Ad Widget

சினிமா பிரபலங்களை கவர்ந்த டப்ஸ் மாஷ் அப்

மாஷ் அப் கேள்விப்பட்டிருப்போம். அது என்ன டப்ஸ் மாஷ் அப்? இதுதான் தற்போது இணையதளங்களில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. டப்ஸ் மாஷ் அப் என்பது ஆண்ட்ராய்டு போன்களில் இலவசமாக தரவிறக்கம் செய்யப்படும் ஒரு அப்ளிகேஷன் ஆகும். இதை, ஆண்ட்ராய்டு செல்போன்கள் வைத்திருப்பவர்கள் பதிவிறக்கம் செய்துகொண்டால், இதில் நிறைய ஆடியோக்கள் வரும். அதில், நமக்கு தேவையான ஆடியோவை...

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, கமல்?

ஷங்கர் இயக்கும் படத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ரஜினியும், கமலும் ‘அபூர்வராகங்கள்’, ‘மூன்று முடிச்சு’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘16 வயதினிலே’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற படங்களில் இணைந்து நடித்தார்கள். மொத்தம் 12 படங்களில் சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு பிரிந்து விட்டார்கள். இருவரும் தனியாக நடித்து முன்னணி...
Ad Widget

“தமிழ் எழுத்துக்கள் நேற்று – இன்று – நாளை” நூலின் அறிமுகவிழா

தமிழறிஞரும் மூத்த ஆசிரியருமான ம.கங்காதரம் அவர்களின் “தமிழ் எழுத்துக்கள் நேற்று - இன்று – நாளை” நூலின் அறிமுகவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 19.04.2015 அன்று நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் த.சிறீஸ்கந்தராசா வரவேற்பரை நிகழ்த்துகிறார். முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்த யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நா.சண்முகலிங்கன் அவர்கள் நூலாசிரியர் ம.கங்காதரம்...

வடக்கிலிருந்து இந்தியா சென்று கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களை பதிவு செய்யக் கோருகிறது தூதரகம்

வடக்கு மாகாணத்திலிருந்து இந்தியா சென்று பட்ட மேற்படிப்புக்கள், கற்கை நெறிகளைப் பூர்த்திசெய்தவர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது யாழ். இந்தியத் துணைத்தூதரகம். இதுகுறித்து தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: வடமாகாணத்திலிருந்து சென்று இந்தியாவில் இந்திரவியல், கட்டடவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பாரம்பரிய கலைகள் உட்பட அனைத்து பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புகளை அல்லது...

வீதியிலுள்ள மரண கிடங்கு

யாழ்.நாவலர் வீதியில் புகையிரதக் கடவையின் அருகிலுள்ள பாரிய பள்ளத்துக்குள் நாளாந்தம் பெருமளவான வாகனங்கள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. புகையிரதப் பாதையின் கீழாக வாய்க்கால் அமைக்கும் பொருட்டு பாரிய பள்ளம் தோண்டப்பட்டது. புகையிரத பாதை அமைக்கப்பட்ட பின்னர், தோண்டப்பட்ட பள்ளம் முழுவதுமாக மூடப்படவில்லை. இதனால் வீதியின் அருகில் பாரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அதன் அருகில் செல்லும்...

பஸில் ராஜபக்ஷ வந்தடைந்தார்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ, சற்று நேரத்துக்கு முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை வரவேற்பதற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் விமான நிலையத்துக்கு செல்லும் வீதியில் இருமருங்குகளிலும் காத்திருக்கின்றனர்.

யாழில் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு

யாழ்.மாவட்ட செயலகத்தின் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புள்ளி விபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சந்திரசிங்க மற்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் ஆகியோர் இணைந்து புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகத்தினை திறந்து வைத்தனர். யாழ்.மாவட்ட செயலகத்தின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களப் பிரிவு இயங்கிய கட்டடத்திலேயே புள்ளி விபரத்...

சம்பந்தன், மாவை தலைமையில் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் திருமலையில்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்முறை தனது பிரதான மே தினக் கூட்டத்தை இணைந்த வடக்கு - கிழக்கின் தலைநகரமான திருகோணமலையில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. அதற்குரிய ஏற்பாடுகள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஆகியோர்...

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோருக்கு கொடுப்பனவு

வடமாகாணத்தில், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் திட்டம், வடமாகாண சுகாதார அமைச்சால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சு அலுவலக தகவல் தெரிவிக்கின்றது. முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களை இரு பிரிவுகளாக பிரித்து, கழுத்துக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3000 ரூபாயும், இடுப்புக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1500 ரூபாயும் வழங்கப்படவுள்ளது. கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும்...

