- Saturday
- May 16th, 2026
ரயில்களில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 5000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்படுவதோடு, கட்டணம் இரு மடங்காக வசூலிக்கப்படும் எனவும், போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை தற்போது ரயிலில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக வடக்கு, கிழக்கு காணமால் போனவர்களின் உறவழனர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்றய தினம் முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல்...
சவுதி அரேபியாவில் திருமணத்துக்கு வெளியில் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் தொடர்பான வழக்கு விசாரணையை மீண்டும் நடத்துவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் இணங்கியுள்ளதாக இலங்கை கூறியுள்ளது. அந்தப் பெண்ணை கற்களால் அடித்துக்கொல்ல வேண்டும் என்று நான்கு மாதங்களுக்கு முன்னர் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அவர் மீதான வழக்கு விசாரணை மீண்டும் நடக்கவுள்ளதாக இலங்கையின்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கை மூன்று பிரதிவாதிகள் இல்லாது விசாரணை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அரச தரப்பு வழக்கறிஞர் வழங்கிய தகவல்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பிரணாந்து இந்த அனுமதியை வழங்கியுள்ளார். நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் அறுவருக்கு...
கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக சென்னை நகரின் பல பகுதிகளில் மழை பெய்யாத நிலையில், நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பப் போராடிவருகிறது. டிசம்பர் 2ஆம் தேதியன்று சென்னையைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தின் காரணமாக, தற்போதும் அடையாறு, கூவம் ஆறுகளை ஒட்டியுள்ள பகுதிகளும் தாம்பரம், முடிச்சூர், வடசென்னையின் பல பகுதிகளும் இன்னமும் பாதிப்பிலிருந்து மீளாமலேயே காட்சியளிக்கின்றன. பல பகுதிகளில்...
மழை காரணமாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சிங்கம் – 3’ படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. ‘சிங்கம் – 2’ படத்தில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்தார். இதில் கல்லூரி மாணவியாக ஹன்சிகா நடித்தார். சிங்கம் – 3’ படத்திலும் சூர்யா ஜோடியாக அனுஷ்கா தான் நடிக்கிறார். இதில் அனுஷ்கா சூர்யாவின் மனைவியாக நடிக்க...
யாழில் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் முன்பாக தாங்கள் சாட்சியமளிக்க மாட்டோம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண குடும்ப உறவுகள் தெரிவித்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த காணாமற்போனோரின் உறவினர்கள், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08)...
யாழ்ப்பாண சிறைச்சாலையில் உள்ள அரசியல்கைதியான சிவராஜா ஜெனீவன் நேற்று மாலையில் இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டுபயங்கரவாததடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இவருடைய வழக்கு 2009 ஆம் ஆண்டில் இருந்து பொலநறுவை மற்றும் யாழ்ப்பாண மேல் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகின்றது. மகசின் சிறைச்சாலையில் இருந்து வரும்...
இளைஞர்கள் பொறுப்பில்லாதவர்கள் என்று இனி யாரும் கூற முடியாது, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்க முடியும். மாணவர்கள் நினைத்தால் முடியாதது ஏதும் இல்லை, என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர் சிங்கப்பூர் நாட்டின் நேஷனல் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள். ஒரு ஆண்டாக இவர்கள் பணியாற்றி வந்த திட்டம் வெற்றி பெற்றிருப்பதோடு அனைவரையும் திரும்பி பார்க்கவும்...
சென்னையில் கொட்டித் தீர்த்த பெரு மழையால் சில சிறப்பான மனிதர்களின் மரணச் செய்திகளும் கூட மழையோடு மழையாக அடங்கிப் போனது பெரும் சோகம்தான். தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக வெளிவர முக்கிய பங்காற்றியவர் ஸ்ரீநிவாஸ். தமிழில் பல்வேறு மென்பொருட்களை அறிமுகம் செய்தவர். ஆன்மிக இதழாக வெளிவந்த "தெய்வ முரசு" மாத இதழின் பதிப்பாளராக இருந்த...
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மற்றைய பகுதிகளில் இன்று மதியம் 2 மணிக்கு பிறகு இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் நிலையில், இதன் பயனை வடக்கு மக்களும் அனுபவிக்கக் கூடிய ஏற்பாடுகள் அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிதி அமைச்சருக்கு அறிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட ஏனைய...
யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலை மாணவர்கள் கூப்பன் அடிப்படையிலான சீருடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வர்த்தக நிலையங்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அபி றேடர்ஸ் - இல-112,கே.கே.எஸ்.வீதி .யாழ்ப்பாணம். சிறி கணேஷ் புடவையகம் - இல-20 ,நவீன சந்தை, யாழ்ப்பாணம் ஆறுமுகம் ரெக்ஸ்ரைல்ஸ் - இல-20,பெரிய கடை.யாழ்ப்பாணம். சென்னை பசன் வேல்ட் - இல-63 ,பெரிய...
தமிழக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு இதுவரை அயல் நாடுகளிடம் இந்தியா உதவி கோரவில்லையென யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட மாகாண சபை உதவ முன்வந்தபோது, அதனை இந்தியா நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதன் உண்மைத் தன்மை குறித்து இந்திய துணைத்...
அரச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் இதுவரையில் பாடநூல்களை பெற்றுக் கொள்ளாத பாடசாலை மாணவர்கள் பாடநூல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். பொருத்தமான மொழியை தெரிவு செய்து பின்பு தரத்தை தெரிவு செய்து குறித்த பாடநூல்களை பெறமுடியும். http://www.edupub.gov.lk/BooksDownload.php
'யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்யும் போது ஏற்படும் வெள்ளப் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் வகையில் நீண்டகால பயனுடைய அனர்த்த தவிர்ப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், எதிர்வரும் 14 நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படும்' என யாழ்.மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம், 13 ஆயிரத்து 487 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல், படையினர் வசமுள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உள்ள நிலங்களில், காணி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பொதுக்காணிகளாக, 12 ஆயிரத்து 785 ஏக்கர் காணிகளும், உறுதிக்காணிகளாக 702 ஏக்கர் காணிகளும் படையினர் வசமுள்ளதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. அத்தோடு, 1983ஆம் ஆண்டு...
வடக்கில் மீள்குடியேற்றத்துக்காக அதிகாரிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் காடழிப்பதற்கு கடந்த ஆட்சியின்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தலைமையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். இது பற்றி ஆராய்வதற்காக இன்னும் ஒரு வாரகாலத்துக்குள் வடக்குக்கு அதிகாரிகள் மட்டத்திலான குழுவொன்று அனுப்பிவைக்கப்படும் என்றும், அவர்களின் அறிக்கை கிடைத்த பின்னர் மீள்குடியேற்றம் தொடர்பில் நடடிவக்கை எடுக்கப்படும்...
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை அடியோடு அழிக்கும்வரை ஓயமாட்டோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா சூளுரைத்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்ட ரிஸ்வான் ஃபரூக்கும், அவரது பாகிஸ்தான் மனைவி தஷ்ஃபீன் மாலிக்கும் இரவு விருந்து நிகழ்ச்சியொன்றில் கடந்த வாரம் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை பயங்கரவாதச் சம்பவமாக...
பொலித்தீன் பாவனையை குறைப்பது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலித்தீன் பாவனை தொடர்பில் இதற்கு முன்னரும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனினும் அது உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் எனவே அதனை அமுலாக்க ஜனவரி முதலாம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார். பொலித்தீனால் ஏற்படும் சுற்றுச்...
Loading posts...
All posts loaded
No more posts
