Ad Widget

சட்டரீதியாகத் தண்டனை வழங்கும் கிளிநொச்சி நீதிமன்றின் தீர்ப்பில் தலையீடு செய்ய முடியாது!

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானமாகிய கசிப்பு மற்றும் கோடா காய்ச்சியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு ஒன்றில், கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட சிறைத் தண்டனையையும், அதே எதிரிக்கு அங்கு பிணை மனு மறுக்கப்பட்டதையும், மீளாய்வு செய்து அந்தத் தீர்ப்புக்களை ரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரி யாழ்ப்பணம் மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மீதான வழக்கிலேயே...

பெண்களுக்கு எதிராக வன்முறை: நீதி கோரி ஆர்ப்பாட்டம்

நாடளாவிய ரீதியிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு நீதிக்கோரி யாழ். பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். வேம்படி சந்தியில் தற்போது கூடியுள்ள குறித்த பெண்கள் அமைப்பினர் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள்...
Ad Widget

புதிய மீள்குடியேற்றப் பகுதிகளிலும் வாக்குச்சாவடி அமைக்க பரிசீலனை

உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து புதிதாக மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் வாக்குச் சாவடிகளை அமைப்பது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பிரதி தேர்தல்கள் ஆணையாளருமான நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் வாக்குச் சாவடிகளை அமைக்குமாறு...

மின்சார சபையின் புதிய கட்டடம் யாழ்ப்பாணத்தில் திறப்பு

இலங்கை மின்சார சபையின் வடக்கு மாகாண பதில் பொதுமுகாமையாளர் அலுவலகத்துக்கான புதிய ஐந்து மாடிக் கட்டடம் நேற்று திங்கள்கிழமை பகல் மின்சக்தி எரிபொருள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரண்வக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி சந்தியில் இருந்து பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலய மாணவர்களின் கீழைத்தேய வாத்திய நடனக் குழுவினரின் அணிவகுப்பு மரியாதையுடன் எரிபொருள் மின்சக்தி அமைச்சர்...

 மாணவிகள் மூவரைக் காணவில்லை என முறைப்பாடு

கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவிகள் மூவரை காணவில்லை என திங்கட்கிழமை (06) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சியில் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் சாதாரண தர மாணவிகள் மூவரும் திங்கட்கிழமை (06) மாலை வீட்டிலிருந்து வெளியில் சென்று பின்னர் வீடு திரும்பவில்லை என்று அவர்களுடைய பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு...

அதிபர் இடமாற்றத்தை கண்டித்து வல்வை சிதம்பரா கல்லூரி மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு

வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரி அதிபரின் இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள், நேற்று திங்கட்கிழமை (06) வகுப்பு புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை (06) காலை பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள், பாடசாலை கதவினை மூடி பதாகைகளினை ஏந்தியவாறு, அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த மாணவர்கள், தமிழ்த் தேசியக்...

கூட்டமைப்பை பேரம் பேசும் சக்தியாக மாற்றுங்கள் – மாவை

மேலும் எட்டு வருடங்கள் ஆட்சியிலிருக்க கனவு கண்ட மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பியது போன்று, எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அதிக வாக்குகளை வழங்கி நமது கட்சியை பேரம் பேசும் சக்தியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கைதடி, நவபுரம் சனசமூக நிலையத்தின்...

56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து ஆபாசப்படம் எடுத்தவருக்கு வலைவீச்சு!

முல்லைத்தீவின் துணுக்காயில் 56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன், ஆபாசப்படங்கள் எடுத்த ஒருவர் தொடர்பாகத் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். பெண்களை துஷ்பிரயோகம் செய்த குறித்த நபர் அரசியல் கட்சி...

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயன்றாராம்! முன்னாள் உறுப்பினர் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் உறுப்பினர் ஒருவரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெல்லிப்பழையை சேர்ந்த சக்திவேல் ராஜ்குமாரன் (வயது -41) என்பவரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர். 119 இலக்கத்துக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விடுக்கப்பட்ட கட்டளையைத் தொடர்ந்தே...

வாக்களிக்க அடையாள அட்டை இல்லாதோர் விண்ணப்பிக்கவும்

தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை அவசியமாதலால் அடையாள அட்டை இல்லாதோர் பிரதேச செயலாளர் அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிடைக்கும் விண்ணப்பங்களை ஓகஸ்ட் 01 ஆம் திகதியளவில் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்க பிரதேச செயலாளர் அலுவலகங்கள் செயற்பட வேண்டுமென திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத்குமார தெரிவித்தார்....

