Ad Widget

சுட மறுத்த சிறுவனை 450 அடி பள்ளத்தில் தள்ளி கொலை செய்த காடையர் குழு

குவாண்டமாலா என்னும் நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில், அங்கேல் என்னும் 12 வயதுச் சிறுவன் தாய் தந்தையோடு வசித்து வந்தான்.

அவனது தந்தையார் பஸ் ஓட்டுனர். சிறுவன் பாடசாலைக்கு நடந்து சென்று பின்னர் வீடு திரும்புவது வழக்கம். சில தினங்களுக்கு முன்னர் அவன் வீடு திரும்பிக்கொண்டு இருந்தவேளை, காட்டுப் பாலம் ஒன்றில் வைத்து ஒரு காடையர் குழு அவனை வழிமறித்துள்ளார்கள்.

குறித்த சிறுவனிடம் துப்பாக்கியை கொடுத்து அங்கே வந்து கொண்டு இருக்கும் பஸ்சை சுடச் சொல்லி இருக்கிறார்கள். அதுவும் பஸ்சை ஓட்டி வரும் சாரதியை பார்த்து சுடச் சொல்லி கூறியுள்ளார்கள்.

சுடவில்லை என்றால் , நீ சாகவேண்டும் என்றும். சாவு 2 வழிகளில் வரும் என்றும் கூறியுள்ளார்கள். ஆனால் பஸ்சை ஓட்டி வருவது தனது தந்தை என்பதனை கண்டுகொண்ட அச்சிறுவன். இறுதிவரை சுட மறுத்தான்.

இதனால் அந்த காடையர் குழு அவனை 450 அடி பள்ளத்தில் தள்ளி கொலை செய்தார்கள். இதனை அறிந்த அவனது தந்தை குறித்த பள்ளத் தாக்கில் தன்னந்தனியாக 3 நாட்கள் தேடிப் பார்த்தார். இறுதியாக தனது பிள்ளை ஒரு மரத்தின் கீழ் எழுந்து நடக்க முடியாமல் 3 நாட்களாக படுத்து இருப்பதை அவர் கண்டார். உடனே சென்று அவனைக் கட்டி அணைத்தார்.

உடனே பொலிசாருக்கு தெரிவித்து , அம்பூலன்ஸை வரவளைத்து அவனை மருத்துவமனைக்கு கொண்டுசென்றார்.

ஆனால் அங்கே அவன் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டான். உலகில் உள்ள பல ஊடகங்களில் இச்செய்தி வெளியாகி பெரும் அனுதாப அலைகளை தோற்றுவித்துள்ளது.

12 வயதே ஆகும் அங்கோல் என்னும் இச்சிறுவனை அனைவரும் நிஜமான ஹீரோ என்று பாராட்டியுள்ளாதோடு , ஆத்மசாந்திக்கு பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Related Posts