Ad Widget

தமிழரசு கட்சியின் அநீதியும் அனந்தி சசிதரனின் நேர்மையும்!

தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க மறுத்த தமிழரசுக் கட்சியின் அநீதிக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மற்ற தமிழ்க் கட்சிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதனாலேயே, தான் சுயேச்சையாக போட்டியிடவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழரசு கட்சி வாய்ப்பளிக்காமல் தனக்கு அநீதி இழைத்துவிட்டதாகவும், ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில்...

இசையமைப்பாளர் எம்.எஸ்.வி காலமானார்

பழம்பெரும் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார். உடல் நலக் குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், அதிகாலை 4.15- அளவில் இவ் உலகை விட்டு நீங்கினார். அவருக்கு வயது 84. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 1,200 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ராமமூர்த்தியுடன் சேர்ந்து 700 படங்களுக்கும், தனியாக 500...
Ad Widget

யாழில் இன்று 11 கட்சிகளும், 9 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனு தாக்கல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றும் பல முக்கிய கட்சிகள் தாக்கல் செய்துள்ளன. குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி விக்னேஷ்வரராஜாவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதம வேட்பாளராக அங்கஜன் ராமநாதனும், மக்கள் விடுதலை முன்னணி கட்சி சார்பில் சந்திரசேகரனும்,...

மாணவர்கள் குழுவொன்று சுயேட்சையாக போட்டி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக மாணவர்களை உள்ளடக்கிய சுயேட்சைக் குழவொன்று யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது. சுந்தரலிங்கம் சிவதர்ஷன், ஜெயரத்தினம் யதீசன், மங்களேஸ்வரன் கஜன், சுந்தரலிங்கம் சுதர்சன், இராசகுமார் கிரிஷாந், பந்துசேனா அருண்ராஜ், பரம்சோதிநாதர் பிரேந்திரா, சிவலிங்கம் லவகீசன், தங்கவேல் கிரிவேந்தன்...

வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை; கொழும்பு நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவு

வித்தியாவின் வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் இன்று நாடாளுமன்றத் தேர்தல்களின் வேட்பு மனுத் தாக்கல் செய்வதன் இறுதிநாள் என்றமையால் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் பகுதிகளுக்கு அதிகளவான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே சந்தேக நபர்களை...

வேட்புமனு வழங்கியமை தொடர்பில் ஜனாதிபதி விசேட உரை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி உட்பட பல்வேறு விமர்சனங்களுக்குள்ளான பலருக்கு வேட்மனு வழங்கவேண்டியேற்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றை இன்று ஆற்றவுள்ளார்.

போதைப்பொருள் பாவிக்கும் மாணவர்களை சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படையுங்கள் யாழ். பிராந்தியப் பணிப்பாளர் தெரிவிப்பு

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவது தெரியவந்தால் அவர்களை கடுமையாக தண்டிக்காது சுகாதார வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்தால் அவர்கள் மாணவர்களை சரியான முறையில் கையாள்வார்கள் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இ.தேவநேசன் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் எதிர்ப்பு மாதத்தினை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்திற்கான தடை நீடிப்பு

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிவதற்கான தடை உத்தரவை செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.

ஜனநாயகப் போராளிகள் அமைப்பு வேட்புமனு தாக்கல்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலைமையிலான ஜனநாயகப் போராளிகள் அமைப்பு, யாழ் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சுயேட்சைக் குழுவாக இன்று திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது. நடேசப்பிள்ளை வித்தியாதரன் தலைமையில். கணேசலிங்கம் சந்திரலிங்கம், இராசையா தர்மகுலசிங்கம், சிவநாதன் நவீந்திரா,...

வித்தியா கொலை வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொடூரமாக சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இன்றைய வழக்கு விசாரணையின் போது சுவிஸ் ஆசாமி பொலிஸ்பிடியிலிருந்து தப்பித்து எப்படி வெள்ளவத்தை சென்றார் என்பது தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இன்னொருவன், சம்பவதினம் தான் கொழும்பில் இருந்ததாக கூறிய விடயம் தொடர்பான விசாரணை...

இம்முறை கொழும்பில் போட்டியிடுகிறார் ஆனந்தசங்கரி!

கொழும்பு மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வி.ஆனந்தசங்கரி தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி களமிறங்கவுள்ளது. இன்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுகின்றது. அதற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிடுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி...

