Ad Widget

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் : இன்றும் கனமழைக்கு வாய்ப்பு!

வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கம் காரணமாக இன்றும் நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக, மேல், வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய ஆகிய மாகாணங்களின் சில பிரதேசங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடி மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு நகரில் நேற்று பெய்த கடும் மழைக்காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதன்காரணமாக கொழும்பு நகரின் பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நுகேகொடை – மஹரகம பகுதிகளுக்கிடையில் மண் சரிவு ஏற்பட்டதன் காரணமாக நுகேகொடை வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த களனிவெளி தொடரூந்து மார்க்கத்தின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

Related Posts