- Tuesday
- May 12th, 2026
திருகோணமலை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றியீட்டி முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, ஐதேக - 83,638 வாக்குகள் 02 ஆசனம் தமிழரசுக் கட்சி - 45,894 வாக்குகள் 01 ஆசனம் ஐமசுகூ - 38,463 வாக்குகள் 01 ஆசனம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, தமிழரசுக் கட்சி - 207,577 வாக்குகள் 05 ஆசனம். ஈபிடிபி - 30,232 வாக்குகள் 01 ஆசனம். ஐதேக - 20,025 வாக்குகள் 01 ஆசனம்
இலங்கையின் வரலாற்றில் நீதியான மற்றும் அமைதியான தேர்தல் ஒன்று இம்முறை நடைபெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 1947ம் ஆண்டில் இருந்து இதுவரை இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் இன்று (நேற்று) இடம்பெற்ற தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற தேர்தல் மற்றும் அதற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தல்களை இன்றைய...
வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தேர்தல் தினமான இன்று (17) ஆம் திகதியும் தத்தம் தபால் நிலையங்களுக்கு சென்று தம்முடைய வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாமென தபால் மா அதிபர் டீ. எல். பீ. ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள சகல தபால் நிலையங்களும் வாக்காளர் அட்டைகளை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ளவதற்காக நேற்று (16) ஞாயிற்றுக்கிழமையும் மாலை...
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாளை மற்றும் நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படல் வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இன்று தேர்தல் தினத்தன்று அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
யாழில் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட இருந்த வீட்டு சமையல் உபகரண பொருட்கள் ஒரு தொகுதி மீட்கப்பட்டுள்ளன என தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டி, கும்பிளாவளை பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாக உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளன. குறித்த பொருட்கள் பெரியளவிலான 24 பெட்டிகளில் அடைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க என பதுக்கி...
வாக்களிப்பது மக்களின் உரிமை மற்றும் அவர்களுடைய பொறுப்பாகும். வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்காமல் வாக்களிப்பு நிலையத்துக்கு அச்சமின்றி சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சகல வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். போதை மற்றும் வன்முறைகள் இன்றி செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சட்டங்களை உருவாக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்கின்ற இந்த தேர்தலில் சட்டத்தை மீறுகின்ற சம்பவங்கள் இடம்பெறுமாயின், சட்டத்தை...
யாழ்ப்பாணத்திற்கும் அம்பாறைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது நேற்றிரவு இனம்தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் மேற்கொண்டனர். பலாலி வீதியில் திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் நேற்றிரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களே பேருந்து மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தாக்குதலுக்கு இலக்கான...
பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. வாக்காளர்கள் இன்று மாலை 04.00 மணி வரை தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொருட்டு வாக்களிக்க முடியும். உரிய நேரத்தில் சரியான ஆவணங்களுடன் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தருமாறு, தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இம்முறை தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 50 இலட்சத்து 44,490...
இந்தோனேஷியாவில் 54 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. பப்புவா மாகாணத்தின் வான்பகுதியில் சென்றபோது குறித்த விமானம் திடிரென காணாமல் போன நிலையில், இதனைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தன. இந்நிலையில், இந்த விமானம் இந்தோனேஷியாவின் பப்புவாவில் ஒக்டேப் என்ற மாவட்டத்தில் விபத்திற்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். யாழ். திருநெல்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் (வயது 32) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் மின்சார வேலை செய்துகொண்டிருந்துள்ளார். அந்த வேலையின் போது மின்சாரம் தாக்கி...
யாழ்.மார்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் அலுவலகம் மீது நேற்றிரவு 11.20 மணிக்கு இனந்தெரியாதோரால் பெற்றொல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவர்களுக்கான செயற்பாடுகளை கட்சி தொண்டர்கள் மேற்கொண்டு இருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. வேட்பாளரும், சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தாவின் அலுவலகம் மீதும் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலினால் எவருக்கும் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்பது...
இறுதிக்கட்ட நேரத்திலும், தேர்தல் வன்முறைகளுக்கு இடமே கொடுக்காத வகையில் பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு பிணை வழங்க முடியாது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார். 87 கிலோ கஞ்சா உடைமையில் வைத்திருந்தபோது கைது செய்யப்பட்ட ஒருவருக்கான பிணை கோரி விண்ணப்பிக்கப்பட்ட பிணை மனு வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறுதெரிவித்துள்ளார். தேர்தல் வன்முறைகளற்ற அல்லது தேர்தல் வன்முறைகள் குறைந்த மாவட்டங்களாக...
மீசாலை – புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 03.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது....
அமைதியான- நீதியான தேர்தலை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்களை துப்பாக்கியால் சுடும் அளவிற்கு, பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அமைதியாக தேர்தல் நடத்தப்படுவதனை தடுக்க முயற்சிக்கும் எந்தவொருவரையும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்விதமான அச்சமும் சந்தேகமும் இன்றி தைரியமாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கத் தேவையான...
நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் கட்டாயமாக தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தும் 'கபே' அமைப்பு தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு அதிகாலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. வாக்காளர்கள் தாம் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கும் அதேவேளை அக்கட்சியின் ஊடாகப் போட்டியிடும் ஊழலற்ற சிறந்த வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை...
எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு பேஸ்புக் மற்றும் மின்னஞ்சல் ஊடாக தேர்தல் பரப்புரைகளைத் தவிர்க்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். தேர்தலுக்கான பிரதான பரப்புரைகள் நிறைவடைந்துள்ள போதிலும், இணையத்தளம் ஊடான பரப்புரைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கையடக்கத் தொலைபேசியூடாக குறுந்தகவல் மூலம் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்...
ஐக்கிய தேசிய கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்று ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது இல்லத்தில் நேற்று பல்வேறு அமைப்புகளின் பிரதிநிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத்...
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. காலியில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது. அதில் மெத்திவ்ஸ் 64 ஓட்டங்களையும் சந்திமால் 59 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஸ்வின் 6 விக்கெட்களையும் மிஸ்ரா 2...
Loading posts...
All posts loaded
No more posts