போதைப் பாவனையை ஒழிக்காவிட்டால் அது எமது சந்ததிக்கு செய்யும் துரோகம் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

எமது சமூகத்தில் பரவியுள்ள போதைப் பொருள் பாவனையை நாங்கள் இல்லாது செய்யாவிட்டால், அது எமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்த துரோகமாக அமைந்து விடும். இவ்வாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள தேசிய புகைத்தல் ஒழிப்பு மாதத்தையொட்டி யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கலந்தரையாடலில் கலந்து கொண்டு கருத்து...

தமிழர் தேசத்தில் போதைப்பொருள்களால் சத்தம் இன்றிய யுத்தம்; ஒழுக்கவியல் விரிவுரையாளர் ரவிராஜ்

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களை விடவும் தற்போது மதுப் பாவனை அதிகரித்துள்ளதாக புனித சவேராயர் குருத்துவ கல்லூரியின் ஒழுக்கவியல் விரிவுரையாளர் ரவிராஜ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள தேசிய புகைத்தல் ஒழிப்பு மாதத்தையொட்டி யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கலந்தரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 2002ஆம் ஆண்டு யாழில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவது குறித்து இன்னமும் முடிவில்லை!

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எதனையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அக்கட்சியின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கை முழுமையாக அப்படியே வருமாறு: வரும் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி போட்டியிடப் போகிறதா? இல்லையா? எனும் முடிவு எடுக்கப்படாத நிலை தொடர்ந்து இருக்கும் இந்தச்...

திருமண நிகழ்வில் வாழ்வாதார உதவி வழங்கிய தம்பதியினர்

திருமணம் என்பது பெரும் பணச்செலவில் ஆடம்பரமாக இடம்பெறுவது மாத்திரமே என்பதற்கு அப்பால் நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதை வவுனியாவில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தம்பதியினர் செய்து காட்டியுள்ளனர். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மதிசூதனன் இரமீலா ஆகியோரின் திருமணத்தின்போதே இந் நிகழ்வு இடம்பெற்றது. திருமணங்களை பெரும் பண...

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு: சட்டத்தரணி தவராசா விலகினார்?

புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்ட மாணவி வித்தியாவின் வழக்கில் பிரபல சட்டத்தரணி கே.வி.தவராசா இனி முன்னிலையாக மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதியும் வியாபாரியுமான ஒருவர் வித்தியாவின் மரணத்தையும் வேறு சிலருடன் சேர்ந்த வியாபாரமாக்கி விசமத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இவர்கள் வித்தியாவின் தாய்க்கும் சகோதரனுக்கும் கொடுத்து வந்த...

வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று நன்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. அதனைத தொடர்ந்து ஒன்றரை மணி நேரத்திற்கு அதாவது 12.00 மணி தொடக்கம் 1.30 மணிவரை ஆட்சேபனை தெரிவிப்பதற்கான நேரம் வழங்கப்படவுள்ளது. இன்று பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள்...

யாழில் போதை ஒழிப்பு நிகழ்வு

ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு மாதத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு நேற்று(12) இடம்பெற்றது. 'சுய கண்ணால் போதையற்ற உலகை காண்போம்' எனும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. போதைப்பொருளிற்கு எதிராண சத்தியபிரமாணம் அரச அதிகாரிகளினால் எடுக்கப்பட்டதுடன் விசேடமாகாண இம்மாதத்தில்...

இனப்படுகொலை விவகாரம் – முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா அழுத்தம்!

இனப்படுகொலை விடயத்தில் மென்மைப்போக்கை கடைப்பிடித்து வடக்கு மாகாண மக்களின் நல்லிணக்கம் தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லுமாறு, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. வட மாகாண முதலமைச்சர், அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்குமான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவர் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிசெயலாளர் நிசா பிஸ்வாலை...

அதிகார மோகம் பிடித்த மஹிந்தவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பவே புதிய கூட்டணி உதயம்! – ரணில் சூளுரை

"அதிகார மோகம் பிடித்து அலைந்து திரியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பவே நாங்கள் புதிய கூட்டணியை அமைக்கத் தீர்மானித்துள்ளோம். அந்தக் கூட்டணியில் வேட்பு மனுக்களை நாம் கையளிப்போம். இனி புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்போம். தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கப்படும் புதிய அரசில் 5 விடயங்களை அடிப்படையாகக்கொண்டே வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்."...
Loading posts...

All posts loaded

No more posts