Ad Widget

200 பேரின் சாட்சியங்கள் பதிவு; இன்று இரண்டாம் நாள் விசாரணைகள் ஆரம்பம்

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் 200பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 14வது அமர்வு நேற்று நடைபெற்றது.

அதேவேளை அதன் 2ம் நாள் அமர்வு இன்றைய தினம் மீண்டும் இடம்பெறவுள்ளது.

நேற்றைய அமர்வில் நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணாமல் போனோரின் உறவினர்கள் 235 பேரிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அதில் 165 பேர் வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது

அதேவேளை, புதிய முறைப்பாடுகள் 44 பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் அதில் 35 முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டுள்ளனன.

ஏனையோர் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள அமர்விற்கு வருகை தந்தால், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

அத்துடன், காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளன.

அதேவேளை, இந்த விசேட ஆணைக்குழு தற்போது யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஏனைய பிரசேதங்களிலும், அந்த ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொள்ளும் என்றும் அந்த விசாரணைகள் உண்மையானதாகவும், நீதியானதுமாக இருக்குமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை இரண்டாவது நாளாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணாமல் போனோரின் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts