- Tuesday
- May 12th, 2026
தேர்தல் காலப்பகுதியில் பிரதேச செயலாளர் ஒருவர் உட்பட அரச அதிகாரிகள் சிலர் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டார்கள் என இருவேறு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட இணைப்பதிகாரி ரீ.கனகராஜ் தெரிவித்தார். சமுர்த்தி உத்தியோகத்தர்களை பிரசார நடவடிக்கைக்கு அனுப்பியமை தொடர்பில் மேற்படி பிரதேச செயலாளருக்கு எதிராக முறைப்பாடு கிடைக்கபெற்றிருப்பதாக கனகராஜ் கூறினார். அதேபோல்,...
தனக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணையின்படி நாடாளுமன்றம் சென்று அரசியலை தொடரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறும் என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பார் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும்,...
இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றமைக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் இடம்பெற்றுள்ள புதிய மாற்றம் குறித்தும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி குறித்தும் பான்கீமூன் பாராட்டுக்களையும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். தேர்தலை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு வழங்கிய...
புதிய பிரதமரின் தலைமையில் இலங்கைத் தமிழர்களின் நெடுங்காலப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நல்ல வாய்ப்பு உருவாகியிருப்பதாக தமிழக முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மீண்டும் பிரதமராக பதவியேற்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...
தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான தகைமை கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (19) குமார் சங்கக்காரவிடம் கையளித்தார். இதற்கான நிகழ்வு ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதேவேளை இன்றைய தினம ஆரம்பம் ஆகும் இந்திய இலங்கை போட்டியுடன் சங்கக்கார தனது டெஸ்ட்...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துவிட்ட மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றத்துக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இதுவே சரியான தருணம் என்று ஆஸ்திரேலியா எம்.பி. லீ ரியன்னோன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிட்டார். எப்படியும் பிரதராகிவிடுவோம்.. தம் மீதான போர்க்குற்றவிசாரணையில் இருந்து தப்பித்துவிடுவோம் என்று அவர் கனவு கண்டார். ஆனால் மகிந்த...
தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்ட இந்த கட்சியில் அவரது வழிகாட்டலிலும் விடுதலைப் புலிகளின் காலத்தின் நீட்சியாக என்னுடைய பயணத்தை எனது மக்களின் உரிமைக் காகவும் தன்னாட்சிக்காகவும் பாடுபட்டு தொடர்ந்தும் செயற்படுவேன் என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள சிவஞானம் சிறீதரன்...
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சார் பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் க.அருந்தவபாலனின் விருப்பு வாக்கில் மோசடி நடந்துள்ளதாக தென்மராட்சி மக்கள் சமூகம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் முறையீடு செய்துள்ளது. நேற்று இரவு 8.30 மணியளவில் தென்மராட்சி மக்கள் சமூகப் பிரதிநிதிகள் சுமார் முப் பத்தைந்து பேர் மாவை சேனாதிராஜாவைச் சந்தித்து...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14இல் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம் 91 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழர்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களும் உணரவேண்டும் என்ற அடிப்படையில் தான் குருநாகலில் களமிறங்குவதாக சிவாஜிலிங்கம் களமிறங்கினார். விடுதலைப் புலிகளின் தலைவரின் உறவினர் ஒருவர் குருநாகலில் தனக்கு எதிராக களமிறங்கியுள்ளதாகக் கூறி...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நிறைவடையும் வரையிலும் தேர்தலில் தொடர்பில் பல்வேறான சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம்பெற்றன. அவற்றில் சில... ரணிலுக்கு ஆகக்கூடிய விருப்பு வாக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க, நடந்து முடிந்த தேர்தலில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். அவர், 500,566 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 19 ஆம்திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன், ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு கந்தன் ஆலய வெளிவீதியைச் சுற்றி விளம்பரப் பலகைகள், அரசியல் பதாகைகள் என்பன காட்சிப்படுத்தத் தடை விதிக்கப்பட்டு சிவனையும் சக்தியையும் குறிக்கும் சிவப்பு வெள்ளை நிறத்துணிகள் கட்டப்பட்டுள்ளன. இம்முறை ஆலய சூழலில் நடைபாதை வியாபாரங்கள் முற்றாக...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை நடைபெற்றுமுடிந்த பொதுத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பு திருகோணமலையிலுள்ள...
இலங்கைத் தேர்தல் வரலாற்றில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அவருக்கு 5 இலட்சத்து 56 ஆயிரத்து 600 வாக்குகள் கிடைத்துள்ளன. இதேவேளை அதிக விருப்பு வாக்குகளைப் பெறவேண்டும் என்ற நோக்கில் அதிக வாக்காளர்கள் கொண்ட மாவட்டங்களில் ஒன்றான குருநாகலில்...
அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காமல் தேசிய அவை அமைக்கப்பட்டால், அந்த அவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடமையாற்றுமென இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். யாழ். மத்திய கல்லூரியில் விருப்பு வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்த பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின்...
கடந்த ஜனவரி மாதம் 08 திகதியின் புரட்சியை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்வதோடு நல்லாட்சி மற்றும் கொள்கைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இந்நாட்டின் பெரும்பான்மை மக்களின் அனுமதி கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். விசேட அறிக்கையில்...
யாழ்.தேர்தல் மாவட்டத்தின் வாக்கெண்ணும் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யப்போகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் வெளியாகியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 5 உறுப்பினர்கள் 1. சி.சிறீதரன் 2. மாவை.சேனாதிராசா 3. த. சித்தார்த்தன் 4. எம்.ஏ. சுமந்திரன் 5. ஈ.சரவணபவான் 5வது இடம் நீண்ட இழுபறியின் பின் சரவணபவானுக்கு வழங்கப்பட்டது...
பருத்திதுறையிலிருந்து நெல்லியடியூடாக யாழ்ப்பாணம் போகும் AB20 பிரதான வீதியில், இமயானனுக்கு அருகில், வல்லைவெளியை அணுகும் முடக்கில், மிகமிக அண்மையில், விடுதியுடன் கூடிய மதுபானசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கு அண்மைக்காலத்தில் பல மோட்டார் விபத்துக்களையும் உயிர் பலிகளையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சுழலில் மதுபானக்கடை திறந்த வைத்திருப்பது மனித உயிர்களுக்கு விடுக்கப்பட்ட சவால். போரபத்தை விலைக்கு...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை மிகவும் எளிமையான நிகழ்வு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 15ம் நாடாளுமன்றின் பிரதமராக பதவிப்...
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதுவித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளாத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை கேலி செய்யும், அக்கட்சியின் சின்னமான சைக்கிளை மரமொன்றில் தூக்கிலிட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிக போட்டியுள்ள கட்சியாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, எவ்வித ஆசனங்களையும்...
15ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் தோல்வியடைந்துள்ளதை ஏற்றுக் கொள்வதாக, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக, ஏ.எஃப்.பி செய்திச் சேவை தெரிவிக்கின்றது. இந்தத் தேர்தலில் ஐ.ம.சு.கூ அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது என்பதனாலேயே அவர் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. "பிரதமராக வருவது என்ற என்னுடைய...
Loading posts...
All posts loaded
No more posts
