- Saturday
- May 16th, 2026
குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்று அங்கு நிர்க்கதியான சில இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதன்படி 83 பேர் நேற்று காலை 06.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் மட்டக்களப்பு, அனுராதபுரம், கண்டி, மாத்தளை, குருநாகல் மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும்...
மாகாண முதலமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான விஷேட சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்கிய முறை தொடர்பில் மாகாண முதமைச்சர்கள் தமது எதிர்ப்பை வௌியிட்டுள்ளனர். இதன்படி கடந்த திங்கள்கிழமை இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் மாகாண...
குடும்ப சமாதானத்தை மேம்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் CCH நிறுவனமானது KNH இன் அனுசரணையுடன் பெண்கள் வன் முறைக்கெதிரான ஊர்வலத்தினை 09.12.2015 இன்று மேற்கொண்டனர். நவம்பர் 25 ஆம் திகதிதொடக்கம் டிசெம்பர் 10 திகதி வரையான காலப்பகுதியினை ORANGE THE WORLD பெண்கள் வன்முறைக்கெதிரான வாரமாக ஐக்கிய நாடுகளினால் பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றது. இன்று நடைபெற்ற ஊர்வலமானது ORANGE...
நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது பட்ஜெட்டிலேயே வங்கித் துறை பாதாளத்தை நோக்கிச் செல்வதாகக் கூறி இன்று மதியம் 12.30 மணிக்கு இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். ஏராளமான வங்கி ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். “அரச ஊழியர்களின் ஓய்வூதியக் கத்தரிப்பை நிறுத்து”, “EPF- ETF நிதிகள் ஆபத்தில் –...
சீனாவை சேர்ந்த ஹூனான் பலகலைக்கழக அறிவியல் அகாடமி, பனி சிறுத்தை சரணாலயம் ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின அந்த ஆய்வில் அந்த ஆய்வில் பூமி வெப்பமடைவதால் எவரெஸ்ட் பனி மலை உருகிவருகிறது இத்னால் கடலின் நீர்மட்டம் அதிகரிக்குமென அஞ்சுன்றனர். கடல்மட்டம் அதிகரிப்பதால் நியூயார்க், லண்டன், மும்பை போன்ற உலகின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும்...
யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் வியாபார நிலையம் ஒன்றிற்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண்ணை அப்பகுதி இளைஞர்கள் மீட்டுள்ளனர். குறித்த வியாபார நிலையத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றியதுடன் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி சந்திப் பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பெண்ணெருவர் நீண்ட காலமாக...
அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர். குறித்த சம்பவம் இன்று காலை பரமேஸ்வரா சந்தி பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, புன்னாலைக்கட்டுவான் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த அரச மற்றும் தனியார் பேருந்துகளில் அரச பேருந்து பரமேஸ்வரா சந்தி பேருந்து தரிப்பிடத்தை முதலில் வந்து...
முல்லைத்தீவு,ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு செல்லும் வீதி கடந்த 30 வருடங்களுக்காக புனரமைக்கப்படாதுள்ளதால் அவ்வீதி வழியே பயணிக்கம் பொது மக்கள் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர். 1960ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் இப்பகுதியில் மக்கள் குடியேறிய இந்த பகுதியில் இதுவரை...
எனது மகள் இருக்கின்றார் என்பதை ஆதாரத்துடன் காண்பித்தும் எனது மகளை இந்த நல்லாட்சி அரசாங்கம் மீட்டுத்தரவில்லை என காணாமற்போன பாடசாலை மாணவியொருவரின் தாயார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரத்தில் எனது மகள் இருக்கும் படம் உள்ளது. அந்த துண்டுப்பிரசுரத்துடன்,பலத்தரப்பிடம்...
கிழக்கு கடற்கரைப் பகுதியில் மிதப்பதாக கூறப்பட்ட சடலங்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி கடற்படையினர் இந்த தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். நேற்றையதினம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கைகளை நூறு வீதம் பூர்த்தி செய்ய முடியாமல் போனதாக கடற்படை ஊடகப் பேச்சாளர்...
