இலங்கை முதல் இன்னிங்ஸில் 294 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரட்ன 84 ஓட்டங்களையும் சந்திமால் 83 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் நியூஸிலாந்து அணி 141 ஒட்டங்களுக்கு 1...

200 பேரின் சாட்சியங்கள் பதிவு; இன்று இரண்டாம் நாள் விசாரணைகள் ஆரம்பம்

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் 200பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 14வது அமர்வு நேற்று நடைபெற்றது. அதேவேளை அதன் 2ம் நாள் அமர்வு இன்றைய தினம் மீண்டும் இடம்பெறவுள்ளது. நேற்றைய அமர்வில் நல்லூர்...
Ad Widget

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: மோதுகிறது இந்தியா-பாகிஸ்தான்

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் மார்ச் 19-ம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது. அரையிறுதி ஆட்டங்கள் மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் தில்லி மற்றும் மும்பை நகரங்களில் நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் ஏப்ரல் 3-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. டி20 உலகக்...

விஜய், ஜெயம் ரவி வரிசையில் சிவகார்த்திகேயன்

இயக்குனர் மோகன்ராஜா இதுவரை இயக்கியுள்ள 7 படங்களில் 6 படங்களில் அவரது தம்பியான ஜெயம் ரவி தான் நடித்துள்ளார். மீதியுள்ள ஒரேயொரு படமான வேலாயுதத்தில் விஜய் நடித்திருந்தார். இவர் இயக்கிய படங்களில் கடைசியாக வெளிவந்த ‘தனி ஒருவன்’ படம் மட்டும்தான் நேரடி தமிழ் படமாக இருந்தது. மற்ற படங்கள் அனைத்தும் தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்டவை....

அஜித், விஜய்க்கு இடம் இல்லை

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவை சேர்ந்த 100 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் பிரபலங்களின் வருமானம் மற்றும் அவர்கள் எவ்வளவு பிரபலமாக உள்ளனர் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஷாருக்கான் முதல் இடத்தை பிடித்து உள்ளார். கடந்த...

சர்வதேச மனித உரிமைகள் தினநிகழ்வு

வவுனியாவில் சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஆற்றிய உரையும் படங்களும்

உயர்தரம் படித்த அனைவரும் இனி வைத்தியராவதற்கு படிக்கலாம்!

உயர் தரத்தில் விஞ்ஞானம் தவிர்ந்த ஏனைய துறையில் கல்வி கற்றவர்களையும் மருத்துவ துறைக்குள் உள்ளீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த இதனை நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் முன்வைத்த வாய் மூல கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது வரைக்காலமும்,...

சி.வி.விக்னேஸ்வரன்,விஜயகலா ,அங்கஜன் ஆகியோர் இணைத்தலைவர்களாக நியமனம்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் இணைத்தலைவர்களாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகிய மூவருமே இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடமாகாண முதலமைச்சர்...

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டவர் இந்தியாவில் உயிருடன் இருக்கின்றார்

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சென்னை டாக்ஸி சாரதி இந்தியாவில் உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பூமிதுரை எனப்படும் டாக்ஸி சாரதியின் சடலம் அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சடலத்துடன் காணப்பட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், 41 வயதான குறித்த சாரதி உயிருடன் இருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....

ஆணழன் போட்டி : வடக்கிலிருந்து 12 வீரர்கள் பங்கேற்பு

2015ஆம் ஆண்­டுக்­கான ஆண­ழ­க­ருக்­கான போட்டி எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு ஆனந்த கல்லூரி குலரத்ன மண்டபத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. தொடர்ந்து 68ஆவது தட­வை­யாக நடை­பெ­ற­வுள்ள ஆண­ழகர் போட்­டி­க­ளுக்கு இம்­முறை மொத்தம் 140 வீரர்கள் பங்­கு­­பற்­ற­கின்­றார்கள். வடக்­கி­லி­ருந்து 12 வீரர்கள் பங்­கு­பற்­ற­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மிஸ்டர் ஸ்ரீலங்கா என்ற பெயரில் நடத்­தப்­படும் ஆண­ழ­க­ருக்­கான போட்­டிகள் குறித்து உத்­தி­யோ­ கப்­பூர்­வ­மாக அறி­விக்கும் நிகழ்வு...

தடுப்­பூசி ஏற்­று­வ­தற்கு பிர­பா­கரன் இரண்டு தினங்கள் ஒதுக்­கி­யி­ருந்தார்

முப்­பது வரு­ட­கால யுத்தக் காலத்­திலும் வட பகு­தியில் தடுப்­பூசி ஏற்­று­வ­தற்­காக பிர­பா­கரன் இரண்டு தினங்கள் அனு­மதி வழங்­கி­யி­ருந்தார். இதனால் இன்று வடக்கில் தடுப்­பூசி வழங்­கு­வது நூற்­றுக்கு நூறு­வீதம் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தென சுகா­தார அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். அரச வைத்­தி­ய­சா­லை­களில் இரத்தப் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வ­தற்கு அனைத்து நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. எனவே தனியார் துறை­யினர் ஊடு­ருவ...