மீள்குடியேற்றமும் இல்லை அபிவிருத்தியும் இல்லை – சிறிதரன்

போர் முடிவுக்கு வந்த பின்னரும் தமிழ் மக்களின் மீள்குடியேற்றங்கள் இதுவரை பூரணப்படுத்தப்படவில்லை. போரால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான அபிவிருத்திகளும் முழு அளவில் மக்களைச் சென்றடையவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டில் இயங்கும் புலம்பெயர் மக்களின் அமைப்பான அன்னை திரேசா நற்பணி மன்றம், யாழ்ப்பாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை...

நாடாளுமன்ற பாரம்பரியம் முறியடிப்பு

முழுமைபெறாத ஒழுங்கற்ற ஆடைகளில் நாடாளுமன்ற சபைக்குள் இரவொன்றைக் களிப்பதன் மூலம் நாடாளுமன்ற பாரம்பரியம் முறியடிக்கப்பட்டுள்ளது. இது, நாடாளுமன்ற வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட கறையாகும் என தேசிய தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியது.

அப்பம் சாப்பிட்டதும் இலஞ்சம் – மஹிந்த

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சு பதவியை கொடுத்தமை இலஞ்சம் என்றால், அப்பம் சாப்பிட்டதும் இலஞ்சமாகும் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நிலை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஹம்பேகமுவ விஹாரையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில்...

விபத்தில் இருவர் படுகாயம்

கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குறித்த விபத்து தொடர்பில் தெரிய வருவது, சீமெந்து ஏற்றிய நிலையில் வீதியில் தரித்து நின்றிருந்த பாரவூர்தி மீது பேருந்து மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பேருந்தின் சாரதியும், நடத்துநரும்...

நாடாளுமன்றம் 27 வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் எதிர்வரும் 27ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையடுத்தே நாடாளுமன்றம் 27ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை: – தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு!

விடுதலைப்புலிகளுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை என்று இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக இலங்கையின் முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான சுமந்திரன் கூறும்போது, எங்களுக்கு விடுதலைப்புலிகளுடனோ, அவர்களது கொள்கைகளுடனோ எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறோம். ஆனால்,...

தந்தை செல்வா நினைவுப் பேருரையை நிகழ்த்துகிறார் சந்திரிகா!

'யுத்தம் இல்லை என்பது சமாதானம் என்றாகி விடாது' என்ற தலைப்பில் கொழும்பு பம்பலப்பிட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை உரையாற்றுகிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளை வருடாந்தம் நடத்தும் தந்தை செல்வா நினைவுப் பேருரைத் தொடரில் இம்முறை அந்தப் பேருரையை மேற்படி தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிகழத்துகிறார்....

வலி வடக்கு வீதி புனரமைப்புக்கு 12 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் கீழுள்ள வீதிகளில் புனரமைப்புக்காக சபையில் இந்தாண்டு வரவு – செலவுத் திட்டத்தில் 12.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், எமது பிரதேச சபை வருமானம் குறைந்த பிரதேச சபையாக இருக்கின்றது. இருந்தும் வீதி புனரமைப்புக்காக...

எதிரணி எம்.பி.க்கள் விடியவிடிய ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவுக்கு அழைப்பதற்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைநடுவில் விடியவிடிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிலர், சபைக்குள்ளே தூங்கினர். அவர்களுக்கு உணவு விநியோகிப்பதற்காக நாடாளுமன்ற சிற்றுண்டிசாலை திறந்திருந்தது. நாடாளுமன்ற வைத்தியசேவையும் தயாராக இருந்தது. நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30க்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கோட்டா புதனன்றும் மஹிந்த வெள்ளியும் ஆஜர்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் புதனன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 24ஆம் திகதியும் ஆஜராகவுள்ளனர். கோட்டாபய ராபக்ஷவை புதனன்று ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தானாகவே ஆஜராகவிருக்கின்றார். ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்...

பத்தொன்பதாம் திருத்தச்சட்டம் தொடர்பான விவாதம் இன்று

பத்தொன்பதாம் திருத்தச்சட்டம் தொடர்பான விவாதம் இன்று (21) பாராளுமன்றில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்றும் நாளையும் (22) இவ்விவாதம் நடைபெறவுள்ளது. நேற்று (20) பாராளுமன்றில் நடைபெறவிருந்த விவாதம் கட்சித்தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பையடுத்து இன்றைக்கு பிற்போடப்பட்டது.
Loading posts...

All posts loaded

No more posts