- Saturday
- May 16th, 2026
கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் (HNDA) தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். கிருலப்பணை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே, பொலிஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அபராதம் செலுத்துமாறு பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் 20க்கு இருபது போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று டியூநிடினில் (Dunedin) ஆரம்பமானது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து, முதலாவது...
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தங்கமகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையைமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியானது. தனுஷ்-அனிருத் கூட்டணியில் வெளியான மெலோடி பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இது படம் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இப்படத்தின்...
2002-ம் ஆண்டு போதையில் காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்துள்ளது மும்பை உயர்நீதிமன்றம். முன்னதாக, நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க நேற்று மதியம் சுமார் 1.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்த சல்மான், பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்தார். நீதிபதி ஏ.ஆர்.ஜோஷி, ‘சல்மான்...
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தார். ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்ற இப்படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. மோகன் ராஜா இப்படத்தை இயக்கியிருந்தார். தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியை மிரட்டிய அரவிந்த் சாமி தற்போது மீண்டும் புதிய படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக...
தமிழ் நாடு காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்களும் நேற்று முன்தினம் இரவு பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்களிடமிருந்து 1 படகு கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்.கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு - மெகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி ஒருவர் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யாழ். அச்சுவேலி வடக்கை சேர்ந்த இவர் கடந்த 8ஆம் திகதியில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவரது தந்தை ஜ.பி.சி செய்திக்கு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 37 வயதான சிவராஜா...
தமிழ் மக்களின் மனித உரிமையை ஐ.நா உறுதிப்படுத்த வேண்டும், வடபகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவம் வெளியேறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஏந்திய வடமாகாண சபை உறுப்பினர்கள், இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10)...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா இன்று வியாழக்கிழமை (10) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட அவர், சங்கிலியன் பூங்காவையும் அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியையும் பார்வையிட்டார். இன்று மற்றும் நாளை வெள்ளிக்கிழமை (11) ஆகிய இரண்டு நாட்கள் வடபகுதியில் தங்கியிருக்கும் அவர், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்கின்றார்.
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் வேண்டும். அது சர்வதேச விசாரணையா?, உள்ளக விசாரணையா?, கலப்பு நீதிமன்ற விசாரணையா? என்பது தொடர்பில் தேவையற்ற விவாதங்களையும், கால இழுத்தடிப்புக்களையும் நாம் விரும்பவில்லை. விசாரணைப் பொறிமுறையானது, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கின்ற விதமாகவும் அமைய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர்...
தமிழ்நாட்டின் சென்னை மற்றும் கடலூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு, அதன் தொடர்ச்சியாக வரக்கூடிய நோய்களில் இருந்து பாதுகாக்கும் முகமாக இலங்கையில் இருந்து ஒரு வைத்தியர் குழு யாழ்ப்பாணம் றோட்டறிக்கழக ஏற்பாட்டில் தமிழ்நாடு செல்லவுள்ளது. வரும் ஞாயிறு 13ஆம் திகதி பின்னிரவு இலங்கையில் இருந்து புறப்படும் இந்தக் குழு திங்கள் 14ஆம் திகதி முதல் சென்னை...
வடக்கு புகையிரதபாதை அமைப்பில் குறைபாடுகள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கான கொடுப்பனவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சு பாரிய கடன் சுமைகளைக் கொண்டிருப்பதாகவும் அவற்றை எவ்வாறு செலுத்த போகின்றோம் என்ற சவால்களுடன் பயணத்தை ஆரம்பித்ததாகவும் அமைச்சர் சபையில் குறிப்பிட்டார். நேற்று புதன்கிழமை பாராளுமன்றில் கடற்றொழில் நீர்வளத்துறை...
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10ம் திகதியை சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 2015ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமானது ‘எங்கள் உரிமையே எங்கள் சுதந்திரம்’ என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகிறது. 1945ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டு, பெப்ரவரி...
அண்மையில் சென்னையிலும் தமிழகத்தின் வேறு பல பகுதிகளிலும் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் பல வடமராட்சி கரையோரங்களில் கரையொதுங்கி வருகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள், மரக்கதவுகள், மற்றும் இலகுவாக மிதக்கக்கூடிய பொருட்களே இவ்வாறு அதிகளவில் கரையொதுங்குகின்றன. இதனால் வடடமராட்சியின் கரையோரங்களில் அதிகளவு குப்பைகள் தேங்கியுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, குறித்த மாவட்டத்துக்கான போக்குவரத்துகள் சீர்குலைந்துள்ளன. கிளிநொச்சி மேற்குக்கான போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள், கோணாவிலின் தாமரைக்குளம், அக்கராயன்குளம், அக்கராயன் பாலங்குளம், வன்னேரிக்குளம் ஆகிய குளங்களிலிருந்து பாய்கின்ற வான் வெள்ளங்களைக் கடந்தே முழங்காவில் வரை பயணிக்க வேண்டியுள்ளன. பல்லவராயன்கட்டுச் சந்தியிலிருந்து வேரவில் செல்லும் பஸ்களும் மழைவெள்ளம் வீதிக்கு குறுக்காக...
"விடுதலைப்புலிகளின் காலம்வரை பாதுகாப்பாக இருந்த வடபகுதி கடல் வளம் இன்று அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது'' என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன், இதை இராணுவம் பார்த்துக்கொண்டிருக்கப்போகின்றதா என்றும் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே...
எல்லை நிர்ணயம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்தில் தொகுதிவாரி முறையில் நடத்துவதில் சிக்கல் உள்ளமையால் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்தது. அதேவேளை, எல்லை நிர்ணயங்கள் தொடர்பில் 700 இற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எல்லை நிர்ணயம்...
"தொழிலுக்காக கடன் எடுத்து அதை மீளச் செலுத்தமுடியாமல் தவிக்கும் வடக்கு மீனவர்களின் கடன்களை இரத்துச் செய்யவேண்டும்'' என்று அரசிடம் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பியான மாவை சேனாதிராஜா. "இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் நினைத்தால் இந்திய மீனவர்களின் அத்துமீறலை நிறுத்தலாம். இதற்கான வலியுறுத்தலை இலங்கை அரசு செய்யவேண்டும். இந்த விடயம் தொடர்பாக...
இலஞ்ச, ஊழலுக்கு எதிரான நிகழ்வுகளை கடந்த அரசு நடத்தத் தவறியுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச இலஞ்ச, ஊழல் எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு கொழுப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த அரசு (மஹிந்த அரசு) ஊழலுடன் செயற்பட்டமையினாலேயே இவ்வாறான நிகழ்வுகளை கடந்த காலங்களில் ஏற்பாடு செய்ய...
சிங்கப்பூரில் இருந்து சிகிச்சை முடிந்து நேற்று பிற்பகல் மன்னாருக்கு வந்தார் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப்புக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று புதன்கிழமை காலை அவர் பண்டாரநாயக்க விமான வந்தடைந்தார். அங்கிருந்து...
Loading posts...
All posts loaded
No more posts