மழையுடனான காலநிலை இம் மாதம் முழுவதும் நீடிக்கும்

கடந்த சில நாட்களாக நாட்டில் பெய்துவரும் அதிக மழையுடனான காலநிலை இம்மாதம் முழுவதும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எல் நினோ நிலைமை காரணமாக ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிக மழை வீழ்ச்சி ஏற்படும் என முன்னர் எதிர்வுகூறப்பட்டிருந்த்தாக திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஆர். ஜயசேகர குறிப்பிட்டார். இம்மாத நடுப்பகுதியிலிருந்து மழை வீழ்ச்சி...

யாழில் காணாமல் போனோர் ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதியின் ஆணைக்குழு விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இன்றைய தினம் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் இருந்து கிடைக்கப்பெற்ற 235 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் யாழ்.மாவட்ட செயலகத்தில் 8.30 மணியளவில் ஆரம்பமாகி 5.30 மணி வரை இடம்பெறவுள்ளது. மேலும் யாழ்.மாவட்டத்தின் 9 பிரதேச செயலாளர் பிரிவில் இருந்தும் காணாமல்...

புதிய அரசாங்கமும் வடமாகாண சபையை புறந்தள்ளுகின்றது – முதலமைச்சர் சி.வி

நல்லாட்சி அரசாங்கம் எனக்கூறும் புதிய அரசாங்கமும் வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்து ஒத்துழைத்து செயற்படாமல், முன்னைய அரசாங்கம் போன்று தனித்து முடிவெடுத்து வடமாகாணத்தில் செயற்றிட்டங்களை செய்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடிகயில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது. இதன்போது, வடமாகாண...

தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வை கட்டாயமாக்கச் சட்டம்

தனியார்துறை ஊழியர்களுக்கு, சம்பள உயர்வைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டுவரவுள்ளதாக தொழில் உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, நேற்று வியாழக்கிழமை(10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு- செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போது கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இதற்கான சட்டமூலம், ஏற்கெனவே வரையப்பட்டுள்ளது என்றும் கூறினார். தனியார்துறை ஊழியருக்கான சம்பளத்தை 2,500 ரூபாயினால் உயர்த்துமாறு அரசாங்கம் கேட்டதற்கு,...

ஜனவரியில் ஒரு பகுதி காணிகளை பலாலியில் விடுவிக்கத் தீர்மானம்! – பிரதமர்

யாழ்ப்பாணம் பலாலியில் இராணுவத்தின் வசமுள்ள ஒரு தொகைக் காணிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். 'சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுவோம்' என்ற தொனிப்பொருளில் நேற்று வியாழக்கிழமை மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும்...

வடக்கில் இனந்தெரியாத புலனாய்வுப் பிரிவினர்! மக்களின் உளநலம் பாதிப்பு என்கிறது கூட்டமைப்பு

"வடக்கில் அடையாளம் காணமுடியாத புலனாய்வுப் பிரிவினர்களால் மக்களின் உளநலம் பாதிக்கப்படுகின்றது'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார். "முள்ளிவாய்க்காலில் கொலைகளைக் கண்டு சடலங்கள் மீதேறி தப்பித்த தமிழ் மக்கள் இன்று உளநல பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே, வடபகுதிக்குத் தேவையான உளநல வைத்தியர்களை அரசு பெற்றுக்கொடுக்கவேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்....

தாமதமின்றி தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவிப்பது அரசின் தலையாய கடமை!

"சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் தாமதமின்றி உடனே விடுவிப்பது அரசின் தலையாய கடமையாகும். அவ்வாறு விடுவித்தால்தான் எமது நாட்டில் எமது ஆட்சியாளர்களிடையே மனித உரிமையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கம் உண்டென்று உணரக் கூடியதாக இருக்கும்." - இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் அமர்வு, சர்வதேச மனித...

பட்ஜெட் தொடர்பில் ஜனாதிபதி – முதலமைச்சர்கள் பேச்சு! விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சின் செயலாளர் மற்றும் 7 மாகாணங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்றிருந்தனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சமித் தசநாயக்க ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை....

யாழில் சர்வமத தலைவர்கள் கையெழுத்து வேட்டை

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வலியுறுத்தியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சர்வமத குழுவினர் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்துடன், கையெழுத்துப் பெரும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, யாழ். நகரப்பகுதியில் சர்வமத தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதேவேளை, யாழ். நகரப் பகுதியில் உள்ள ஜும்மா...
Loading posts...

All posts loaded

No more posts