தேசிய அரசாங்கத்திற்கு த.தே.கூ பங்களிப்பு வழங்குமா?

அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காமல் தேசிய அவை அமைக்கப்பட்டால், அந்த அவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடமையாற்றுமென இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

யாழ். மத்திய கல்லூரியில் விருப்பு வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்த பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு குறித்து ஊடவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய அரசு அமைய வேண்டுமென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சரவையில் இணைய வேண்டுமென்ற கருத்து நிச்சயமற்றது.

அமைச்சுப் பொறுப்புக்களுக்கு அமைச்சரவையில் ஈடுபடாமல், தேசிய அவை அமைக்கப்படுமானால், அந்த அவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடமையாற்ற கூடியதாக இருக்கும், என்றார்.

Related Posts