இராமேஸ்வரம் – தலைமன்னார் ரயில் இணைப்பு குறித்து பேச்சு

இராமேஸ்வரம் - தலைமன்னாருக்கு இடையில் ரயில் பாதை நிர்மாணிப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்திடம் தான் முன்மொழிந்துள்ளதாக பாதை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஏற்றுமதி மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இந்திய பிரதமர் மோடியை சந்தித்து இது தொடர்பில் தான் கலந்து பேசியதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தலைமன்னர் மற்றும் தனுஷ்கோடிக்கு இடையிலான சிறுதூர...

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுக்கு நாம் காரணமில்லை – சம்பிக்க

சுன்னாகம் நிலத்தடி நீர், கழிவு எண்ணெய் கலந்ததால் மாசடையவில்லை. விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் கிருமிநாசினி கலப்பினாலேயே நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது என ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. அதனால் இந்த நிலத்தடி நீர் மாசுக்கு நாம் காரணமில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் வடமாகாண பிரதி பொது முகாமையாளர்...

அச்சுவேலி யுவதியை காணவில்லை

அச்சுவேலி இடைக்காடு பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக யுவதியின் பெற்றோர், ஞாயிற்றுக்கிழமை (05) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார், திங்கட்கிழமை (06) தெரிவித்தனர். சனிக்கிழமை(04) மாலை வீட்டில் உள்ள அனைவரும் அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த போது வீட்டிலிருந்த யுவதி காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை...

யாழ். மாவட்டத்தின் முதலாவது வேட்பு மனு தாக்கல்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான யாழ். மாவட்டத்தின் முதலாவது வேட்பு மனு, யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை(06) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென்னிலங்கை கட்சியான ஜனசக்தி பெரமுன கட்சியே திங்கட்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்தது.

முன்னாள் போராளிகளையும் கூட்டமைப்பு உள்வாங்கவேண்டும்!

முன்னாள் போராளிகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்வாங்க வேண்டுமென்பது தான் எமது கோரிக்கை. அவர்களில் பலர் பல வருட அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.முன்னாள் போராளிகளை, இலங்கை அரசாங்கம் தேசிய அரசியல் நீரோட்டத்தில் பங்குபற்றலாமென்று அனுமதி கொடுக்கும் பட்சத்தில் மேற்குலக நாடுகள் எம்மவர்கள் மேல் போட்டிருக்கும் தடைகள் நிரந்தரமாக எடுக்கப்படுமென்பதையும் நாம் முழுமையாக நம்புகின்றோம். இவ்வாறு...

அனந்தி மின்னல் நிகழ்சியில் பங்கேற்பதை தடுக்க மாவையும் இந்தியாவும் முயற்சி!

நேற்று (5) வடமாகாணசபை உறுப்பினரான அனந்தி எழிழன் அவர்கள் சக்தி தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியான மின்னல் நிகழ்சியில் பங்கேற்பதை தடுக்க மாவையும் இந்தியாவும் முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக அனந்தி எழிழன் அவர்கள் தனக்கு பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைபின் சார்பில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அது குறித்து தமிழரசுக்கட்சி மௌனம் சாதித்திருந்ததன் பின்னணியில்...

சனத் ஜயசூரிய இராஜினாமா

உள்ளூராட்சிமன்ற மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதுடன் அடுத்த தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

வேட்புமனுத் தாக்கல் இன்று காலை ஆரம்பம்! – பேரணிகளுக்குத் தடை

ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் ஆரம்பமாகிறது. இதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரையில் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இதனையொட்டி இன்று முதல் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி, ஊர்வலங்கள் கட்அவுட்கள் போஸ்டர்களை...

இளம் ஜோடி தற்கொலைக்கு முயற்சி

உரும்பிராய் பகுதியில் இளம் ஜோடி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராய் கிழக்கு ஊரெழு பகுதியினை சேர்ந்த யுவதியும், மல்லாகம் பகுதியினை சேர்ந்த இளைஞனும் ஐந்து வருடம் காதலித்துள்ளனர். இந்நிலையில், குறித்த யுவதிக்கு தெரியாமல், யுவதியின் வீட்டார் வெளிநாட்டு இளைஞனுக்கு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதனால் மனவிரக்தி அடைந்த யுவதி, காதலன் பணிபுரியும் இடத்திற்கு...

கரும்புலிகளுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி!

தமிழீழ விடுதலைப்புலிகளின் உயிர் ஆயுதங்கள் என்று போற்றப்படும் கரும்புலிகளின் நினைவு தினம் நேற்றாகும். கரும்புலி மாவீரர்களைப் போற்றி வணங்கும் இந்நாளில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கரும்புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி யாழ். பல்கலைக்களகத்திலும் கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts