Ad Widget

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஸகீர்கான்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸகீர்கான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

zaheer-kaan

இந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அவர் வெளியிட்டார்.

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

“என்னுடன் விளையாடிய அனைத்து சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

2011-ம் ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது மறக்க முடியாத அனுபவம். கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் மட்டுமே எனது வாழ்க்கையாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

37 வயதாகும், ஸகீர்கான் இதுவரை 92 டெஸ்டுகள், 200 ஒருநாள் போட்டிகள், 17 T20 போட்டிகளில் இந்தியாவுக்காக பங்கேற்று விளையாடியுள்ளார்.

2000-ம் ஆண்டு டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஸகீர்கான் டெஸ்ட்டில் 311 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டியில் 282 விக்கெட்டுகளையும் 20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Related Posts