Ad Widget

மக்கள் ஆணைப்படி அரசியலைத் தொடர்வாராம்!! நாடாளுமன்றுக்கு செல்லத் தயாராகிறாராம் மஹிந்த!!!

தனக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணையின்படி நாடாளுமன்றம் சென்று அரசியலை தொடரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

mahintha

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறும் என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பார் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும், தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் மஹிந்த குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து, நாடாளுமன்றம் சென்று அரசியலைத் தொடரவுள்ளதாக தேர்தலின் பின்னர் நேற்று விடுத்த விசேட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“2015 பொதுத் தேர்தல் முவுகளை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் எமது கூட்டமைப்புக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும், எமது கட்சிக்காகப் பாடுபட்டு உழைத்த கட்சி ஆதரவாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கிடைத்துள்ள மக்கள் ஆணையின்படி தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன். நாட்டின் ஜனநாயகம் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி நாட்டுக்கு மக்களுக்குச் செய்த சேவையைத் தொடர்ந்தும் செய்வேன்” – என்றுள்ளது.

Related Posts