- Thursday
- May 14th, 2026
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் மேற்கிந்திய தீவுகள் அணி 251 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 484 ஓட்டங்கள் பெற்று பலமான நிலையில் உள்ளது. துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி...
பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக தாயொருவருக்கும் மகனுக்கும் மரண தண்டனை விதித்து கண்டி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் கணவனின் தாய் ஆகிய இருவருக்குமே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு மாத்தளை, ரத்தொட்டை பிரதேசத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளால்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவிகளை பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கைகளுக்கு உட்படுத்திவந்ததாக குற்றம் சாட்டப்பட்டுவந்த இசைத்துறையின் தலைவர் விசாரணைக்காக தற்காலிக பணி இடைநிறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். குறித்த விரிவுரையாளர் மாணவிகளை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்துவதற்காக பரீட்சை முடிவுகளில் கைவைப்பதான தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இது குறித்து மாணவிகள் துணிந்து சாட்சியமளிக்க தயங்கிய நிலையில் அண்மையில் பாதிக்கப்பட்ட மாணவி...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆண்கள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் பெண் வீரர் ஒருவரும் கலந்து ஆடுகிறார். ஆஸ்திரேலியாவின் வடக்கு மாவட்டங்கள் கிளப் அணியும், போர்ட் அடிலெய்டு அணியும், இன்று தொடங்கும் இரு நாள் போட்டியில் விளையாடுகின்றன. இந்த போட்டித்தொடரில் வடக்கு மாவட்டங்களுக்கான அணிக்காக, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்- பேட்ஸ்மேன்...
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளிளிற்கு ஆதரவாகவும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இன்று ஏ9 வீதியில் உள்ள பழைய மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது. இன்று...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக போரட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி தொடர்ந்தும் 5 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாட்டின் பல பாகங்களிலும்...
யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்து பல்வேறு துன்ப சுமைகளோடு வாழ்ந்து வருகின்ற எமது மக்களுக்கு உதவிட முன்வருமாறு தமிழ் அரசியல் பிரமுகர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. வன்னி விழிப்புணர்வற்றோர் சங்க வெள்ளை பிரம்பு தின நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற போது நிகழ்வின் சிறப்பு...
நடக்க முடியாத எனது 13 வயது மகனை எங்கு சென்றாலும் தூக்கியபடி, பொருளாதார உதவிகளும் இன்றி கஷ்டப்படுகின்றேன். சிறையிலுள்ள எனது கணவரை விடுதலை செய்தால் நாங்கள் நிம்மதியாக வாழ்வோம் என மன்னாரைச் சேர்ந்த சந்திரயோதி இராஜலட்சுமி தெரிவித்தார். அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழ்.முனியப்பர் ஆலய முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை (16) நடைபெறும் அடையாள உண்ணாவிரதப்...
யாழ்.கல்வியங்காட்டுச் சந்தியில் புதன்கிழமை (14) இரவு தனிமையில் நின்றிருந்த முதியவரை, இனந்தெரியாத சிலர் கடத்திச் சென்று செம்மணிப் பகுதியில் வைத்து, அவர் அணிந்திருந்த நகைகள், அலைபேசி என்பவற்றைப் பறித்த பின்னர், அவர் அணிந்திருந்த வேட்டியையும் அவிழ்த்துச் சென்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கடத்திய போது, அவர் முகத்தில் இரசாயனப் பதார்த்தத்தை வீசியதால் அவர் நிலைதடுமாறிய நிலையில்...
ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனி மலைகள் இப்போது உருகிக் கொண்டிருக்கும் வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான். தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா துருவப் பகுதிகளில் உள்ள...
அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணம் முனியப்பர் கோவிலடியில் இன்று காலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் பெருமளவு அரசியல் கைதிகளின் குடும்பங்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களும் இப்போராட்டத்தில்...
"தவறு நடைபெறும் என எதிர்பார்த்து நிறைய பேர் வாளை தயாராக பிடித்து வைத்திருந்தனர்" என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி தெரிவித்தார். 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. டோணி பொறுப்பாக ஆடி 92 ரன்களுடன் கடைவரை களத்தில் நின்றதால் இந்தியா 247 ரன்களை எட்ட முடிந்தது....
கமல் ஹாஸனின் பல பிரச்சினைகளை நான்தான் முன் நின்று தீர்த்து வைத்திருக்கிறேன். அவர் நன்றி இல்லாதவர் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு, என்றார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார். நடிகர் சங்க விவகாரத்தில் விஷால் அணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை மூத்த நடிகரான கமல் ஹாஸன் எடுத்திருப்பது குறித்து சரத்குமார் கூறுகையில், "விஸ்வரூபம்', ‘உத்தம வில்லன்' ஆகிய...
பல்வேறு தகவல்கள் அடங்கிய வண்ணங்கள் நிறைந்த புகைப்படங்கள் உலா வரும் பேஸ்புக்கில் பார்வையிழந்தோரும் இதில் உள்ள படங்களைப் பற்றி அறியும் விதமாக பிரத்யேக டூலை வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் தளத்தில் பார்வையிழந்த என்ஜீனியராக முதன்முதலாக பணிபுரியத் தொடங்கியுள்ள, மேட் கிங், இந்தப் புதிய யோசனையை வழங்கியுள்ளார். நண்பர்கள், குடும்பத்தினர் என தனக்கு விருப்பமான விஷயங்களை...
அஜித், சுருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சிறுத்தை சிவா அனிருத் இசையமைத்து உள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். ஏற்கனவே படத்தின் முதல் கட்ட பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு விட்டன. தற்போது இரண்டாம் கட்ட பணிகளை விரைவில் முடிக்கவிருக்கிறார்கள். சமீபத்தில் தான்...
மனவளர்ச்சி குன்றிய தனது இரண்டு வயது மகன், பல்வேறு வகையான உயரங்களில் அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை, தந்தையொருவர் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இவ்வாறு படங்களில் காட்சியளிக்கும் குழந்தைக்கு பறக்கும் சக்தியுண்டு என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எலன் லோரன்ஸ் என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ....
வல்வெட்டித்துறைப் பகுதியில் குடும்ப பெண்ணைக் கடத்திய குற்றச்சாட்டில் அவரது கணவன் உட்பட 9 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் தாயாருடன் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இடம்பெற்ற தாபரிப்பு, தொடர்பான விசாரணைக்கு தாயாருடன் வந்து கொண்டிருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குடும்ப பெண் ஒருவரை, வல்வெட்டித்துறைப் பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த கும்பல்...
யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டு கருணா நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கருணாவிற்கு தெரிந்தே ரவிராஜ் கொலை மேற்கொள்ளப்பட்டது என புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் துறைத்தலைவர் ஒருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். பாலியல் சார் குற்றச்சாட்டுத் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை கட்டாய விடுமுறையில் அனுப்பட்டிருந்த அவரை நேற்று முன்தினம் கூடிய பேரவை சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையும் நடத்தப்படவுள்ளது. குறித்த துறைத்தலைவருக்கு எதிராக நிர்வாகத்திடம் பல்கலைக்கழக மாணவிகளால் பாலியல் குற்றச்சாட்டுக்கள்...
"அரசு தம்மை விடுதலை செய்யும் என்ற நம்பிக்கையில்", உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். உண்ணாவிரதமிருப்பவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அரசுதான் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை...
Loading posts...
All posts loaded
No more posts
