3 சந்தேகநபர்கள் இன்றி ரவிராஜ் வழக்கு விசாரணை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கை மூன்று பிரதிவாதிகள் இல்லாது விசாரணை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அரச தரப்பு வழக்கறிஞர் வழங்கிய தகவல்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பிரணாந்து இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் அறுவருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் குறித்த வழக்குடன் தொடர்புடைய மூவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி இந்த வழக்கு ஜனவரி 4ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related Posts