வேலைசெய்யாமல் போகலாம் என்றும். மேலும் உங்கள் GPS கருவிகள்(சாட்டலைட் நவகேட்டர்கள்) வேலை செய்யாமல் போகலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காரில் சாட்டலைட் நவகேட்டர் இருந்தால் , அது திடீரென வேலை செய்யாமல் போகும் நிலை உருவாக கூடும்.

இன் நிலை சிலவேளைகளில் 3 நாட்களுக்கு கூட நீடிக்கலாம் என்று லண்டன் வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுவரை எந்த வெடிப்பும் உணரப்பட வில்லை என்றும். இது இன்னும் சில மணிநேரங்களில் நடைபெறலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள்.

Related Posts