Ad Widget

ரணிலின் விசேட அறிக்கை

கடந்த ஜனவரி மாதம் 08 திகதியின் புரட்சியை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்வதோடு நல்லாட்சி மற்றும் கொள்கைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இந்நாட்டின் பெரும்பான்மை மக்களின் அனுமதி கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருந்ததாவது,

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்துவதற்கு சமாதானமான சூழ்நிலையை இத் தேர்தலில் உருவாக்கி கொள்வதற்கு முடிந்துள்ளது. கொள்கையுடைய அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவதோடு அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க கூடிய புதிய நாடொன்றை உருவாக்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய யுகத்தில் சவால்களை எதிர்நோக்கி புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம். நல்லொழுக்கம் மிக்க நாடு ஒன்றை உருவாக்கும் இணக்கப்பாடுடைய அசராங்கத்திற்கு அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும்.

இதற்காக அனைத்து தரப்பினரையும் அழைக்கின்றோம் என ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

Related Posts