மணற்காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய விவகாரத்தில் தொடர்புடைய தென்பகுதி நடிகை உள்ளிட்ட மூவரையும் உடன் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த சம்பவத்தில் தொடர்புடையவர்களென சந்தேகிக்கும் சிங்கள நடிகையொருவர், சட்டத்தரணியொருவர் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகிய மூவரையுமே இவ்வாறு கைது செய்யுமாறு நீதிபதி மா.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். மனற்காட்டுப்பகுதியில் விடுதலைப்பபுலிகளால்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கடந்த காலத்தில் கொண்டிருந்த கொள்கையிலிருந்து தற்போது விலகியுள்ளமையினால் பொதுமக்கள் தமது பிரச்சினைகள் மீது அதீத அக்கறை கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தலைமையேற்குமாறு கோருகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை வமமாகாண முதலமைச்சரிடம் வழங்குமாறு...
வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கம் காரணமாக இன்றும் நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக, மேல், வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய ஆகிய மாகாணங்களின் சில பிரதேசங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடி மின்னல்...
சென்னையில் பெய்த கன மழைக்கும் எல் நினோவுக்கும் சம்பந்தமில்லை என்பது மாதிரியான செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், நேரடியாக எல் நினோ தாக்கம் இல்லாவிட்டாலும் தமிழகத்தின் வானிலையில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தை எல் நினோவின் பாதிப்பு மேலும் அதிகரித்துவிட்டதாக நாஸா தெரிவித்துள்ளது. பசிபிக் கடலில், குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பிலும் அதன் மேல் பகுதியில்...
புதிய அரசியலமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த அரசியல் அமைப்பில், ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களைக் குறைத்தல், தேர்தல் முறைமை மாற்றம், தேசிய இனப் பிரச்சினைக்கானத் தீர்வு அடங்களாக அனைத்து விடயங்களும் உள்ளடங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும்...
சமுதாயத்தை நிர்மூலமாக்கி இளைய தலைமுறையின் சுதந்திர தாகத்தை அடக்க முயற்சி! – முதலமைச்சர் விக்னேஸ்வரன்
எமது சமுதாயத்தை நிர்மூலமாக்கினால் தான் எமது இளைய தலைமுறையினருக்கு சுதந்திர எண்ணம் எழாது தடுக்கலாம் என்ற நப்பாசையே சிலரிடம் இருக்கிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தால் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வு யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து...
பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, விசாரணைக்கு தேவைப்படாத பொருட்களை அவரிடம் மீளக் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி உள்ளிட்ட 9 சந்தேக நபர்கள் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற நீதவான் அருனி ஆட்டிகல முன்னிலையில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது...
கிளிநொச்சியில் தொடர்ந்து பெய்யும் அடையால் அங்கு மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு, வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன், சிவபுரம், ஆனந்தபுரம், கனகாம்பிகைகுளம், இரத்தினபுரம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழையினால் நேற்று இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உயர்வான இடங்களிலுள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்கள் கடும் சிரமத்திற்க உள்ளாகியுள்ளதாக அங்கிருந்து...
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பரீட்சை மண்டபங்களிலும் இருள் சூழ்ந்த நிலைமை காணப்படுவதனால் மாணவர்கள் மேலும் சிரமங்களை எதிர்நோக்கினர். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கல்விப் பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கு 3261 பாடசாலை பரீட்சார்த்திகளும், 2286 தனிப்பட்ட...
உடல்நலக் குறைவுக்காக சிங்கப்பூருக்குச் சிகிச்சைக்குச் சென்ற மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை விரைவில் நாடு திரும்பவுள்ளார் என மன்னார் ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென சுகவீனமுற்ற மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...
Loading posts...
All posts loaded
No more posts
